5G தொழில்நுட்பத்தின் உதவியுடன், சீன மருத்துவர் ஒருவர் 3000 கிமீ தொலைவில் உள்ள நோயாளிக்கு, மூளை ஆறுவை சிகிச்சை செய்து சாதனை!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தொழில்நுட்ப உலகில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அடுத்த விஷயம் 5G தொழில்நுட்பம் தான். 5G தொழில்நுட்பத்தின் ஆராய்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வரும் சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மூலம், 5G-யை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர முயற்சித்து வருகின்றனர்.


முன்னதாக 5G தொழில்நுட்பத்தின் உதவியுடன், ஒரு பன்றிக்கு சீன மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்தனர். தற்போது ஒரு படி மேலே சென்று, சீன மருத்துவர் ஒருவர் 3000 கிமீ தொலைவில் உள்ள நோயாளிக்கு வீடியோ மூலம் அறுவை சிகிச்சை செய்துள்ளார். பெய்ஜிங் அரசு மருத்துவமனையில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், தென் சீனாவில் உள்ள ஹைனன் பிராந்தியத்தில் இருந்து, லிங் ஜிபேய் என்ற மருத்துவர் அவருக்கு அறுவை சிகிச்சை செய்தார்.


மூளையில், பேஸ்மேக்கர் போன்ற ஒரு கருவியை பொருத்தும் இந்த அறுவை சிகிச்சை, மிகவும் கடினமானதாக கருதப்படுகிறது. இந்த ஆபரேஷனை, 5G தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் ஹுவெய் நிறுவனத்துடன் சேர்ந்து, லிங் ஜிபேய் செய்துள்ளார். வீடியோ மூலம் தான் செய்த அறுவை சிகிச்சை, நேரில் இருந்து செய்வது போல, எந்த தங்கு தடையும் இல்லாமல், தெளிவாக இருந்ததாக, லிங் தெரிவித்துள்ளார்.