Peanut Benefits: டாக்டர்களின் எதிரி! இந்தக் கடலை நிலக்கடலை
வேர்க்கடலையில் உள்ள புரதச்சத்து உள்ளிட்ட ஊட்டச்சத்துக்கள் நோய்களை நம்மிடையே அண்ட விடாமல் தடுக்கும்
நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால், அது மிகவும் நல்லது. அதிலும் குறிப்பாக, இனப்பெருக்கம் விரைவாக நடக்க உதவும். எனவே நிலக் கடலையை தொடர்ந்து சாப்பிடும் பெண்களின் கர்பப்பை சீராக செயல்படுவதுடன் கர்பப்பைக் கட்டிகள், நீர்கட்டிகள் ஏற்படாது.
நிலக்கடலையில் உள்ள மாங்கனீஸ் சத்து, மாவுச்சத்து மற்றும் கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுவதோடு, நாம் உண்ணும் உணவில் இருக்கும் கால்சியத்தை உடல் ஈர்க்க உதவுகிறது.
நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும் என்ற தவறான எண்ணம் இருக்கிறது. உண்மையில், உடல் எடையை பராமரிக்க நினைப்பவர்களுக்கும் வேர்க்கடலை (Peanut for Weight Loss) சிறந்தது. அதில் உள்ள ரெஸ்வரெட்ரால் என்ற சத்து இதய வால்வுகளை பாதுகாத்து, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது.
இளமையை பராமரிக்க உதவும் நிலக்கடலையில் உள்ள பாலிபீனால்ஸ் என்ற ஆண்டி ஆக்சிடென்ட் (Antioxidant in Peanut) நோய்வருவதை தடுப்பதுடன் இளமையை பராமரிக்கவும் பயன்படுகிறது. மூளை வளர்ச்சிக்கு உதவும் விட்டமின் 3 நியாசின் உள்ள நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டால், ஞாபக சக்தியை அதிகரிக்கிறது.
Also Read | நிலக்கடலைக்கும் இனப்பெருக்கத்திற்கும் உள்ள தொடர்பு
நிலக்கடையில் உள்ள பரிப்டோபான் என்ற அமினோ அமிலம், செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப் பொருள் உற்பத்திக்கு பயன்படுகிறது. இதனால், மூளை நரம்புகளை தூண்டி, மனஅழுத்தத்தை போக்குகிறது. நிலக்கடைலையை தொடர்ந்து சாப்பிட்டால் மன அழுத்தமே ஏற்படாது.
100 கிராம் நிலக்கடலையில் கீழ்க்கண்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.
கார்போ ஹைட்ரேட்- 21 மி.கி.
நார்சத்து- 9 மி.கி.
கரையும் கொழுப்பு – 40 மி.கி.
புரதம்- 25 மி.கி.
ட்ரிப்டோபான்- 0.24 கி.
திரியோனின் – 0.85 கி
ஐசோலூசின் – 0.85 மி.கி.
லூசின் – 1.625 மி.கி.
லைசின் – 0.901 கி
குலுட்டாமிக் ஆசிட்- 5 கி
கிளைசின்- 1.512 கி
விட்டமின் -பி1, பி2, பி3, பி1, பி2, பி3, பி5, பி6, சி
கால்சியம் – 93.00 மி.கி.
காப்பர் – 11.44 மி.கி.
இரும்புச்சத்து – 4.58 மி.கி.
மெக்னீசியம் – 168.00 மி.கி.
மேங்கனீஸ் – 1.934 மி.கி.
பாஸ்பரஸ் – 376.00 மி.கி.
பொட்டாசியம் – 705.00 மி.கி.
சோடியம் – 18.00 மி.கி.
துத்தநாகச்சத்து – 3.27 மி.கி.
தண்ணீர்ச்சத்து – 6.50 கிராம்.
போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. போலிக் ஆசிட் சத்துக்களும் நிரம்பி உள்ளது.
READ ALSO | ஏழைகளின் முந்திரி' வேர்க்கடலை மார்பக புற்றுநோயைத் தடுக்கும் மாயம் என்ன?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR