சர்க்கரை நோய்க்கு பயனளிக்கும் கிராம்பு: இந்தியாவில் நீரிழிவு நோய் என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, இந்தியா, 'நீரிழிவு நோய் தலைநகர்' என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகமாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிகரித்து வரும் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த, மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் மக்களை ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட பரிந்துரைக்கின்றனர். சரியான உணவின் மூலம் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும்.


சர்க்கரை நோயாளிகளுக்கு கிராம்பு ஒரு அருமருந்து 


கிராம்பு நுகர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உணவின் நறுமணத்தையும் சுவையையும் அதிகரிக்க பொதுவாக நாம் கிராம்பை பயன்படுத்துகிறோம். எனினும், இந்த மசாலா பொருள் ஆயுர்வேதத்தின் ஒரு பொக்கிஷம் என்றே கூறலாம். 


கிராம்பில் பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளதால், இதை சாப்பிடுவதால் பல அற்புத நன்மைகள் கிடைக்கும். கிராம்பை உட்கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 



மேலும் படிக்க | பளபளப்பான கூந்தலுக்கு செம்பருத்தியின் தந்திரமான மந்திரம்


1. நீரிழிவு நோயில் நன்மை பயக்கும்


கிராம்பில் நைஜெரிசின் என்ற பொருள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையை உறிஞ்சி, இன்சுலின் சுரக்க கணையத்தை ஊக்குவிக்கிறது. கிராம்பு சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருப்பதற்கு இதுவே காரணம்.


2. எலும்புகளை பலப்படுத்துகிறது


பல சமயங்களில் நமது எலும்பின் உறுதி குறைந்து, ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற அபாயங்கள் ஏற்படும் சாத்தியக்கூறுகள் உருவாகின்றன. இதுபோன்ற சூழ்நிலையில், கிராம்பை தவறாமல் மென்று சாப்பிட்டாலோ அல்லது உணவில் பயன்படுத்தினாலோ எலும்பின் அடர்த்தியும் உறுதியும் அதிகரிக்கிறது. குறிப்பாக நீரிழிவு நோகாளிகளுக்கு எலும்புகள் எளிதாக பலவீனமடைவதால், அவர்களுக்கு இது மிக உதவியாக இருக்கும். 


3. வாய் ஆரோக்கியத்திற்கு நல்லது


கிராம்பு ஒரு இயற்கையான மவுத் ப்ரெஷ்னராகப் பயன்படுத்தப்படுகிறது. இதை உட்கொண்டால் வாயில் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம். உங்கள் பற்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதையும் கிராம்பின் மூலம் நீக்கலாம். சுகாதார நிபுணர்கள் பெரும்பாலும் கிராம்பை நீரில் போட்டு, அந்த நீர் கொண்டு கொப்பளிக்குமாறு பரிந்துரைக்கின்றனர். இது ஈறு அழற்சி மற்றும் பிற பிரச்சனைகளை நீக்குகிறது.


கிராம்பின் பிற நன்மைகள்:


- கிராம்பு சாப்பிடுவது மலச்சிக்கல், வயிற்று வலி, இரைப்பை பிரச்சனை மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவும்.


- பல் வலி அல்லது பல்லில் புழுக்கள் இருந்தால், படுக்கைக்குச் செல்வதற்கு முன்பு 2 கிராம்புகளை மென்று சாப்பிட்டு, பின்னர் 1 கப் வெதுவெதுப்பான நீரைக் குடிக்கலாம்.


- கிராம்பு சாப்பிடுவது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.


- கிராம்பு தலைவலியை பிரச்சனைக்கும் தீர்வாக அமையும்.


- கிராம்பு சாப்பிடுவது உங்களுக்கு வாசனை பிரச்சனை இருந்தாலும் அதில் நன்மை பயக்கும்.


- கிராம்பால் தொண்டை பிரச்சினை, தொண்டை வலி போன்றவை சரியாகும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | புரோட்டீன் அள்ளிக் கொட்டிக் கிடக்கும் டோஃபு: ஊட்டச்சத்துக்களின் உறைவிடம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR