Diabetes Diet Tips: நீரிழிவு நோய் இன்று ஒரு பொதுவான நோயாகிவிட்டது. மோசமான வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து குறைபாடு, நீண்ட நேரம் அமர்ந்து இருப்பது, உடல் உழைப்பு இல்லாமை போன்ற காரணங்களால் சர்க்கரை நோய் வரலாம். உடலில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மக்கள் பெரும்பாலும் பல வகையான மருந்துகளை எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் மருந்துகளை உட்கொள்வதோடு, நீரிழிவு நோயில் உணவு முறையிலும் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். சரியான உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை மூலம் இரத்த சர்க்கரை அளவை குறைக்க முடியும். இந்த நோயை சரியான நேரத்தில் கட்டுப்படுத்தாவிட்டால், உடல் பல கடுமையான நோய்களுக்கு ஆளாக நேரிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உலக அளவில் ஏராளமான மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க, பொதுமக்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். நீரிழிவு நோயாளிகள் சில குறிப்பிட்ட்ட உணவுகளை உட்கொள்வதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். சில உணவுகளை தவிர்த்தால், சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கலாம். இதில் சில பழங்களும் அடங்கும். சில பழங்களை சாப்பிடுவதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். எனினும் அதற்கு நேர் மாறாக சில பழங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கச்செய்யும். ஆகையால், நீரிழிவு நோயாளிகள் இந்த பழங்களை அடையாளம் கண்டு, இவற்றை சாப்பிடுவதை தவிர்க்க வெண்டும். இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் பழங்களை பற்றி இந்த பதிவில் காணலாம். 


நீரிழிவு நோயாளிகள் தவிர்க்க வேண்டிய பழங்கள் இவைதான்:


நீரிழிவு நோயில் அன்னாசிப்பழம் உட்கொள்வதால் ஏற்படும் தீங்கான விளைவுகள்


சர்க்கரை நோய் இருந்தால் அன்னாசிப்பழம் (Pineapple) சாப்பிடக்கூடாது. இதனால் சர்க்கரை அளவு (Sugar Level) அதிகரிக்கும் அபாயம் உள்ளது. அன்னாசிப்பழத்தை உட்கொள்வதால் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. மேலும் இதில் அதிக கார்போஹைட்ரேட்டுகளும் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் இதனை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.


நீரிழிவு நோயில் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது


வாழைப்பழத்தில் அதிக கிளைசெமிக் குறியீடு உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது. ப்ரீ-டயாபடிக் நோயாளிகள் மற்றும் நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில், பழுத்த வாழைப்பழங்களை விட பச்சை வாழைப்பழங்கள் சர்க்கரை அளவைக் குறைக்கின்றன. 


மேலும் படிக்க | உடல் பருமன் முதல் ரத்த கொதிப்பு வரை.... நோய்களை நிர்மூலமாக்கும் பீட்ரூட் ஜூஸ்!


சர்க்கரை நோய் உள்ளவர்கள் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்


நீரிழிவு நோயாளிக்கு மாம்பழத்தை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது அல்ல, ஆனால் அதை சரியான அளவில் உட்கொள்ள வேண்டும் என உணவியல் நிபுணரின் கூறுகிறார்கள். அதே நேரத்தில், சர்க்கரையின் அளவு எப்போதும் அதிகமாக இருந்தால், அதை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க, அதன் உட்கொள்ளலை வெகுவாகக் குறைக்க வேண்டும்.


நீரிழிவு நோயில் திராட்சை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்


நீரிழிவு (Diabetes) நோயாளிகள் திராட்சை சாப்பிடக்கூடாது. இதில் அதிக அளவு பிரக்டோஸ் உள்ளது, இது நீரிழிவு நோயை அதிகரிக்கிறது. இவை நார்ச்சத்து நிறைந்தவை மற்றும் குறைந்த கலோரி கொண்டவை. ஆனால், இவற்றில் அதிக அளவு சர்க்கரை உள்ளது. எனவே இதை குறைந்த அளவில் உட்கொள்ளாவிட்டால் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெற, இதை எப்போதும் குறைந்த அளவிலேயே சாப்பிட வேண்டும்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | சர்க்கரை நோயாளிகள் கவலையின்றி சாப்பிடக் கூடிய சில ‘இனிப்பான’ பழங்கள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ