இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்
நீரிழிவு நோயில் சர்க்கரை அளவை குறைக்க ஒரு இலை உள்ளது, இவை நீரிழிவு எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த இலைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த பல வீட்டு வைத்தியங்களை நாம் பின்பற்றி வருகிறோம், அவை பயனுள்ளதாகவும் இருக்கும். அதேபோல் ஆயுர்வேத சிகிச்சையில் இதுபோன்ற பல விஷயங்கள் கூறப்பட்டுள்ளன, இவை உடலில் அதிகரிக்கும் இரத்த சர்க்கரையை எளிதில் கட்டுப்படுத்த உதவும். தற்போது மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கவழக்கங்களால் நீரிழிவு நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. மருந்துகள் தவிர, நீரிழிவு நோயை உணவுமுறை, உடற்பயிற்சி மற்றும் சில வீட்டு வைத்தியங்கள் மூலமும் கட்டுப்படுத்தலாம். அத்தகைய ஒன்று தான் நாவல் பழம் இலைகள் ஆகும். இந்த இலைகளின் பயன்பாடு மற்றும் அதன் நன்மைகள் பற்றி இன்று நாம் காணப் போகிறோம். இவை சர்க்கரை நோயாளிகள் கண்டிப்பாக தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
நாவல் பழங்கள், விதைகள், தண்டுகள் மற்றும் இலைகள் ஆயுர்வேத சிகிச்சைக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் நீரிழிவு நோயிலும் நன்மை பயக்கும். அதேபோல இதை பொடி செய்தும் அதன் விதைகளையும் பயன்படுத்தலாம். அதனுடன் நாவல் பழ இலைகளைப் பயன்படுத்தியும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம்.
நீரிழிவு நோய்க்கு நாவல் பழ இலைகளின் பயன்பாடு:
நீரிழிவு நோயில், நீங்கள் நாவல் பழ இலை சாறு குடிக்கலாம் அல்லது அவற்றை அப்படியே மென்று சாப்பிடலாம். இதற்கு, ஃபிரெஷ் இலைகளைப் பறித்து அதிலிருந்து சாறு எடுத்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வரலாம். இது உடலில் அதிகரித்து இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். இல்லையெனில் நீங்கள் இதன் இலையை உலர்த்தி பொடி செய்தும் சாப்பிடலாம். இந்த பொடியை காலையிலும் மாலையிலும் தண்ணீருடன் எடுத்துக் கொள்ளுங்கள். நாவல் பழ இலைகளிலிருந்தும் தேநீர் தயார் செய்தும் குடிக்கலாம். இதற்கு நாவல் பழ இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி சூடான தேநீர் போல் அருந்தலாம்.
நீரிழிவு நோயில் நாவல் பழ இலைகளின் நன்மைகள்:
பொதுவாக நாவல் பழ இலைகளில் ஜம்போலின் என்கிற கலவை நிறைந்துள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை எளிதாக கட்டுப்படுத்த உதவுகிறது. நாவல் பழ இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் காணப்படுகின்றன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து உடலை பாதுகாக்க உதவுகிறது. அதுமட்டுமின்றி நாவல் பழ இலைகள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கவும் உதவுகின்றன, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. நாவல் பழ இலைகளில் ஃபிளாவனாய்டு, அழற்சி எதிர்ப்பு மற்றும் டானின் பண்புகள் உள்ளதால், அவை வீக்கம் மற்றும் வலியைக் குறைக்கவும் உதவுகின்றன. அதனுடன் நாவல் பழ இலைகள் இன்சுலின் உற்பத்தியை விரைவுபடுத்த உதவும்.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ