இந்த கோடை வெயிலுக்கு பகல் நேரங்களில் பலர் தயிரை வெவ்வேறு வடிவில் உட்கொள்கின்றனர். தயிர் சாதமாகவும், கொஞ்சம் சர்க்கரை தூவி லஸ்ஸியாகவும், கொஞ்சும் தண்ணீர் ஊற்றி மோர் ஆகவும் தயிரை சாப்பிடலாம். பகல் நேரங்களுக்கு தயிர் சரிப்பட்டு வரும். ஆனால், சிலர் இரவிலும் தயிர் சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர். இது உண்மையிலேயே உடலுக்கு நன்மை பயக்குமா? நிபுண்ர்கள் கூறுவது என்ன? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இரவில் தயிர் சாப்பிடலாமா?


சளி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லாதவர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதால், அவர்களது உடல் நலனுக்கு ஒரு தீங்கும் ஏற்படாது என சில ஊட்டச்சத்து நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இருப்பினும் தயிரில் கொழுப்புச்சத்துகளும் புரதச்சத்துகளும் நிறைந்திருப்பதால் தயிரை அளவுடன் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுரை கூறுகின்றனர். இதனால், இரவில் செரிமான கோளாறு ஏற்படக் கூட வாய்ப்பு உள்ளது என்பதால் இரவில் தயிரை சாப்பிடும் போது கவனம் கொள்ள வேண்டுமாம். 



ஆயுர்வேத நிபுணர்கள் கூறுவது என்ன? 


சில ஆயுர்வேத நிபுணர்கள் இரவில் தயிர் சாப்பிடுவதை ஆதரிக்கின்றனர். தயிரில் உப்பு-சர்க்கரை ஆகிய இரண்டின் பண்பும் நிறைந்துள்ளதால் இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும் என்றும் கூறுகின்றனர். மேலும், தயிரில் உள்ள சத்து நமது நாசிப் பகுதியில் உள்ள சளியை தூண்டுவதற்கு காரணமாக இருக்குமாம். இதனால் ஆஸ்துமா, இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளை கொண்டுள்ளோர் கண்டிப்பாக இரவில் தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என கருத்து தெரிவிக்கின்றனர். 


மேலும் படிக்க | ‘மனமே நலமா?’ மன அழுத்தத்திலிருந்து வெளிவர இந்த வழிமுறைகளை கடைபிடியுங்கள்


தயிர் சாப்பிடுவதனால் ஏற்படும் நன்மைகள்:


  • தயிர் சாப்பிடுவது இதயத்திற்கு நன்மை பயக்கும் என மருத்துவர்கள் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. 

  • தயிரில் அதிக புரதச்சத்தும் குறைவான கொழுப்புச்சத்தும் உள்ளதால் உடல் எடை குறைக்க விரும்புவோர் தயிரை சாப்பிடலாம் என சிலர் தெரிவிக்கின்றனர். 

  • தயிர் சாப்பிடுவதால் நமது பற்கள் மற்றும் எலும்புகள் வலுபெறும் என கூறப்படுகிறது. 

  • தசை மற்றும் முடியை பாதுகாக்க தயிர் உதவுவதாக சில  நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். 


தயிர் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்:


  • ஆஸ்துமா அல்லது சளி சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி தயிர் எடுத்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும். 

  • மூட்டு வலி இருப்போர் தயிரை உட்கொள்ளும் போது கவனம் கொள்ள வேண்டும். தயிர் சாப்பிடுவது மூட்டு வலியை மேலும் அதிகரிக்குமாம். 

  • ஏற்கனவே சிறுது உடல் நிலை சரியில்லாமல் இருப்போர் தயிர் சாப்பிட்டால் அவர்களுக்கு காயச்சல், சளி, இருமல் வர வாய்ப்புள்ளது. 

  • தயிர், செரிமானக் கோளாரையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது. 


மேலும் படிக்க | உடல் எடை ஒரேயடியா ஏறுதா? இன்னிக்கே இதையெல்லாம் நிறுத்துங்க!!


 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ