முறையற்ற உணவு முறைகளால் குடல் ஆரோக்கியம் பாதிப்பு என்பது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நார்ச்சத்து  மிக்க உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஆனால் இப்போது நொறுக்குத் தீனிகளை அதிகம் உணவாகவும், நார்ச்சத்துகள் மிக்க உணவுகள் நொறுக்குத் தீனிகள் போலவும் சாப்பிடுவதால் உடல் உபாதைகளுக்கு வழி வகுக்கின்றன. இது ஆயுளுக்கும் நல்லதல்ல என்பதால் உணவு முறை மாற்றும் குறித்து கட்டாயம் யோசிக்க வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மலக்குடல் பிரச்சனைகளால் செரிமானம் பாதிக்கப்பட்டு மற்றப் பிரச்சனைகளுக்கு வித்திடுகின்றன. இதில் இருந்து விடுபட வேண்டும் என்றால் உரிய மருத்துவ ஆலோசனை அவசியம். அதேநேரத்தில் சிறிய பிரச்சனைகளுக்கு வீட்டில் இருக்கும் சில பொருட்கள் வழியாகவே நிவாரணம் தேடிக் கொள்ளலாம். அந்த வகையில் செரிமான பிரச்சனை இருப்பவர்கள் வீட்டிலேயே ஜீரணப் பொடி தயார் செய்து தினம் தோறும் சாப்பிட்டு வந்தால் ஓரிரு மாதங்களில் இதில் இருந்து நிவாரணம் பெறலாம். அந்தவகையில் செரிமானப் பொடி தயார் செய்வது எப்படி என்பதை இங்கே பார்க்கலாம். 


மேலும் படிக்க |  உடல் பருமன் குறைய.. காலை உணவில் சேர்க்க வேண்டியதும்... சேர்க்க கூடாததும்..!


ஜீரண பொடி செய்வது எப்படி?


தேவையான பொருட்கள்:


ஓமம் – 100gm
கருஞ்சீரகம் – 50gm
வெந்தயம் – 250gm


செய்முறை:


மேலே உள்ள 3 பொருட்களையும் சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல்வறுத்து, தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி பாட்டலில் சேமிக்கவும் இக்கலவையை ஒரு ஸ்பூன் அளவு இரவு நேரத்தில் வெது வெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.


இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது. தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும் மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப் படுகிறது. இந்த கலவையை 2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது.


செரிமான பொடி பயன்கள்:


தேவையான கொழும்பு எரிக்கப் பட்டு தேவையற்ற கொழுப்பு நீக்கப்படும். இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது. இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீங்கும். இருதயம் சீராக இயங்குகிறது. சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீக்கப்படுகிறது. நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது. மலச்சிக்கல் நீங்குகிறது. நினைவாற்றல் மேம்படுகிறது. கேட்கும் திறன் அதிகரிக்கிறது. உடலில் உறுதியும், தேக மினு மினுப்பும், சுறு சுறுப்பும் உண்டாகிறது. எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது. ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள் வலுவடைகிறது. கண் பார்வை தெளிவடைகிறது. நீரிழிவு நோய் பராமரிக்கப் படுகிறது.


மேலும் படிக்க | Dementia: இளம் வயதினருக்கும் மறதி நோய் வருமா? ஷாக் காெடுக்கும் சமீபத்திய சர்வே..!


(இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் தகவல்கள் பொதுவானவை. ஜீ நியூஸ் இதனை உறுதிப்படுத்தவில்லை. உங்களுக்கான பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வதே சிறந்தது)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ