டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்
ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் இன்று டெல்லியிலும் வெட்டுக்கிளிகள் காணப்பட்டன
டெல்லி: டெல்லி-குருகான் சாலையில் துவாரகாவிற்கு அருகில் வெட்டுக்கிளிகள் படையெடுத்திருப்பதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
வட இந்தியாவில் ராஜஸ்தான், மத்திய பிரதேதம், குஜராத், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் பயிர்கள் சேதமடைந்துள்ள நிலையில் இன்று டெல்லியிலும் வெட்டுக்கிளிகள் காணப்பட்டன
இது குறித்து டெல்லி அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் சனிக்கிழமை தேசிய தலைநகர் டெல்லியின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்டங்களின் நிர்வாகங்கள் அதிஉயர் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொண்டார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Also Read | கோயம்புத்தூரில் வீட்டிற்குள் 35 குட்டிகளை போட்ட கண்ணாடிவிரியன் பாம்பு
இது குறித்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஒரு அதிகாரியிடம் பேசியபோது, தெற்கு டெல்லியில் உள்ள அசோலா பட்டி பகுதியிலும் வெட்டுக்கிளிகளி சிறிய அளவிலான கூட்டம் வந்திருப்பது தொடர்பான தகவலும் அமைச்சருக்கு தெரிவிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
டெல்லியில் வெட்டுக்கிளி தாக்குதலை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் அதிகாரிகளும் வேளாண் துறையுடன் விரிவான கலந்தாலோசனை நடத்தி நடவடிக்கைகளை துரிதப்படுத்தவேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
திரளாக படையெடுக்கும் வெட்டுக்கிளிகளின் கூட்டத்தை விரட்டுவதற்காக, மேளம் மற்றும் தாரை தப்பட்டைகளை ஒலிக்கச் செய்யவேண்டும் என்றும், தேவைப்பட்டால் டி.ஜேக்கள் மூலம் ஒலியெழுப்பி வெட்டுக்கிளிகளை தடுக்கவேண்டும் என்றும் அமைச்சர் வனத்துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளார். மேலும், குர்கானுக்கு அருகிலுள்ள பகுதிகளுக்கு நேரில் சென்று கள ஆய்வு செய்யுமாறும் வேளாண் துறை அதிகாரிகளிடம் டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் கேட்டுக்கொண்டுள்ளார்.
கொரோனாவுக்கு அடுத்து வெட்டுக்கிளிகள் என்பது தான் இன்று இந்தியாவில் அதிகம் உச்சரிக்கப்படும் பெயராக இருக்கிறது. அரபு நாடுகள், பாகிஸ்தான் வழியாக இந்தியாவுக்குள் பெருங்கூட்டம் கூட்டமாகப் படையெடுத்துவரும் இந்த வெட்டுக்கிளிகளின் தாக்குதல்களால் இந்திய விவசாயிகள் கலங்கிப் போய் இருக்கின்றனர்.
Also Read | டெல்லியில் கோரதண்டவமாடும் பாலைவன வெட்டுக்கிளிகள்
கடந்த மூன்று தசாப்தங்களில் வெட்டுக்கிளிகளின் மிகப்பெரிய தாக்குதல் தற்போது நடைபெறுவது கவலைக்குரிய விஷயமாகும்.
ட்ரோன்கள், டிராக்டர்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளித்து இந்த வெட்டுக்கிளிகளை அழிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இருப்பினும், இந்த வெட்டுக்கிளிகளின் பெருங்கூட்டமானது இதுவரை 50 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்களை சேதப்படுத்திவிட்டன.
இந்த வெட்டுக்கிளிகளின் பிரம்மாண்டமான கூட்டம் பாகிஸ்தானில் மாபெரும் அழிவை ஏற்படுத்திவிட்டு, ராஜஸ்தானுக்குள் நுழைந்து இந்தியாவில் களியாட்டத்தை தொடங்கிவிட்டன.
தற்போது வெட்டுக்கிளியின் சிறிய அளவிலான கூட்டங்களை இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் காணமுடிவதால், கவலைகளை அதிகரிக்கின்றன.
Also Read | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?
ஆப்பிரிக்கக் காடுகளில் வறட்சியைத் தொடர்ந்து மழை பெய்து மண் ஈரமாகும்போது, இந்த ‘லோகஸ்ட்’வெட்டுக்கிளிகள் எண்ணிக்கையில் பல்கி கோடிக்கணக்கில் உற்பத்தியாகின்றன. ‘லோகஸ்ட்’ என்றழைக்கப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அதிக தொலைவுக்கு புலம்பெயர்ந்து வலசை செல்லும் ஆற்றல் கொண்டவை. நாளொன்றுக்கு 150 கிலோ மீட்டர் தூரம் வரை பறக்கக்கூடியவை.
ஆப்பிரிக்கக் காடுகளிலும் பாலைவனங்களிலும் உற்பத்தியாகும் இந்த வெட்டுக்கிளிகள், கடலுக்கு மேலே 2,000 மீட்டர் உயரத்தில் பறக்கும் சக்தியுள்ளவை. ஆப்பிரிக்காவுக்கும் அரேபியத் தீபகற்பத்துக்கும் இடையே உள்ள செங்கடலைக் கடந்து ஆசியாவுக்குள் நுழைகின்றன.
தொடக்கத்தில் வண்டுகள் போல வளரும் இவை, இறக்கைகள் முளைத்தவுடன் கூட்டம் கூட்டமாகப் பறக்கத் தொடங்கிவிடுகின்றன.
Also Read | புதிய அம்சத்தை அறிமுகப்படுத்தும் பேஸ்புக்
‘லோகஸ்ட்’ வெட்டுக்கிளிகள் தனியாக இருந்தால் பிரச்சனை இல்லை. கூட்டமாகச் சேர்ந்தால் சிக்கல்தான். நம்மூரில் உற்பத்தியாகும் ஈசல்களைப் போல இந்த வெட்டுக்கிளிகள் பெருகிவிடும்.
இதுபோன்ற பூச்சிகளின் தாக்குதல் இதுதான் இந்தியாவில் முதன்முறையாக நடக்கிறதா? இல்லை என்று கூறுகிறது சரித்திரம்.
The Political History of Madura Country புத்தகத்தில் பூச்சிகளின் தாக்குதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. "1662ஆம் ஆண்டு மதுரை வழக்கத்துக்கு மாறான நிகழ்வுகளை சந்தித்தது. மக்கள் அச்சமடைந்தார்கள். முன்பு அறிந்திராத பல வகையான பூச்சிகள் கூட்டம் கூட்டமாகத் தோன்றி பொறுத்துக்கொள்ள முடியாத துர்நாற்றத்தைப் பரப்பி காற்றை மாசுபடுத்தின, பலர் திடீரென வெளிப்படையான காரணங்கள் ஏதுமின்றி இறந்துபோனார்கள். மக்களைக் கடித்து பொறுக்க முடியாத வலியை ஏற்படுத்தின. காலரா பரவியதால் ஒரே குடும்பத்தில் பதினைந்து நாட்களில் ஏழு பேர் இறந்துபோனார்கள்." இது ஒரு சான்று. காலங்களுக்கு ஏற்ப பூச்சிகளும் தங்கள் படையெடுப்புகளை தொடர்ந்துக் கொண்டே இருக்கின்றன. காலம் என்பது சுழலும் சக்கரம் தானே?