தினமும் அரிசி உணவு சாப்பிடுகிறீர்களா? அப்போ இதில் கவனம் தேவை!
அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடுவதால் கரோனரி தமனி நோய் (பிசிஏடி) ஏற்படும் என்று முன்னர் சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது, இந்த நோய் மரணத்திற்கான திறவுகோலாகும்.
நம்மில் பலரின் விருப்பமான மற்றும் அன்றாட உணவாக இருப்பது ரொட்டியும், அரிசியும் தான், இந்த உணவை தான் நாம் தினமும் சாப்பிட்டு வருகிறோம், இவை நமது ஆரோக்கியத்திற்கு நல்லதா அல்லது ஆரோக்கியத்திற்கு பாதிப்பு ஏற்படுத்துமா என்பதை பற்றி நாம் யாரும் யோசிப்பதில்லை. நாம் சாப்பிடக்கூடிய வெள்ளை அரிசியானது ஆரோக்கியமற்ற உணவு என்று கூறப்படாவிட்டாலும் அதிகளவில் வெள்ளை அரிசி போன்ற தானியங்களை சாப்பிடுவது இதயம் சம்மந்தமான மற்றும் உடல் சம்மந்தமான நோய்களை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது. இதுபோன்று சுத்திகரிக்கப்பட்ட தானியங்கள் சாப்பிடுவது உங்கள் இதயத்திற்கு பல ஆரோக்கிய சீர்கேடுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். சிலருக்கு அரிசி உணவுகள் சாப்பிடுவது தான் சௌகரியமாக இருக்கும், அப்படி அரிசி உணவுகளையே அதிகம் சாப்பிடுபவர்கள் இனிமேல் சாப்பிடும் அளவை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம் இல்லாவிட்டால் பல யூதனால பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும் படிக்க | வெள்ளை முடியை கருமையாக்க இந்த மரத்தின் இலைகளை பயன்படுத்துங்க
பொதுவாக சர்க்கரை தான் இதயத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்பட்டு வருகிறது, சர்க்கரை எவ்வளவு ஆபத்தை விளைவிக்கிறது அதேயளவு தான் அரிசி உணவும் என்று கூறப்படுகிறது. அரசி உணவை அதிகமாக சாப்பிடுபவர்களுக்கும் இதயமே சம்மந்தமான நோய்கள் அதிகமாக ஏற்பட வாய்ப்பு இருப்பதாக இதயம் நோய் நிபுணர்கள் கூறுகின்றனர். அதிகப்படியான செயற்கையான இனிப்பு சுவையூட்டப்பட்ட தின்பண்டங்கள் மற்றும் அரிசி உணவுகள் சாப்பிடுபவர்கள் அடிக்கடி இதய ஆரோக்கியத்தை பரிசோத்தித்து கொள்வது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடிக்குவதால் கரோனரி தமனி நோய் (பிசிஏடி) ஏற்படும் என்று முன்னர் சில ஆய்வுகளின் மூலம் கண்டறியப்பட்டது, இந்த நோய் மரணத்திற்கான திறவுகோலாகும். இனிப்பு அல்லது எண்ணெய்யில் செய்த உணவுகளை அதிகம் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்தை விட இந்நோய் அதிகப்படியான ஆபத்தை ஏற்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க அரிசி போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை சாப்பிடுவதை காட்டிலும் ஓட்ஸ் போன்ற முழு தானியங்களை சாப்பிடுவது நல்லது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் படிக்க | பயத்தம் பருப்பின் அபூர்வ நன்மைகள்: பல நோய்களுக்கு தீர்வு காணலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ