உலகளவில் அதிலும் குறிப்பாக இந்தியாவில் வயது வித்தியாசமின்றி பெரும்பாலான மக்கள் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர்.  கடந்த ஆண்டில் மட்டும் நீரிழிவு நோயால் அதிகளவிலான ஆண்களும், பெண்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தரவுகள் தெரிவிக்கிறது.  இப்போதெல்லாம் இந்திய மக்கள் பலரும் மேற்கத்திய உணவு வகைகளையே அதிகம் சாப்பிட தொடங்கிவிட்டனர், இது தான் இந்தியாவில் நீரிழிவு நோய் அதிகரிப்பதற்கு முக்கியமான காரணமாக அமைகிறது.  பதப்படுத்தப்பட்ட உணவுகள், ஜங்க் புட்ஸ்கள், உட்கார்ந்த வாழ்க்கை முறைகள் மற்றும் உடல் பருமன் ஆகியவற்றின் காரணமாக நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  டைப் 1 நீரிழிவு இளைஞர்களை அதிகம் குறிவைக்கிறது, இதனால் உடலில் இன்சுலின் சுரப்பு உற்பத்தி செய்ய இயலாமல் போகிறது.  கர்ப்பகால நீரிழிவு நோய்கள் பெரும்பாலும் பிரசவத்திற்கு பிறகு இல்லாமல் போய்விடும்.  இப்போது உங்கள் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் எந்த மாதிரியான அறிகுறிகளை உங்க உடல் வெளிப்படுத்தும் என்பதை பின்வருமாறு காண்போம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்கள் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரித்து விட்டது என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள் 


1) பொதுவாக நீரிழிவு நோயாளிகளுக்கு அதிகளவில் சிறுநீர் வெளியாவது தெரிந்தது தான் ஆனால் சர்க்கரையின் அளவு அதிகரித்துவிட்டால் வழக்கத்தை விட அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிடும்.  அதாவது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸை அகற்றவும், இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது சிறுநீரில் வெளியேற்றவும் சிறுநீரகங்கள் அதிக முயற்சி எடுக்கும்.


2) அதிகப்படியான தாகம் ஏற்படும், இதற்கு பாலிடிப்சியா என்று பொருள்.  பொதுவாக ஒருவருக்கு நீரிழிவு நோய் உள்ளதா என்பதை கண்டறிய மருத்துவர்களுக்கு உதவும் முதன்மையான அறிகுறி தான் இந்த அதிகப்படியான தாகம்.  குளுக்கோஸை வெளியேற்றுவதில் சிறுநீரகங்கள் அதிகமாக வேலை செய்வதன் காரணமாக உடலில் நீரிழப்பு ஏற்பட்டு உங்களுக்கு அதிகப்படியான தாகம் ஏற்படுகிறது.


3) உடலில் நீரிழப்பு, உமிழ்நீரில் அதிக சர்க்கரை மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைதல் ஆகியவை நீரிழிவு நோயின் அறிகுறிகளாகும்.  இதனால் உங்கள் வாய், நாக்கு மற்றும் ஈறுகளில் சில பிரச்சனைகள் ஏற்படும், ஏற்படுத்தும்.  நீரிழிவு நோய் நாக்கின் அளவு, வடிவம் மற்றும் நிறத்தை மாற்றக்கூடும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கிறது.


4) குறைந்த இன்சுலின் அளவு கார்போஹைட்ரேட்டுகளை லிப்பிட்களுடன் மாற்றுவதன் மூலம் உங்கள் உடலின் ஆற்றலில் பாதிப்பு ஏற்படும்.  அதிகளவு சர்க்கரை உங்களுக்கு காரணமே இல்லாமல் பெரும் சோர்வை ஏற்படுத்தக்கூடும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.


5) ஆண்களுக்கு உயர் இரத்த சர்க்கரை அளவு டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தியைத் குறைக்கக்கூடும்.  அதனால் உணவுமுறை மற்றும் வாழ்க்கைமுறைகளில் சில மாற்றங்களை மேற்கொண்டு உடலில் ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.


மேலும் படிக்க | Weight Loss Tips: 7 நாட்களில் 5 கிலோ எடையை வேகமாக குறைப்பது எப்படி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ