மது போதை பொருளாக இருந்தாலும் கேளிக்கைக்காக உட்கொள்ளப்படுகிறது. உயர்தர மதுபானங்களில் உடலுக்கு தேவையான சில நன்மைகள் இருந்தாலும் ஆபத்துகளே அதிகம் என அண்மையில் வெளியாகியிருக்கும் லான்செட் ஜர்னல் ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. நீண்ட காலமாக மது அருந்துபவர்களுக்கு இதய நோய், சிறுநீரக பிரச்சனைகள், காசநோய் மற்றும் நிமோனியா போன்ற நோய்களின் ஆபத்து அதிகமாக இருக்கிறதாம். அளவுக்கு அதிகமாக மது அருந்துவதும் புற்றுநோயை உண்டாக்கும். இது தொடர்பாக ஆய்வில் ஈடுபட்ட பிரபல மருத்துவ நாளிதழான லான்செட் ஜர்னல், மது குறித்து பல்வேறு கோணங்களில் ஆய்வுகளை மேற்கொண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. அதில் மிதமான மது அருந்துதல் சில நோய்களின் ஆபத்தை குறைத்தாலும், பல நோய்களின் ஆபத்தை பன்மடங்கு அதிகரிப்பதாக தெரிவித்துள்ளது. வயதானவர்களை விட இளைஞர்களின் ஆரோக்கியத்திற்கு அதிக ஆபத்தை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மது அருந்துபவர்களின் வயதுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், எந்த வயதில் எவ்வளவு மது அருந்துகிறார்கள்? இது அவர்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு தீங்கு விளைவிக்கும்? என்பதை கண்டுபிடிப்பதே முக்கிய நோக்கமாக இருந்தது. அவர்களின் ஆய்வு முடிவில் வயதானவர்களை விட இளைஞர்களிடையே குடிப்பழக்கம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிப்பதை கண்டுபிடித்துள்ளனர்.


குளோபல் பர்டன் ஆஃப் டிசீஸ் ஸ்டடி 2020 பகுப்பாய்வின்படி, சிறிய அளவு ஆல்கஹால் சில நோய்களின் அபாயத்தைக் குறைக்கலாம். ஆனால் இது மற்ற நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. 2020 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 1.34 பில்லியன் மக்கள் அதிகப்படியான ஆல்கஹால் உட்கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆய்வின்படி, 15-39 வயதுக்குட்பட்டவர்கள் அதிகமாக மது அருந்துபவர்களாக இருக்கின்றனர். இவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக மது அருந்திய ஆண்கள் அனைவரும் ஆபத்தான நோய்களை எதிர்கொண்டிருப்பது தெரியவந்துள்ளது


மேலும் படிக்க | டீ உடன் இந்த ஸ்னாக்ஸ் கூடவே கூடாது: சாப்பிட்டால் பின் அவதிதான், ஜாக்கிரதை!!


அதிகம் பாதிக்கப்படும் வயதினர்


15-39 வயதிற்குட்பட்டவர்கள் மது அருந்துவதால் ஆரோக்கியத்திற்கு எந்த நன்மையும் இல்லை என்று லான்செட் மருத்துவ இதழின் ஆய்வு கூறுகிறது. பலன் இல்லாத அதேநேரத்தில் அவர்கள் ஆபத்தான நோய்களை எதிர்கொள்ளும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறதாம். இந்த வயதினரிடம் மேற்கொள்ளப்பட்ட  ஆய்வில், 60 சதவீதம் பேர் மது அருந்துவதால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர்.


மேலும், அதிக அளவில் மது அருந்துபவர்கள் வாகன விபத்துகளில் சிக்குகின்றனர். தற்கொலை செய்துகொள்வதும், கொலை செய்வதும் அதிகம் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மனநல மருத்துவர்கள் கொடுத்துள்ள விளக்கத்தில், பெரும்பாலான இளைஞர்கள் கல்லூரி மற்றும் அலுவலக நேரங்களில் மது அருந்துவது கண்டறியப்பட்டுள்ளது. மலிவான மதுபானம் குடிப்பதால் கல்லீரல் பாதிக்கப்படுகிறதாம். இளம் வயதிலேயே மது அருந்துவது இளைஞர்களின் ஆயுளையும் குறைக்கிறது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | Weight Loss Mistakes: எடை குறைப்பதில் நாம் செய்யும் தவறுகள்


மது அருந்தாதவர்கள் சராசரியாக 70 முதல் 75 ஆண்டுகள் வரை வாழலாம். இதற்காக மது அருந்தவே கூடாதா? கேட்கும் சிலருக்கு, 15 முதல் 39 வயதினர் எவ்வளவு மது அருந்தலாம் என்ற விவரத்தையும் கொடுத்துள்ளனர். அதன்படி, 15-39 வயதுடையவர்களுக்கு ஒரு நாளைக்கு 0.136 மது அருந்தினால் போதும். இதே வயதுடைய பெண்கள் ஒரு நாளைக்கு 0.273 மது அருந்துவது சிறந்தது என ஆய்வு கூறுகிறது. 


(பின் குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் மருத்துவ நிபுணரை அணுகவும்.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR