நுரையீரல் என்பது நம் உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் ஒன்றாகும்.  சுவாசத்திற்கு ஆதாரமான நுரையீரல் இரத்தத்திற்கு ஆக்ஸிஜனை வழங்கும் முக்கிய வேலை செய்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அதில் ஏற்படும் பாதிப்பை புறக்கணிப்பது ஆபத்தானது. நுரையீரலில் ஏற்படும் பாதிப்பு காரணமாக, சில அறிகுறிகள் இரவில் தீவிரமடைகின்றன. அத்தகைய சூழ்நிலையில், இரவில் தோன்றும் சில அறிகுறிகளை அறிந்து கொண்டு அதனை புறக்கணிக்கமால், உடனடியாக ஒரு மருத்துவரை அணுகவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தூங்கும் போது ஏற்படும் இருமல்


நுரையீரல் செயலிழப்பின் பொதுவான அறிகுறி தூங்கும் போது இருமல் ஏற்படுவதாகும். தூங்கும் போது அடிக்கடி இருமல் ஏற்பட்டால், அது நுரையீரலில் வீக்கம் அல்லது தொற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம்.  இது நுரையீரல் செயலிழப்பின் தொடக்கமாக கூட இருக்கலாம்.


அடிக்கடி மூச்சுத் திணறல்


லேசான வேலை செய்யும் போது அல்லது இருமலின் போது மூச்சுத் திணறல் பிரச்சனையை எதிர்கொண்டால், அது நுரையீரல் பிரச்சனையின் அறிகுறியாக இருக்கலாம். மூச்சுத் திணறல் என்பது பலரும் அடிக்கடி புறக்கணிக்கும் அறிகுறிகளில் ஒன்றாகும். ஆனால் சரியான நேரத்தில் சிகிச்சை செய்யப்படாவிட்டால், இந்த பிரச்சனை அதிகரிக்கும்.


இருமல் ஏற்படும் போது மார்பு வலி


இருமலின் போது நெஞ்சு வலி ஏற்பட்டால், அது நுரையீரலில் ஏதேனும் கடுமையான பிரச்சனை இருக்கலாம் என்பதற்கான அறிகுறியாகும். இந்த வலி நுரையீரலில் ஏற்படும் அழற்சி, தொற்று அல்லது வேறு ஏதேனும் நோயின் விளைவாக இருக்கலாம்.


வாயில் சளி


உங்கள் வாயில் அதிகப்படியான சளி இருந்தால், இது நுரையீரல் நோயின் அறிகுறியாகவும் இருக்கலாம். குறிப்பாக புகைபிடிப்பவர்களிடம் இந்த பிரச்சனை அதிகம் காணப்படுகிறது. சளி இருப்பது ஒரு பொதுவான அறிகுறியாக இருக்கலாம், ஆனால் இந்த பிரச்சனை அதிகரிக்க ஆரம்பித்தால், அது கடுமையான உடல்நலப் பிரச்சினைகளின் அறிகுறியாக இருக்கலாம்.


மேலும் படிக்க | சீனாவில் அதிகரிக்கும் HMPV வைரஸ் பரவல்... அறிகுறிகளும்... சில முக்கிய தகவல்களும்


சுவாசிப்பதில் சிரமம்


நுரையீரல் செயலிழப்பின் போது, ​​லேசாக நடக்கும்போது அல்லது தீவிரமான வேலைகளைச் செய்யும்போது சுவாசிப்பதில் சிரமம் ஏற்படலாம். இதனுடன், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகளும் காலையில் எழுந்தவுடன் காணலாம்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க |  HMPV வைரஸின் ஆரம்ப கால அறிகுறிகள் இது தான்! ஜாக்கிரதை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ