இதயமே…இதயமே…Corona-வால் நீயும் பாதிக்கப்படலாம்: Germany வெளியிட்ட பகீர் Report!!
கொரோனா வைரஸ் இதயத்தையும் நீண்டகாலத்திற்கு பாதிக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
கொரோனா வைரஸ், நோயாளியின் நுரையீரலைப் பாதிக்கிறது என்பது இப்போது பரவலாக அறியப்பட்டுள்ள ஒரு விஷயமாகும். ஆனால் வைரஸ் இதயத்தையும் நீண்டகாலத்திற்கு பாதிக்கக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.
COVID-19 இலிருந்து மீண்ட 100 பேரின் மீது ஜெர்மனியில் நடத்தப்பட்ட ஆய்வில் (German Study) 78% நோயாளிகளுக்கு (78 நோயாளிகள்) இதயத்தில் பாதிப்புக ஏற்படுள்ளதாகவும் 60% நோயாளிகளுக்கு (60 நோயாளிகள்) மாரடைப்பு, வீக்கம் (இதய தசைகள் மற்றும் திசுக்களின் வீக்கம்) இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.
கொரோனாவுக்கு முன்னர் அவர்களுக்கு இந்த நிலை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, ஆரோக்கியமான நோயாளிகள் சிலர், தொற்றின் பின் விளைவாக இதய பிரச்சினைகளையும் எதிர்கொள்ளக்கூடும்.
ஆய்வுக்காக, சமீபத்தில் ஏப்ரல் மற்றும் ஜூன் 2020 க்கு இடையில் பல்கலைக்கழக மருத்துவமனை பிராங்பேர்ட் COVID-19 பதிவேட்டில் இருந்து மீண்ட சுமார் 100 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இந்த 100 நோயாளிகளில் 53 பேர் ஆண்கள், சராசரி வயது 49 (45- 53). சமீபத்தில் COVID-19 இலிருந்து மீட்கப்பட்ட 100 நோயாளிகளில் 67 (67%) பேர் வீட்டில் சிகிச்சைப் பெற்று மீட்கப்பட்டவர்கள். 33 (33%) பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவர்கள்.
இருப்பினும், 18 வயது மற்றும் அதற்கு கீழ் உள்ள குழந்தை நோயாளிகள் இதில் இடம் பெறாததால், இந்த ஆய்வில் சில வரம்புகள் இருப்பதாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடுமையான COVID-19 நோய்த்தொற்று கொண்ட நோயாளிகள் மற்றும் அறிகுறிகள் இல்லாத நோயளிகளின் மாதிரிகள் ஆய்விற்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை என்றும் ஆய்வு குறிப்பிட்டது.
கொரோனாவிலிருந்து மீண்டாலும் அதன் பின் விளைவாக இதயம் பாதிக்கப்படலாம் என தெளிவாக்கியுள்ள இந்த ஆய்வின் முடிவுகள் மருத்துவ ஊழியர்களையும் பொது மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளன.
ALSO READ: Corona நோயாளிகளின் குடும்பத்தினர் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு...