பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும்? பழங்கள் சாப்பிடுவதில் செய்யக்கூடாத முக்கிய தவறுகள்!
பழங்களில் ஃப்யூமரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற அமிலங்கள் மற்றும் நுண்ணுயிர் நொதிகள் உள்ளன.
பொதுவாக நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமானால் ஆரோக்கியமான உணவுப்பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். நமது உணவுப்பழக்கம் ஆரோக்கியமானதாக இருந்தால் நமக்கு எவ்வித ஆரோக்கிய சிக்கல்களும் ஏற்படாமல் இருக்கும். உணவு விஷயத்தில் நாம் செய்யக்கூடிய சில தவறான செயல்கள் நமக்கு பல பின்விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல, அதேபோல ஆரோக்கியத்திற்கு நன்மையளிக்கும் பலங்களை சாப்பிடுவதிலும் சில சிக்கல்கள் உள்ளது. அதாவது பழங்களை எப்போது எப்படி சாப்பிட வேண்டும் என்கிற சில விஷயம் உள்ளது, இதனை கடைபிடிப்பதன் மூலம் எவ்வித ஆரோக்கிய பிரச்சனைகளும் ஏற்படாமல் உங்களை பாதுகாத்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | Paneer: நினைவாற்றலை அதிகரிக்கும் பன்னீரை ‘இப்படி’ சாப்பிடுங்க... நிபுணர்கள் அட்வைஸ்!
நாம் சாப்பிடும் பழங்கள் வயிற்றில் செரிமானம் ஆக ஒரு மணி நேரம் மட்டுமே ஆகிறது, எனவே திட உணவுக்குப் பிறகு பழங்களைச் சாப்பிடுவது செரிக்கப்படாத உணவைசிறுகுடலுக்குத் தள்ளும், அஜீரணம் மற்றும் வீக்கம், வாயுக்கள் மற்றும் வாய்வு போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். அதனால் திட உணவு சாப்பிடுவதற்கும், பழங்கள் சாப்பிடுவதற்கும் இடையே இரண்டு மணிநேர இடைவெளியை வைத்திருப்பது நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அதுவே நீங்கள் முதலில் பழங்களை சாப்பிட்டிருந்தால், திட உணவை சாப்பிடுவதற்கு முன் ஒரு மணி நேரம் காத்திருக்க வேண்டும். உதாரணமாக காலை 8 மணிக்கு நீங்கள் பழங்களை சாப்பிட்டால், காலை 9 மணிக்கு திட உணவையோ அல்லது காலை உணவையோ சாப்பிடலாம். நீங்கள் முதலில் திட உணவை சாப்பிட்டிருந்தால், காலை உணவுக்கு இரண்டு மணி நேரம் கழித்து பழங்களை சாப்பிடலாம்.
பழங்களில் ஃப்யூமரிக் அமிலம், டார்டாரிக் அமிலம், ஆக்ஸாலிக் அமிலம், மாலிக் அமிலம் போன்ற அமிலங்கள் மற்றும் நுண்ணுயிர் நொதிகள் உள்ளன. அவை உடலில் தூங்குவதற்குத் தேவையான மெலடோனின் உற்பத்தியைத் தொந்தரவு செய்கின்றன. அதனால் இரவு நேரங்களில் பழங்களைச் சாப்பிடக் கூடாது, அதற்கு பதிலாக பழங்களை மாலை நேர சிற்றுண்டியாக மாலை 4 மணியளவில் சாப்பிடுவது நல்லது.
காலையிலோ அல்லது உணவுக்கு இடையிலோ பழங்களை உட்கொள்வது எப்போதும் நல்லது. பழங்களில் சிறப்பான அளவில் நார்ச்சத்து இருப்பதால் இதனை நீங்கள் உணவுடன் சேர்த்து சாப்பிட வேண்டிய தேவையில்லை. மேலும் ஒரு நேரத்தில் ஒரு பழத்தை சாப்பிடுவது எப்போதும் நல்லது என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மேலும் படிக்க | தொப்பை குறைய படுக்கைக்கு முன் இந்த உணவுகளை சாப்பிடுங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ