புதுடெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் COVID பாதிப்பு எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. 24,882 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பரவியுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் கடந்த 24 மணி நேரத்தில் 19,957 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் கோவிட்டுக்கு 140 பேர் பலியாகியுள்ளனர்.


இந்தியாவில் கோவிட் பாதிப்பு எண்ணிக்கை:
மொத்த பாதிப்பு: 1,13,33,728
சிகிச்சையில் குணமடைந்தவர்கள்: 1,09,73,260
சிகிச்சை பெற்று வருபவர்கள்: 2,02,022
கொரோனா பலி எண்ணிக்கை: 1,58,446


தடுப்பூசி போடப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை: 2,82,18,457


Also Read | COVID-19: கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்கிறது தமிழகம்


மகாராஷ்டிரா கொரோனாவின் ஹாட் ஸ்பாட் ஆக மாறி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 16 ஆயிரம் புதிய பாதிப்புகளும் 56 மரணங்களும் பதிவாகியுள்ளன.
கோவிட் -19 தொற்று பரவல் அதிகரித்துள்ளதன் காரணமாக கேரளாவிலிருந்து வரும் பயணிகளுக்கு தமிழகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.  


கொடிய கொரோனா வைரஸ் தொற்று நோய் மீண்டும் பரவும் வேகத்தை அதிகரித்துள்ளது பல்வேறு கவலைகளை அதிகரித்துள்ளது. நோயைக் கட்டுப்படுத்த சில நகரங்களில் இரவு ஊரடங்கு உத்தரவும், லாக்டவுனும் அறிவிக்கப்பட்டுள்ளது.  


மகாராஷ்டிராவின் நாக்பூர், புணே மற்றும் அவுரங்காபாதில் இரவு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. அடுத்த உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவு 
அதேபோல் பஞ்சாபின் பாட்டியாலா மற்றும் லூதியானா என பல நகரங்களில் அடுத்த உத்தரவு வரும் வரை இரவு ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என மாநில அரசு அறிவித்துள்ளது.   


Also Read | கொரோனா ஹாட் ஸ்பாட் ஆகும் மகாராஷ்டிரா; சுமார் 16,000 புதிய தொற்று பாதிப்புகள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR