பூண்டு ஒரு சிறந்த உணவு, நல்ல மருந்து, நறுமணப் பொருள் மற்றும், அழகு சாதனப் பொருள் என்பது தெரியும். அதை பல்வேறு விதங்களில் பயன்படுத்தி பலனடைகிறோம். உணவை  சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பூண்டின் மருத்துவக் குணங்கள் எண்ணற்றவை. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில்  எல்லா வகை உணவுகளிலும் பூண்டு சேர்க்கப்படுகிறது. ஆண்கள் பூண்டு சாப்பிட்டால், அவர்களின் பாலியல் ஆரோக்கியம் மேம்படும். 


பூண்டில் அதிகளவு தாதுக்களும், வைட்டமின்களும் அயோடின், சல்பர், குளோரின் என் பலவித சத்துக்கள் இருக்கின்றன. பூண்டை சாப்பிடும் விதம், அது கொடுக்கும் நன்மையை தீர்மானிக்கும். பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும் (Weight Loss), நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். 


ALSO READ | பெயரோ சுண்டைக்காய்! மருத்துவ பண்புகளோ முருங்கைக்காயை மிஞ்சும்!!


அதேபோல, பூண்டை வறுத்து சாப்பிடுவதால் ரத்த அழுத்தம் (Blood Pressure), அதிக கொலஸ்ட்ரால் ஆகியவை குறையும். இதனால், இதய் நோய், மாரடைப்பு, ரத்த நாளங்கள் அடைப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் பாதுகாக்கலாம்.  


வறுத்த பூண்டை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைவதுடன், ஆரோக்கியமும்  வறுத்த பூண்டு சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், அஜீரணமாக இருந்தாலும் கூட உணவு நன்கு செரிமானம் ஆகிவிடும். 


வறுத்த பூண்டை தினசரி உண்பதை வழக்கமாக வைத்துக் கொண்டால், உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். உடலில் உள்ள கெட்ட நீர் மற்றும் கொழுப்பு வெளியேறும். கொலஸ்ட்ராலின் அளவை  சீராக பராமரிக்கப்படும்.
வறுத்த பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியாக்கள் உடல் சோர்வை நீக்குகிறது. மேலும் உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீடிக்கச் செய்கிறது. 


வறுத்த பூண்டு சாப்பிட்டால் உடலில் புற்று நோய் ஏற்படும் ஆபத்து குறைகிறது (Preventing cancer). உடலுக்கு நோய் எதிர்ப்பு மண்டலமாக இருக்கும் பூண்டை சமைத்தும், பச்சையாகவும் சாப்பிடுவது போல, வறுத்தும் சாப்பிட்டுப் பாருங்கள். அதன் நன்மைகளை நேரடியாக அறிந்துக் கொள்ளுங்கள்.


READ ALSO | மிளகை இப்படி பயன்படுத்தினால் உடல் எடை கேரண்டியாக குறையும்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR