ஃபிட்டாக இருக்கணுமா, காலையில் எழுந்ததும் இந்த பானங்களை குடிங்க
Empty Stomach Drinks: ஆரோக்கியமான உணவுகள் அல்லது பானங்களுடன் நாளைத் தொடங்கினால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.
ஆரோக்கியமாக இருக்க, நமது தினசரி நாளை சிறப்பாக தொடங்குவது மிகவும் அவசியம். ஆரோக்கியமான உணவுகள் அல்லது பானங்கள் மூலம் நமது நாளைத் தொடங்கினால், நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம். அதன்படி காலையில் எதை நாம் சாப்பிட்டாலும் சரி அது நமது உடல் சத்துக்களை எளிதில் உறிஞ்சிக் கொள்கிறது. அதனால்தான் காலையில் வெறும் வயிற்றில் ஆரோக்கியமான பொருட்களை சாப்பிடுவது அவசியமாகும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், காலையில் வெறும் வயிற்றில் நீங்கள் குடிக்கக்கூடிய சில பானங்களைப் பற்றி இங்கே கூறியுள்ளோம். அவை எது என்பதை தெரிந்து கொள்வோம்.
இந்த பானங்களை தினமும் வெறும் வயிற்றில் குடிக்கவும்
கொத்தமல்லி தண்ணீர் - கொத்தமல்லி தண்ணீர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். கோடையில், கொத்தமல்லி தண்ணீர் குடிப்பதால், உடல் குளிர்ச்சியடைகிறது, வயிற்றில் ஏற்படும் எரியும் உணர்வை தணிக்கிறது.கொத்தமல்லி நீரில் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. எனவே, காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லித் தண்ணீரைக் குடிப்பதன் மூலம், அதில் உள்ள அனைத்து ஊட்டச்சத்துக்களையும் உடல் எளிதில் உறிஞ்சிவிடும். இதற்கு 2 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதை 2 கிளாஸ் தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டவும். இப்போது இந்த தண்ணீரை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
மேலும் படிக்க | வாழைப்பழத்தின் உதவியுடன் முடிக்கு கெரட்டின் கிரீம் தயாரிக்கலாம்
எலுமிச்சை தண்ணீர்- பெரும்பாலானோர் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை சாறு குடிப்பார்கள். இதை உங்கள் காலை பான உணவிலும் சேர்த்துக்கொள்ளலாம். வெறும் வயிற்றில் எலுமிச்சை குடிப்பது வயிற்று கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதனை தினமும் உட்கொள்வதன் மூலம், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.இதற்கு வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை கலந்து பருகலாம்.
பழச்சாறு- காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பதும் மிகவும் பலன் தரும். இதனால் பழங்களில் உள்ள அனைத்து சத்துக்களையும் உடல் எளிதில் எடுத்துக்கொள்ள முடியும். காலையில் வெறும் வயிற்றில் ஆரஞ்சு, மாதுளை, ஆப்பிள் போன்றவற்றின் சாறு குடிக்கலாம். ஆனால் இந்த ஜூஸில் சர்க்கரை சேர்க்கக் கொள்ளக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிப்பது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குகிறது, அதே நேரத்தில், எடையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.
எலுமிச்சை, இஞ்சி, தேன், இலவங்கப்பட்டை மற்றும் மிளகு- மூலிகைகள் மூலம் நம்முடைய முன்னோர்கள் ஆரோக்கியத்தை பராமரித்து வந்தனர். இலவங்கப்பட்டை, மிளகு அதனுடன் தேன், இஞ்சி மற்றும் லெமன் சாறு இணைத்து தண்ணீரில் கொதிக்க வைத்து உண்பது நம்முடைய ஆரோக்கியத்தினை வலுப்படுத்த கூடியதாக அமையும். காலையில் எழுந்ததும் இதை குளிர் மற்றும் மழை காலங்களில் பருக வேண்டியது அவசியமாகும். இந்த காலகட்டமானது குளிர்காலமாக இருப்பதால் நீங்கள் நாளையிலிருந்து இதைத் தொடரலாம்.
(பொறூப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | யார் யாருக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்? வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR