இதய நோய்களின் ஆபத்து வயதுக்கு ஏற்ப அதிகரிக்கிறது. இளம் வயதிலிருந்தே ஆரோக்கியமான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பதன் மூலம், இந்த நோயைத் தவிர்க்கலாம். உலகில்  மாரடைப்பு காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதய நோயால் ஏற்படும் ஆபத்து


இதய தமனி நோய் (Coronary Artery Disease), மாரடைப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் ஆகியவை தொற்று அல்லாத நோய்களுடன் தொடர்புடைய 45 சதவீத இறப்புகளுக்கு காரணமாகின்றன என உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. அதே சமயம், 22 சதவீதம் பேர் சுவாச நோய்களாலும், 12 சதவீதம் பேர் புற்றுநோயாலும், 3 சதவீதம் பேர் சர்க்கரை நோயாலும் இறக்கின்றனர் என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.


இதய நோய்


இதய நோய் குறித்து ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்பட்டால், இளம் வயதில் ஏற்படும் மாரடைப்புகளில் 80 சதவிகிதத்தை தடுக்கலாம். புகைபிடிப்பதைத் தவிர்த்தல், ஆரோக்கியமான உணவு முறைகள், தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், சரியான எடை, இரத்த அழுத்தம், சர்க்கரை மற்றும் கொலஸ்ட்ரால் அளவைப் பராமரித்தல் போன்றவற்றை இளம் வயதிலேயே தொடங்கினால், மாரடைப்பு அபாயத்தை குறைக்கலாம் என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.


மேலும் படிக்க | மாரடைப்பு ஆபத்தை 3 ஆண்டுகளுக்கு முன்பே கண்டறியலாம் : விஞ்ஞானிகள்


இதய நோய் ஏன் ஏற்படுகிறது?


இதய நோய் முக்கியமாக தமனி சுவரில் கொழுப்பு, கொலஸ்ட்ரால் மற்றும் பிற பொருட்கள் குவிவதால் ஏற்படுகிறது, இது பெருந்தமனி தடிப்பு என்று அழைக்கப்படுகிறது. இது சிறு வயதிலேயே உருவாகத் தொடங்குகிறது மற்றும் உடலின் திசுக்களுக்கு போதுமான இரத்தத்தை பம்ப் செய்ய முடியாமல் இதயத்த்திற்கு அழுத்தம் கொடுக்கிறது . இது இதயம் மற்றும் இரத்த நாளங்கள் தொடர்பான பல்வேறு நோய்களுக்கு வழிவகுக்கிறது.


இதய நோய் அறிகுறிகள்


இதய நோய்களின் அறிகுறிகள் என்பது, மார்பு வலி அல்லது அசெளகரியம், படபடப்பு, தலைவலி, தலைச்சுற்றல், மயக்கம், சோர்வு மற்றும் மூச்சுத்திணறல் ஆகியவை ஆகும்.


மேலும் படிக்க |  இதய ஆரோக்கியம்: மாரடைப்பு அபாயத்தை நீக்கும் ‘சிறந்த’ உணவுகள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR