உடலுக்கு ஆரோக்கியம் தருவது நெய்யா? தேங்காய் எண்ணெயா? பதில் இதோ!
இந்திய சமையலில் அதிகம் உபயாேகப்படுத்தப்படும் உணவு பொருட்களுள் தேங்காய் எண்ணெய் மற்றும் நெய் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். இவை இரண்டில் சிறந்தது எது தெரியுமா?
அனைவரது வீட்டு சமையலறையிலும் உணவுக்கு தேவையான பொருட்களாக அவரவர் விருப்பத்திற்கேற்ப எண்ணெய்களும், மசாலா பொருட்களும் இருக்கும். இந்தியாவின் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் எண்ணெய் வகைகளுள் ஒன்று, தேங்காய் எண்ணெய். இதைப்போலவே, பலர் உபயோகிக்கும் உணவு பொருளுள் ஒன்று, நெய். இவை இரண்டுமே சரிசமமாக உடலுகக்கு நன்மையும் தீமையும் விளைவிப்பதாக பலர் கருதுகின்றனர். இது உண்மையா? இவை இரண்டில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பொருள் எது? இவை இரண்டில் உடலுக்கு அதிக தீங்கு விளைவிப்பது எது?
இரண்டும் தயாரிக்கப்படும் முறை:
தேங்காய் எண்ணெய் முதிர்ந்த தேங்காய்களில் இருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. அது மட்டுமன்றி, இது முக்கியமாக நிறைவுற்ற கொழுப்புகளால் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உள்ள 90% கொழுப்பு அமிலங்கள் நிறைவுற்றவை ஆகும். தேங்காய் எண்ணெயில் உள்ள நிறைவுற்ற கொழுப்பின் முக்கிய வகை லாரிக் அமிலம் என பெயர் பெற்றுள்ளது.
தேங்காய் எண்ணெயில் இரண்டு வகையான கொழுப்புகள் உள்லன. இவற்றை, நிறைவுறா கொழுப்புகள், நிறைவுற்ற கொழுப்புகள் என பிரிக்கலாம். இந்த கொழுப்புகளை தாண்டி, தேங்காய் எண்ணெயில் வைட்டமின் மற்றும் மினரல் சத்துகளும் உள்ளன.
நெய்யை, சுத்திகரிக்கப்பட்ட வெண்ணெய் என்று கூறுவர். இது, வெண்ணெயை சூடு செய்து அதில் இருக்கும் பால் உறுப்புகளை தனியாக எடுத்தவுடன் தயாரிக்கப்படுகிறது. அப்படி சூடு செய்யும் போது அந்த வெண்ணெய் பொன் நிறமாக மாறும். இதுவே நெய் என கூறப்படுகிறது. நெய், நிறைவுற்ற கொழுப்புகளால் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இதில் ஃபேட்டி அமிலங்களும் உள்ளன. கரையக்கூடிய தன்மை கொண்ட கொழுப்புகளை கொண்ட, வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே சத்துகளும் நெய்யில் உள்ளன.
சமையல் பயன்பாடு:
தேங்காய் எண்ணெயை அதிகம் வெப்பம் வைத்து சமைக்க கூடிய சமையல் பொருட்களுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். வறுத்தல், பேக்கிங் போன்ற பயன்பாட்டிற்காக தேங்காய் எண்ணெய் உபயோகிக்கப்படுகிறது. ஆசியாவில் பல நாடுகளில் தேங்காய் எண்ணெயை ஃப்ளேவருக்காகவும், நறுமனத்திற்காகவும் பல கோடி பேர் உபயோகிக்கின்றனர். இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் தேங்காய் எண்ணெயை அதிகம் பயன்படுத்துவோர் உள்ளனர்.
நெய்யை, தேங்காய் எண்ணெயை பயன்படுத்தி செய்யும் சமையலை விட, அதிக சூட்டில் வைத்து சமைக்க வேண்டும், டீப் ஃப்ரை உணவுகளில் நெய் உபயோகப்படுத்தப்படும். எந்த உணவில் நெய்யை பயன்படுத்தினாலும் அதில் அதன் தனிப்பட்ட சுவை இருக்கும். இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நெய் பிரியர்கள் அதிகம் உள்ளனர்.
ஆரோக்கிய நன்மைகள்:
தேங்காய் எண்ணெயில் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகள் அதிகம் இருப்பதாக பல மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனால், இதில் காணப்படும் சில அம்சங்கள் உடலுக்கு நன்மை பயப்பதாகவும் சில மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இதனால் உடலில் மெட்டபாலிச சத்துகள் அதிகரித்து, உடல் எடையை கண்ட்ரோலில் வைக்கவும் தேங்காய் எண்ணெய் உதவுகிறதாம். ஆனால், இதில் இருக்கும் நிறைவுற்ற கொழுப்புகள் உடலில் கெட்ட கொழுப்பை அதிகரித்து இதயம் தொடர்பான பிரச்சனைகளுக்கு வழி வகுக்கலாம்.
தேங்காய் எண்ணெயை போலவே, நெய்யிலும் அதிகம் நிறைவுற்ற கொழுப்புகள் உள்ளன. இதுவும், இருதய நோயுடன் தொடர்புடையதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், நெய்யில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பால் அலர்ஜி எனப்படும், லாக்டோஸ் இண்டாலரன்ஸ் இருப்பவர்களும் நெய்யை அவர்களின் உணவில் சேர்த்து கொள்ளலாம் என மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது. கரையக்கூடிய கொழுப்புகள் இதில் அதிகம் இருப்பதால் இது, குடல் ஆரோக்கியத்துக்கு தேவையான சத்துகளும் இதில் நிறைந்துள்ளது.
இவை இரண்டிலும் ஆரோக்கிய நன்மைகள் இருப்பினும், அளவுடன் எடுத்துக்கொண்டால் நல்லது என மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க | மலச்சிக்கலில் இருந்து விடுதலை வேண்டுமா? ‘இந்த’ உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ