உடல் எடையை குறைக்க ஆரோக்கியமான இரவு உணவு: உடல் எடையை குறைப்பதில்,  உணவு மற்றும் உடற்பயிற்சி இரண்டுமே முக்கியம். பலர் தங்கள் டயட்டை மாற்றுவதன் மூலம் உடல் எடையை குறைக்க முயற்சி செய்கிறார்கள், சிலர் உடல் பயிற்சியின் உதவியுடன் எடை இழக்கிறார்கள். உடல் எடையை குறைக்க பட்டினி கிடப்பவர்கள் சிலர் இருக்கிறார்கள். உடல் எடையை குறைப்பதற்காக பட்டினி கிடப்பவர்கள், பட்டினியால் உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை இழப்பது மட்டுமல்லாமல், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் பற்றாக்குறையையும் நீங்கள் சந்திக்க நேரிடும் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக பலர் இரவு உணவைத் தவிர்க்கிறார்கள். உடல் எடையைக் குறைக்க இரவு உணவைத் தவிர்ப்பது, மிகவும் மோசமான பழக்கம். மாறாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குவதோடு, இந்த 4 வகையான டயட் உணவுகளை முயற்சித்து உடல் எடையைக் குறைக்கலாம். இந்த உணவுகள் என்னவென்று பார்ப்போம்.
லைட்டான இரவு உணவு


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மதிய உணவை விட இரவு உணவு லைட்டாக இருக்கட்டும்
உடல் எடையை குறைக்க, இரவில் லைட்டான உணவை உண்ண வேண்டும். இரவு உணவை லைட்டாக வைத்திருப்பது உங்கள் உடலுக்கு மட்டுமல்ல வயிற்றுக்கும் நல்லது. இரவில் அரிசி மற்றும் பருப்பு சாப்பிடலாம். அது உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வைத் தரும்



சாமை அல்லது குதிரைவாலி  அல்லது ஓட்ஸ் பொங்கல்


சாமை அல்லது குதிரைவாலி  இரண்டுமே மிகவும் ஆரோக்கியமானது. மேலும் அவை எடையைக் குறைக்கவும் உதவும். அதே போல ஓட்ஸ் எடையை சிறப்பகா குறைக்கும்.  பொங்கல் உங்களுக்கு எவ்வளவு ஆரோக்கியமானது என்று உங்களுக்குத் தெரியுமா, அதை எப்படி செய்வது என்று அறிந்து கொள்வோம்: ஓட்ஸ், குதிரைவாலி, சாமை இதில் ஏதேனும் ஒன்றை எடுத்து கொள்ளவும்.


1. பிரஷர் குக்கரில் பாசிபருப்பையும் சாமை அல்லது குதிரைவாலியை  சேர்த்து போட்டு  வேக வைத்துக் கொள்ளவும்


2.  இப்போது ஒரு கடாயில் நெய் அல்லது எண்ணெய் ஊற்றி அதில் சிறிது சீரகம்,  மிளகு சேர்க்கவும். பின் துருவிய இஞ்சியை சேர்க்கவும்


3. விரும்பினால் பச்சை மிளகாயையும் இதில் சேர்க்கலாம்.


4 . இப்போது சிறிது தண்ணீர், மஞ்சள் மற்றும் உப்பு சேர்க்கவும்


5. இப்போது சமைத்த பருப்பு மற்றும் ஓட்ஸைச் சேர்த்து, சிறிது நேரம் கிளறவும்


6. உங்கள் டேஸ்டியான சத்தான பொங்கல் தயார்.


குயினோவா உப்புமா


குயினோவா என்பது நம்முடைய நாட்டு சிறுதானியங்களான வரகு சாமை, தினை, குதிரைவாலி ஆகிய தானியங்களைப் போன்றது தான். அதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நிறைய ஆரோக்கிய நன்மைகளைப் பெற முடியும். 
குயினோவா புரதத்தின் வளமான மூலமாகும்.  இது உங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்க உதவுகிறது. இதன் செய்முறை


1. கேரட், முட்டைக்கோஸ், பீன்ஸ், பச்சை பட்டாணி மற்றும் பிற காய்கறிகள். பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்


2. கடாயை சூடாக்கி அதில் கடுகு தாளிக்கவும்


3.  ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு சேர்க்கவும்


4. உளுந்தை பழுப்பு நிறமாக மாறும் வரை குறைந்த தீயில் பொரிக்கவும்.


5. வெங்காயம், கறிவேப்பிலை சேர்க்கவும்.


6. அனைத்து காய்கறிகளையும் சேர்த்து கடாயை மூடி வைக்கவும்


7.  சிறிது நேரம் கழித்து அதில் மஞ்சள்தூள், உப்பு மற்றும் மிளகாய்த்தூள் சேர்க்கவும்.


8.  இப்போது கினோவா சேர்க்கவும்


9.  தேவையான தண்ணீர் சேர்த்து உப்புமா முழுவதுமாக வற்றும் வரை வேக விடவும். துருவிய இஞ்சி, பூண்டு விழுது மற்றும் சிறிது நறுக்கிய தக்காளி சேர்க்கவும்.


மேலும் படிக்க | சர்க்கரை நோயா... உடல் பருமன் குறையணுமா... ‘இந்த’ சர்க்கரைகளை தாராளமா சாப்பிடலாம்!


பருப்பு சூப்


இரவில் பருப்பு சூப் குடிப்பது உங்கள் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை பயக்கும். இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதோடு மட்டுமல்லாமல், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது. பருப்பு சூப் செய்ய தேவையானவை:


1. பிரஷர் குக்கரை கேஸ் மீது வைத்து அதில் சிறிது எண்ணெய் வைக்கவும்.


2.  இப்போது பொடியாக நறுக்கிய வெங்காயத் துண்டுகளை சேர்த்து  வெங்காயத்தை வதக்கவும்


3. இப்போது இதில் துருவிய இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்க்கவும்.
 
4. இப்போது ஊறவைத்த பருப்பை அதில் போடவும்


5. தண்ணீர், உப்பு மற்றும் மஞ்சள் கலக்கவும்


6. இப்போது அதை 15 நிமிடங்கள் கொதிக்க விடவும்


7. 15 நிமிடங்கள் கழித்து குளிர்விக்க விடவும்


8.  நீங்கள் விரும்பினால், அதனுடன் தேங்காய்ப் பால் சேர்த்து, கொத்தமல்லி இலைகளையும் பயன்படுத்தலாம்.


பிரைடு ரைஸ்


பிறைடு ரைஸ் உங்கள் வயிற்றை நிரம்ப வைத்து, உங்களை லேசாக உணர வைப்பது மட்டுமல்லாமல், நீங்கள் அதில் காய்கறிகளைப் பயன்படுத்தினால், அது உங்களுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் தருகிறது.  பிரைடு ரைஸ்தயாரிக்கும் முறை


1.  அரிசியை சிறிது நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்


2.  இப்போது பிரஷர் குக்கரில் சீரகம் மற்றும் நறுக்கிய வெங்காயத்தைப் போடவும்


3.  வெங்காயத்தை பொன்னிறமாகும் வரை வதக்கவும்.


4- இப்போது அதில் உங்களுக்கு பிடித்த பீன்ஸ் , கேரட், கோஸ்  போன்ற காய்கறிகளைச் சேர்த்து 3 நிமிடம் மூடி வைக்கவும்


5. அதில் அரிசியைச் சேர்த்து, தண்ணீர், உப்பு மற்றும் சிறிது மஞ்சள் சேர்க்கவும்


பிரஷர் குக்கரில்  6-10 நிமிடங்கள் மூடி வேக விடவும்.


சிறிது நேரம் கழித்து குக்கரை திறந்து அதில் நெய் ஊற்றவும். மிகவும் சுவயான காய்கறி கலந்த பொங்கல் தயார்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | தினமும் வெற்றிலை பாக்கு போட்டால் போதும்... கருத்தரிப்பு மையம் போகவே வேண்டாம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ