Yoga Asanas For Menstrual cramps Tips In Tamil : பெண்கள் பலருக்கு மாதவிடாய் காலத்தில் தாங்கி கொள்ள முடியாத அளவிற்கு வலி ஏற்படும். அப்படி வலி ஏற்படும் சமயங்களில் பலருக்கு கை, கால்களை கூட அசைக்க முடியாத அளவிற்கு வலி ஏற்படலாம். இந்த சமயத்தில், யோகாசனங்கள் செய்து பார்க்க முடியுமா என பலரால் நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி இருக்கும் போது, யோகாசனங்கள் மாதவிடாய் வயிற்று வலிக்கு தீர்வாக இருக்குமா என்ற கேள்விக்கு, நிச்சயமாக தீர்வாக இருக்கும் என்கின்றனர் மருத்துவர்கள். இது தவிர, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் மன போராட்டங்களையும் (Mood swings) யோகாசனங்கள் கையாள உதவுமாம். மாதவிடாயின் போது ஏற்படுவது வயிறு, இடுப்பு, முதுகு, முதுகின் கீழ்ப்பகுதி ஆகிய பகுதிகளில்தான் பெரும்பாலான சமயங்களில் வலி ஏற்படும் என கூறப்படுகிறது. இந்த வலி வரும் பகுதிகளை இணைத்து, மாதவிடாய் வலியை சமாளிக்க சில யோகாசனங்கள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பாலாசனா:


இந்த யோகாசனத்தை மிகவும் சிரமப்பட்டு செய்ய வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதனை ஆங்கிலத்தில் சைல்ட்ஸ் போஸ் என கூறுவர். மாதவிடாய் காலத்தில் முதுகில் ஏற்படும் வலியை நிவர்த்தி செய்ய, இந்த யோகாசனத்தை செய்யலாம். 


எப்படி செய்ய வேண்டும்?


>முதலில் தரையில் மண்டியிட்டு உட்கார வேண்டும்
>பின்னர் உங்களது குதிங்கால்கள் உங்களது இரண்டு பின்பகுதிகளிலும் படும்படி அமரவும்
>அப்படியே உங்கள் கைகளை முன்புறமாக நீட்டி தலை, தரையில் படும்படி படுக்கவும்.
>இந்த நிலையில் சில வினாடிகள் மூச்சை இழுத்து விடவும். 


மர்ஜார்யாசனா:


இந்த ஆசனம் செய்வதால் வலி ஏற்படும் வயிற்று தசைகளுக்கு நிவாரணம் கிடைக்கலாம். 


செய்வது எப்படி?


>கை, கால்களை உபயோகித்து நான்கு கால் பிராணி போல தரையில் முட்டி போட்டு நிற்க  வேண்டும்.
>முதல்ல் உங்கள் முதுகை நன்கு மேல்புறமாக எழுப்ப வேண்டும், அப்படி செய்கையில் தலை உள் நோக்கி நகர வேண்டும்.
>அடித்து உங்கள் முதுகு உள்புறமாக நகர வேண்டும். அப்போது உங்களது முகம் மேல் நோக்கி இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | டயட், உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடையை குறைக்க வழி இருக்கா? இது தெரியாம போச்சே..



ஜாதரா பரிவர்தானாசனா:


இந்த ஆசனம் செயதால் உங்கள் வயிற்றின் கீழ் பகுதியில் இருக்கும் வலி சரியாகலாம். 


எப்படி செய்வது?


>தரையில் நேராக படுத்துக்கொள்ள வேண்டும்
>இரு புறமும் கைகளை அகலமாக விரித்து வைத்துக்கொள்ள வேண்டும்
வலது காலை இடது புறமாக நீட்டி முட்டியை மடக்க வேண்டும். அப்போது உங்கள் இடது கை, வலது காலின் முட்டியின் மீது இருக்க வேண்டும்.
>இதே போல இடது கால் பக்கமும் செய்ய வேண்டும். 
>இப்படி செய்கையில் எந்த காலை மடக்குகிறீர்களோ அந்த காலின் பக்கமாக உங்கள் முகம் திரும்பியிருக்க வேண்டும். 


கபோடாசனா:


இந்த ஆசனம் செய்வதால் உங்கள் இடுப்பு மற்றும் முதுகின் கீழ்ப்பகுதியில் ஏற்படும் வலி குறையலாம்.



எப்படி செய்வது?


>முதலில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். 
>வலது காலை முன் புறமாக மடக்க வேண்டும். பின்னர், இன்னொரு காலை பின்புறமாக நீட்ட வேண்டும். 
>இதை செய்கையில் கைகளை இருபுறமும் தரையில் வைத்துக்கொள்ளலாம்
>பின்னர், மார்பு பகுதியை மேல் நோக்கி நிமிர்த்தி மூச்சை இழுத்து விடவும். 


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | உடல் எடை சீக்கிரம் அதிகரிக்க இந்த 5 பொருட்களை கலந்து குடியுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ