கொரோனா பரவலில் (Corona Virus), அதிகரித்து வரும்  R factor கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது என மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு எச்சரித்துள்ளது. ஆர் காரணி என்பது,  ஒரு நபர் எத்தனை பேருக்கு தொற்றை பரப்புகிறார் என்பதன் விகிதமாகும்.  ஆர் காரணியின் மதிப்பு 1 க்கு மேல் இருந்தால், ஒரு பாதிக்கப்பட்ட நபர் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தொற்றுநோயை பரப்புகிறார் என்று அர்த்தம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"1.0 க்கு மேலான அளவில் ஆர் காரணி அதிகரிப்பது கோவிட் -19 இன் பரவல் அதிகமாக உள்ளது என்பதற்கான ஆபத்தான அறிகுறியாகும். ஆகையால், நெரிசலான எல்லா இடங்களிலும் கோவிட் 19 தொற்று பரவல் தடுப்பு நடத்தையை உறுதி செய்வதில் மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டியது அவசியம் என மத்திய அரடு  கடிதம் எழுதியுள்ளது.


தற்போதைய ஆர் காரணி எந்த அளவில் உள்ளது?


கேரளா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் அதிகரித்த ஆர் காரணி  மிகவும் அதிகமாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. சென்னையில் உள்ள கணித அறிவியல் நிறுவனம் இந்த ஆர் காரணி குறித்து ஒரு ஆய்வைக் கொண்டு வந்துள்ளது, கேரளா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம், திரிபுரா ஆகியவை இந்த காரணி அதிகரித்து வருவதை இந்த நிறுவனம் கண்டறிந்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம்  கூறியுள்ளது.


ALSO READ | இந்தியாவின் முதல் COVID-19 நோயாளிக்கு மீண்டும் கொரோனா தொற்று


இரண்டாவது அலையின் உச்சத்தின் போது ஆர் காரணி என்ன?


 மார்ச் 9 முதல் ஏப்ரல் 21 வரை ஆர்-மதிப்பு (R-value) 1.37 ஆக இருந்தது, ஏப்ரல் 24 முதல் மே 1 வரை, இது 1.18 ஆகவும், பின்னர் ஏப்ரல் 29 முதல் மே 7 வரை 1.10 ஆகவும் இருந்தது என கணித அறிவியல்  நிறுவனம், தெரிவித்துள்ளது


R-value மற்றும் வைரஸின் பரவல்


இரண்டாவது அலை தீவிரமடைந்ததும் அதனை கட்டுப்படுத்த கடுமையான லாக்டவுன் கட்டுப்பாடுகள் இந்த மதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றன. மக்கள் வெளியே செல்லவில்லை என்றால், பாதிக்கப்பட்ட நபர் தொற்று நோயை (Corona Virus) பரப்ப முடியாது. ஆகையால், R-value குறைவாக இருந்தது. இந்தியாவில் ஜூன் இறுதியில், ஆர் காரணி 0.88 ஆகவும், மே மாதத்தின் நடுவில் 0.78 ஆகவும் இருந்தது.


சில  மாநிலங்களில் அதிகரிக்கும் ஆர்-மதிப்புகள்


கேரளாவின் ஆர் மதிப்பு 1.10 ஆகும். மணிப்பூரில் ஆர்-மதிப்பு 1.07, மேகாலயா 0.92, திரிபுரா 1.15, மிசோரம் 0.86 மீ அருணாச்சல பிரதேசம் 1.14, சிக்கிம் 0.88, மற்றும் அசாம் 0.86 என்ற அளவில் R-value உள்ளது.


ALSO READ | Corona Nasal Vaccine: மூக்கின் வழியாக செலுத்தப்படும் தடுப்பூசி, ஒரு மைல்கல்லாக இருக்குமா..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR