பாதாம் சாப்பிட்டால் சிறுநீரக கற்கள் உண்டாகலாம்: இந்த தப்பை மட்டும் செஞ்சிடாதீங்க
Side Effects of Almonds: பாதாம் ஆரோக்கியத்தின் ஒரு களஞ்சியமாக பார்க்கபப்டுகின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.
Side Effects of Almonds: உலர் பழங்களில் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான பல வித ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. நம் உடலுக்கு இன்றியமையாத பல வித ஊட்டச்சத்துகளை இவை நமக்கு அளிக்கின்றன. இவற்றில் பாதாமும் ஒன்று. பாதாம் பலருக்கு பிடித்தமான ஒரு பருப்பு வகையாக உள்ளது.
பாதாம் ஆரோக்கியத்தின் ஒரு களஞ்சியமாக பார்க்கபப்டுகின்றது. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் ஈ, புரதச்சத்து, நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன. இவை உடலுக்கு தேவையான பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றன. இதயத்தை வலுப்படுத்துவது முதல் இரத்த அழுத்தத்தைக் குறைப்பது மற்றும் புற்றுநோய் அபாயம் வரை அனைத்தும் இதில் அடங்கும்.
பக்க விளைவுகள்
இருப்பினும், பாதாம் பருப்பை அதிகமாக உட்கொள்வது சிறுநீரக கற்கள் உட்பட இன்னும் சில பக்கவிளைவுகளையும் பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பாதாம் பருப்புகளை உட்கொள்ளும் போது சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது மிக அவசியமாகும். குறிப்பாக சிறுநீரக பிரச்சினைகள் அல்லது சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.
பாதாம் சிறுநீரக கற்களை எவ்வாறு உண்டாக்குகிறது?
பாதாமில் உள்ள ஆக்சலேட்டுகள் கால்சியத்துடன் இணைந்து சிறுநீரகக் கற்களை உருவாக்கும். இவற்றை அதிக அளவில் உட்கொண்டால், சிறுநீரகக் கற்களாகத் தோன்றத் தொடங்கும். குறிப்பாக ஹைபராக்ஸலூரியா பிரச்சனை உள்ளவர்களுக்கு, அதாவது சிறுநீரில் அதிகப்படியான ஆக்சலேட்டுகள் உள்ளவர்களுக்கு இது மிகவும் ஆபத்தானது.
பாதாம் எவ்வளவு சாப்பிட வேண்டும்?
பெரியவர்கள் தினமும் 20-23 பாதாம் சாப்பிடுவது பாதுகாப்பானது என்று நிபுணர்கள் நம்புகின்றனர். இருப்பினும், சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இதை உட்கொள்ளும் முன் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.
இந்த உணவுகளும் சிறுநீரக கற்களையும் உண்டாக்குகின்றன
- சோயா பொருட்கள்
- சாக்லேட்
- ஓட்ஸ் மற்றும் ஓட்ஸ் பிரான்
- ராஜ்மா
- நேவி பீன்ஸ் மற்றும் ஃபாவா பீன்ஸ்
- பீட்ஸ்
- சில கீரை வகைகள்
- கேல் கிரை
- தக்காளி
சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைப்பதற்கான வழிகள்
சிறுநீரக கற்கள் அபாயத்தைக் குறைக்க ஒரு நாளைக்கு குறைந்தது 2.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பது அவசியமாகும். மேலும் குறைந்த உப்பு கொண்ட உணவை உட்கொள்ள வேண்டும். சீரான உணவு மற்றும் சரியான அளவு தண்ணீர் உட்கொள்ளும் பழக்கம் கொண்டவர்கள் பாதாமை உட்கொள்வதால் பெரும்பாலும் எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை. ஆனால் அதிக அளவில் அதை சாப்பிட வேண்டாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | உடலில் இந்த 5 இடங்களில் வலி வந்தால் மாரடைப்பு வர வாய்ப்பு - உஷார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.. முகநூல் - @ZEETamilNews ட்விட்டர் - @ZeeTamilNews டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!! Android Link: https://bit.ly/3AIMb22 Apple Link: https://apple.co/3yEataJ