Weight Loss Tips: உடல் எடையை குறைப்பது பலருக்கு உள்ள பொதுவான இலக்காக உள்ளது. இதற்கு இந்த காலத்தில் பல வழிகளும் உள்ளன. ஜிம், டயட் என பல வித முயற்சிகளை மேற்கொண்டு மக்கள் உடல் எடையை குறைக்க முயற்சிக்கிறார்கள். எனினும் இவற்றாலும் சில சமயங்களில் எந்த வித பலனும் கிடைப்பதில்லை. சில இயற்கையான எளிய வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அப்படி சில வழிகளை பற்றி இந்த பதிவில் காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குளிர்காலம் தொடங்கிவிட்டாலே அனைத்து இடங்களிலும் வேர்க்கடலையை காண முடியும். குளிர்காலத்தில் நம் உடலுக்கு தேவையான உஷ்ணத்தை அளிக்கவும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் வேர்க்கடலை அதிகம் உட்கொள்ளப்படுகின்றது. வேர்க்கடலை பல்வேறு உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. இது தவிர, தெருக்கடைகளிலும் குளிர் காலங்களில் சூடான, வறுத்த வேர்க்கடலை, கடலை மிட்டாய் ஆகியவை அதிகம் விற்கப்படுகின்றன. அதன் பிரத்யேகமான சுவை மற்றும் சத்தான சுவை காரணமாக இது சாப்பிட ஒரு சுவையான உணவாக உள்ளது. மேலும் இது மலிவு விலையில் கிடைப்பதால் அனைவராலும் இதை வாங்க முடிகின்றது. 


வேர்க்கடலையில் உள்ள ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Peanuts)


குளிர்காலத்தில் வேர்க்கடலை (Peanut) நமக்கு சிறந்த சுவையுடன் உடலுக்கு தேவையான கூடுதல் ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. அவற்றில் மைக்ரோ மற்றும் மேக்ரோநியூட்ரியன்கள் ஏராளமாக உள்ளன. ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதங்கள் இதில் நிறைந்துள்ளன. மேலும் வேர்க்கடலைகள் பல நோய்களுக்கு எதிராக நம்மைக் காப்பாற்றுகின்றன.


எடை இழப்புக்கு வேர்க்கடலை எவ்வாறு உதவுகிறது? (Peanuts For Weight Loss)


வேர்க்கடலையில் நார்ச்சத்து மற்றும் புரதம் அதிகமாக உள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களும் எடை குறைப்புக்கு உதவுவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. நார்ச்சத்து நிறைவான உணர்வை அளிக்கின்றது, செரிமானத்தை எளிதாக்குகிறது. இதன் மூலம் நாம் அதிகமான, தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பது தவிர்க்கபப்டுகின்றது. 


- வேர்க்கடலையில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் புரதச்சத்தும் நிறைந்துள்ளது. காலை மற்றும் மதியத்திற்கு இடையில், அல்லது மதியம் மற்றும் இரவு உணவிற்கு இடையில் பசி ஏற்பட்டால், ஆரோக்கியமற்ற ஸ்னாக்ஸ் சாப்பிடுவதற்கு பதிலாக வேர்க்கடலைகளை உட்கொள்ளலாம். 


மேலும் படிக்க | கொழுப்பை எரிக்க... மெட்டபாலிஸத்தை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!


- இவற்றில் கலோரிகள் அதிகமாக இருந்தாலும், ஒரு நாளைக்கு ஒரு சில வேர்க்கடலைகள் (சுமார் 7) சாப்பிடுவது எடையை அதிகமாக உயர்த்தாமல் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்கும். 


- வேர்க்கடலை தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆண்டி-ஆக்சிடெண்டுகளின் சிறந்த மூலமாகும். இவற்றின் மூலம் ஒரு சமச்சீர் உணவு பூர்த்தியடைகிறது.


- வேர்க்கடலையில் உள்ள மெக்னீசியம், வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகிறது. ஆரோக்கியமான வளர்சிதை மாற்றத்திற்கு இதை தினமும் உட்கொள்ளலாம். 


- வேர்க்கடலையில் கொழுப்பு அதிகம் இருப்பதால், அவற்றைத் தவிர்க்க வேண்டும் என்று பலர் நினைக்கிறார்கள். இருப்பினும், இவற்றை மிதமாக உட்கொள்ளலாம். இந்த கொழுப்புகள் உண்மையில் ஆரோக்கியமானவை மற்றும் இதய ஆரோக்கியத்திற்கு அதிக நன்மை பயக்கும்.
அவை கலோரிகள் மற்றும் கொழுப்பு நிறைந்தவை, ஆனால் இவற்றால் அதிக அளவில் எடை அதிகரிக்காது. இவற்றை மிதமாக உட்கொண்டால், இந்த கொழுப்புகள் உண்மையில் ஆரோக்கியமானவையாகவே இருக்கின்றன. இதய ஆரோக்கியத்திற்கும் இது அதிக நன்மை பயக்கும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | கல்லீரலை காலி செய்யும் ‘சில’ ஆபத்தான உணவுகள் - பழக்கங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ