பொடுகு தொல்லை சட்டுனு சரியாகணுமா? பாதாம் எண்ணெயை இப்படி பயன்படுத்துங்க
Dandruff Home Remedies: பொடுகு பிரச்சனையால் தொல்லையா? இந்த எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் எளிதாக நிவாரணம் காணலாம்.
பொடுகு பிரச்சனை: பொடுகு பிரச்சனை பலரை பாடாய்படுத்தும் ஒரு பிரச்சனையாகும். தலையில் பொடுகு இருப்பதால், பலர் தங்களது தன்னம்பிக்கையை இழந்து விடுகிறார்கள். சில நேரங்களில் பொடுகு பிரச்சனை அதிகமாக இருப்பவர்கள் வெளியே செல்வதற்கு கூட யோசிப்பது உண்டு. பொடுகு பிரச்சனை உருவாக பல காரணங்கள் உள்ளன. இதை சரி செய்ய பலர் பலவித ரசாயனம் கலந்த பொருட்களையும் பயன்படுத்துகிறார்கள். எனினும் இவற்றால் நன்மையை விட தீமையே அதிகமாக ஏற்படுகின்றது. பொடுகு பிரச்சனையை தீர்க்க பல இயற்கையான வழிமுறைகள் உள்ளன.
பாதாம் எண்ணெய்:
பாதாம் எண்ணெய் முடி மற்றும் வேர்களுக்கு மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஈ, புரோட்டீன் மற்றும் ஃபோலிக் அமிலம் இருப்பதால் இது முடியை பளபளப்பாக மாற்றும். பாதாம் எண்ணெயைக் கொண்டு முடியை மசாஜ் செய்தால், பொடுகு பிரச்சனை மற்றும் கூந்தலில் ஏற்படும் பிற பிரச்சனைகள் நீங்கும். ஆனால், பாதாம் எண்ணெயில் சில பொருட்களைக் கலந்து பயன்படுத்தினால், தலைமுடி உறுதியாவதுடன் பளபளப்பாகவும் இருக்கும்.
மேலும் படிக்க | Fruits For Diabetes: இந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் கட்டாயம் சாப்பிட வேண்டும்
இந்த 2 பொருட்களை பாதாம் எண்ணெயில் கலக்கவும்
1.எலுமிச்சை சாறு
- பாதாம் எண்ணெயுடன் எலுமிச்சைச் சாற்றை கலந்து பயன்படுத்தினால், பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபடலாம்.
- இதற்கு, ஒரு பாத்திரத்தில் சில துளிகள் பாதாம் எண்ணெய் மற்றும் சில துளிகள் எலுமிச்சை எண்ணெய் கலந்து உங்கள் தலைமுடியில் தடவ வேண்டும்.
- பின்னர், கூந்தலை கைகளால் லேசாக மசாஜ் செய்ய வேண்டும்.
- மசாஜ் செய்த பிறகு, நீங்கள் விரும்பினால், உங்கள் தலைமுடியை 1 மணி நேரம் கழித்து ஷாம்பு செய்யலாம்.
- ஒரு இரவு முழுக்க முடியை அப்படியே இருக்க விட்டு, பின்னர் காலையில் முடியில் ஷாம்பு தடவி அலசலாம். இப்படி செய்வதன் மூலம் முடி வளர்ச்சியும் வேகமாக நடக்கும்.
2. வாழைப்பழத்தின் பயன்பாடு
- பாதாம் எண்ணெயுடன் வாழைப்பழத்தை கலந்தால், இந்த பிரச்சனைக்கு தீர்வு காணலாம்.
- இரண்டையும் ஒரு பாத்திரத்தில் நன்கு கலந்து, அந்த கலவையை முடியில் தடவவும்.
- இந்த கலவையை உங்கள் தலைமுடியில் தடவி அரை மணி நேரம் அல்லது 1 மணி நேரம் கழித்து, ஷாம்பு போட்டு முடியை அலசலாம்.
- இவ்வாறு செய்வதன் மூலம் கூந்தல் அழகாக மாறுவது மட்டுமின்றி, கூந்தல் பளபளப்பாகவும் இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | காலை எழுந்தவுடன் சுடு தண்ணீர் குடித்தால் இவ்வளவு நன்மைகளா?
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ