ரத்த உறைவை தடுக்கும் செர்ரி பழத்தின் ஆரோக்கிய நன்மைகள்
ரத்தம் உறைவால் ஏற்படும் மாரடைப்பு உள்ளிட்ட இதய பிரச்சனைகளுக்கு அது சார்ந்த உணவை எடுத்துக் கொள்ளும்போது தீர்வு கிடைக்கும். செர்ரி பழம் ரத்தக்குழாய்களில் ரத்த உறைவை தடுக்கும் என்பதால் இதனை சாப்பிடலாம்.
ஆரோக்கியத்துக்கு வலு சேர்க்கும் செர்ரி பழத்தில் போரான், இரும்பு, கால்சியம், மக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்னன. நரம்புக் கோளாறுகள், மன அழுத்தம், தூக்கமின்மை போன்ற பிரச்சனைகளை எதிர்க்கொள்பவர்கள் அடிக்கடி செர்ரி பழம் எடுத்துக்கொள்வது நல்லது. தினமும் செர்ரி பழங்களை சாப்பிடுவதால் நமது நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை எடுத்து வந்தால் உடலின் ரத்தத்தில் இருக்கும் செல்களை புத்துணர்ச்சி பெற செய்து, தோளில் பளபளப்பு தன்மை கொடுத்து, சுருக்கங்கள் ஏற்படாமல் தடுக்கும். தினமும் சிறிது செர்ரி பழங்களை சாப்பிட்டு வருவதால் புற்று நோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் என மருத்துவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | அதிகம் தண்ணீர் குடித்தால் ஆயுள் அதிகரிக்குமா..! மருத்துவர்கள் சொல்வது இதுதான்..!
செர்ரி பழச் சாறு உடற்பயிற்சியின் போது ஏற்படும் தசை சேதத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது. செர்ரி பழத்தில் நிறைந்திருக்கும் வைட்டமின் ஈ சத்தானது கண் பார்வை குறைபாடு, கண்பார்வை மங்குதல் போன்ற பிரச்சினைகள் வராமல் பாதுகாக்கிறது. கணினியில் அதிக நேரம் வேலை பார்ப்பவர்கள் அடிக்கடி செர்ரி பழங்களை எடுத்துக்கொள்வது கண்களுக்கு நல்லது. கர்ப்பிணிப் பெண்களுக்கு செர்ரி பழங்கள் மிகவும் சிறந்ததாகும். ஏனெனில், இது பல ஊட்டச்சத்துக்களின் சிறந்த மூலமாக அமைகிறது. இது நார்ச்சத்து, வைட்டமின் சி, பொட்டாசியம், மற்றும் ஃபோலிக் அமிலத்தின் சிறந்த ஆதாரமாகும்.
இதயத்திற்கு சீரான ரத்த ஓட்டம் கிடைக்க ரத்த குழாய்களில் ரத்தம் உறைந்து விடாமல் இருக்க செர்ரி பழங்கள் அதிகம் சாப்பிட்டு வருவது சிறந்த வழிமுறையாகும். செர்ரிகளில் உள்ள ஆன்தோசையனின், மூட்டுகளில் தேங்கும் யூரிக் அமிலத்தை அகற்றி, மூட்டு வலி, வீக்கத்தை குறைக்கிறது. செர்ரி பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் வைட்டமின் “எ” மற்றும் “ஈ” சத்துக்கள் தலைமுடி உதிர்வதை தடுக்கிறது. இளநரை, பொடுகு போன்ற பிரச்சனைகளை விரைவில் தீர்ப்பதில் செர்ரி பழம் மிகுந்த ஆற்றல் வாய்ந்த ஒரு இயற்கை உணவாக இருக்கிறது. செர்ரி பழங்களில் பைட்டோஸ்டெரால் உள்ளது, இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கும்.
மேலும் படிக்க | இந்த நோய் இதயம் மற்றும் நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்துகிறது - கவனிக்கவும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ