எடையை சட்டென குறைக்க வேண்டுமா? மதிய நேரத்தில் கண்டிப்பா ‘இதை’ பண்ணுங்க!
Afternoon Habits For Weight Loss : உடல் எடையை வேகமாக குறைக்க, சில விஷயங்களை நாம் காலை நேரத்தில் மட்டுமல்ல, மதிய வேளைகளிலும் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?
Afternoon Habits For Weight Loss : பலருக்கு உடல் பருமனோடு இருப்பது என்பது, பெரும் பிரச்சனையாக தோன்றலாம். இது, அவர்களுக்கே அவர்களின் உடல் குறித்த பயத்தையும், குறைவான மதிப்பீட்டலையும் உருவாக்க வாய்ப்பிருக்கிறது. சாப்பிடாமல் இருப்பதால் உடல் எடையை குறைத்து விடலாம் என நினைக்கும் பலர், தங்களின் உணவு தேவைகளை குறைத்துக்கொள்கின்றனர். இதனால், உடல் எடை குறைவது போல தோன்றினாலும், குறுகிய காலம் வரை மட்டுமே இந்த பயன் இருக்கும். உடற்பயிற்சியுடன் சேர்த்து, சரியான அளவு ஹெல்தியான உணவை எடுத்துக்கொள்வதும் உடல் எடையை குறைப்பதற்கு தேவையான விஷயமாகும்.
உடல் எடையை குறைக்க, நாம் காலையில் எழுந்து சில உடற்பயிற்சிகளையும் டயட் உணவுகளையும் எடுத்துக்கொள்வோம். ஆனால், இதனுடன் சேர்த்து நாம் மதிய வேளைகளிலும் சில விஷயங்களை செய்ய வேண்டும். அது என்ன தெரியுமா?
தண்ணீர் குடிக்க வேண்டும்:
தண்ணீர் குடிப்பது உடல் நலனுக்கு இன்றியமையாதது என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், இது உடல் எடையை குறைக்கவும் மிகுதியான வகையில் உதவும் என்பது உங்களுக்கு தெரியுமா? மதிய வேளையில் தண்ணீர் அதிகம் குடிப்பதால் நம் உடல் நீர்ச்சத்து குறைபாடு இல்லாமல் இருக்கும். இதனால் நாம் மதிய சாப்பட்டை குறைவாக சாப்பிடுவோம். ஆனாலும், நீண்ட நேரத்திற்கு பசியின்றி இருக்கலாம். அது மட்டுமன்றி, நிறைய தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள கழிவுகளும் வெளியேறும். கொழுப்பை குறைக்கவும் தண்ணீர் அதிகம் குடிப்பது உதவும்.
ஹெல்தியான ஸ்நாக்ஸ்:
காலை உணவுக்கு பின்னர் நமக்கு சில மணி நேரங்களுக்கு பின்னர் அதிக பசியெடுக்க ஆரம்பித்துவிடும். இதனால், நாம் அதிகம் சாப்பிடவும் வாய்பிருகிறது. எனவே, ஃபைபர் மற்றும் புரத சத்து நிறைந்த ஸ்நாக்ஸ்களை மதிய நேரத்தில் சாப்பிடுவது முக்கியமாகும். இதனால் நம் வயிறு முழுமையானது போன்ற உணர்வு இருக்கும். க்ரீக் யோகர்ட், மக்கானா, பழங்கள், சில நட்ஸ் வகைகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.
சரியான நேரத்திற்கு சாப்பிடுவது:
சரியான நேரத்திற்கு சாப்பிடுவது, உடல் எடையை குறைப்பதற்கு தேவையான பழக்கமாகும். சரியான உணவு சுழற்சி, நீங்கள் சாப்பிட்ட உணவை செரிமானம் செய்ய உதவும். அது மட்டுமன்றி, நேரத்திற்கு சாப்பிட்டால்தான் உடல், அந்த உணவில் இருக்கும் புரத சத்துகளை ஈர்த்துக்கொள்ளும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஃபைபர், புரதம் நிறைந்த டயட் உணவுகளை மதிய உணவாக எடுத்துக்கொள்வது நல்லதாகும்.
கிரீன் டீ:
கிரீன் டீ குடிப்பது, நம் உடலுக்கு நன்மை பயக்கும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். இது, நம் உடலில் நல்ல மாறுதல்களை கொண்டு வரவும் உதவும். இதில், மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் கேட்டசின் சத்து இருக்கிறது. இதனால் உடலில் உள்ள கொழுப்பும் கரையும், உடல் எடையும் குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். மதியம் சாப்பிட பின், தூக்க கலக்கமாக தோன்றினால், இந்த கிரீன் டீயை குடிக்கலாம்.
சிறிய நடைப்பயிற்சி:
காலையில் எழுந்து நடைப்பயிற்சி அல்லது ஓட்டப்பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றாலும், மதிய வேளையிலும் நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமாகும். சாப்பிட்ட பின், 10 முதல் 15 நிமிடங்கள் வரை நடைப்பயிற்சி செய்து பழகுங்கள்.
மேலும் படிக்க | காலையில் படுத்தும் மலச்சிக்கலை சட்டென சரி செய்ய சூப்பரான 4 டிப்ஸ்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ