COVID-19 Update: இந்தியாவில் 3,32,730 பேருக்கு தொற்று உறுதி; 2,263 பேர் பலி!
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன
.
இந்தியாவில், கொரோனா பரவல் இரண்டாவது அலை தொடங்கி, இது வரை இல்லாத அளவில், தினசரி சுமார் 3 லட்சம் என்ற அளவில், புதிய கொரோனா தொற்று பாதிப்புகள் பதிவாகின்றன.
நாட்டில் இப்போது கிட்டத்தட்ட 2.3 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இன்றைய (வெள்ளிக்கிழமை) நிலவரப்படி, நாட்டில் 3,32,730 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்றுநோய் (Corona Virus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எந்தவொரு நாட்டிலும் வெறும் 24 மணி நேரத்தில் 300,000 தொற்று பாதிப்பு பதிவு செய்யப்படுவது இதுவே முதல் முறை. நாட்டில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை (Oxygen Shortage) மற்றும் நிலவி வருகிறது, இந்தியாவில் ஒரே நாளில் , 2,263 இறப்புகள் பதிவாகியுள்ளன.
மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை - 1,62 ,63, 695
குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை - 1,36,48,159
சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை- 24 ,28,616
இறந்தவர்களின் எண்ணிக்கை- 1,86, 920
தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் எண்ணிக்கை- 13,54 ,78, 420
நாட்டில் கொரோனாவினால் ஏற்பட்ட இறப்பு விகிதம் 1.15 சதவீதமாகவும், குணம்டையும் விகிதம் 84 சதவீதமாகவும் உள்ளது. சிக்க்சையில் உள்ளவர்களின் 15 சதவீதமாக அதிகரித்தன. கொரோனா ஆக்டிவ் நோயாளிகளின் எண்ணிக்கையில், இந்தியா உலகில் இரண்டாவது இடத்தில் உள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கையிலும் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. அமெரிக்கா, பிரேசில் மற்றும் மெக்ஸிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் அதிக இறப்புக்கள் இந்தியாவில் ஏற்பட்டுள்ளன.
ALSO READ | வீட்டிலேயே ஆக்ஸிஜன் அளவை சரியாக பராமரிக்க சுகாதார அமைச்சகம் பரிந்துரைக்கும் வழிகள்
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR