புது டெல்லி: சமூக தொலைதூர விதிமுறைகளை மக்கள் பின்பற்றாத இடங்களில் துணியால் செய்யப்பட்ட முகமூடிகளை பயன்படுத்தக்கூடாது என்று உலக சுகாதார நிறுவனம் (The World Health Organisation) தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"உடல் ரீதியான தூரத்தை அடைய முடியாது" மற்றும் "நோய்த்தொற்று / அல்லது எதிர்மறையான விளைவுகளின் அதிக ஆபத்து" உள்ள இடங்களில், ஒரு துணியால் செய்யப்பட்ட முகமூடிகளை விட மருத்துவ முகமூடியை (Medical Mask) அணிய வேண்டும் என WHO கூறியுள்ளது.


Read | கொரோனா வைரஸ் இன்னும் பலவீனம் அடையவில்லை: WHO கவலை


WHO ஒரு ஆலோசனையில், 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அல்லது இருதய நோய், நீரிழிவு நோய், நுரையீரல் நோய், புற்றுநோய் அல்லது பிற அடிப்படை நோய்கள் உள்ளிட்ட முன்பே இருக்கும் சுகாதார நிலைமைகளைக் கொண்டவர்கள், தங்களுக்கு ஒரு மருத்துவ முகமூடியை (Medical Mask) மட்டுமே அணிய வேண்டும். அது தான் அவர்களுக்கு பாதுகாப்பு எனத் தெரிவித்துள்ளது.


நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக மருத்துவ தர முகமூடிகளைப் பயன்படுத்துவதற்கான WHO இன் வழிகாட்டுதல் முக்கியத்துவம் பெறுகிறது.


Read | COVID-19 தடுப்பூசி தயாரிப்பதில் இந்தியாவின் பங்கை அங்கீகரித்த நாடு!!


துணியிலிருந்து தயாரிக்கப்படும் முகமூடிகள் (Cloth Mask) பொது போக்குவரத்தில் செல்லும் போது பயன்படுத்தப்படலாம், அவற்றின் பயன்பாடு எப்போதும் கை சுகாதாரம் மற்றும் உடல் ரீதியான தூரத்தோடு இருக்க வேண்டும்.


ஃபேஸ் மாஸ்க்களின் பயன்பாடு குறித்து கோவிட் -19 தொற்று பரவத்தொடங்கிய நாளிலிருந்து உலக சுகாதார அமைப்பு தெளிவற்றதாக இருந்தது.


பொது இடங்களில் குறைந்தபட்சம் ஆறு அடி தூரத்தை பராமரிக்க மாநில மற்றும் மத்திய அரசுகள் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளன. இந்த நிபந்தனையைப் பின்பற்றுவது, அவர்களைச் சுற்றியுள்ளவர்களிடமிருந்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க உதவும். பொது இடங்களில் அனைவருக்கும் முகமூடி அணிவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. ஆனால் நகரத்திலும் மாநிலத்தின் பிற இடங்களிலும் மக்கள் இந்த வழிகாட்டுதல்களைப் பின்பற்றுவதைப் பார்ப்பது மிகவும் குறைவாகவே உள்ளது.