நைட் நிம்மதியா தூங்கணுமா... சூடாக இந்த 3 பானங்களை மறக்காம குடிங்க!
![நைட் நிம்மதியா தூங்கணுமா... சூடாக இந்த 3 பானங்களை மறக்காம குடிங்க! நைட் நிம்மதியா தூங்கணுமா... சூடாக இந்த 3 பானங்களை மறக்காம குடிங்க!](https://tamil.cdn.zeenews.com/tamil/sites/default/files/styles/zm_500x286/public/2024/12/27/462562-chamomile.png?itok=JdK9S87N)
Health Tips: நீங்கள் இரவு தூங்கும் செல்வதற்கு முன்பு இந்த மூன்று சூடான பானங்களை குடித்தால் நிம்மதியான தூக்கம் வரும். இதுகுறித்து இங்கு விரிவாக காணலாம்.
Health Tips For Good Quality Sleep: இரவு நன்றாக தூங்குவது உடலுக்கும், மனதுக்கும் என ஒட்டுமொத்தமாகவே ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். இன்றைய காலகட்டத்தில் பலரும் சரியான தூக்கமின்மையால் பாதிக்கப்படுகின்றனர். குறைவான தூக்கத்தால் அவர்கள் நாள் முழுவதும் சோர்வாகவும், ஆற்றல் இன்றியும் மனசோர்வனோடும் காணப்படுவார்கள்.
தூக்குமின்மையின் பின்னணியில் பல்வேறு காரணிகள் இருக்கின்றன. குறிப்பாக சுற்றுச்சூழல், வாழ்க்கை முறை, மனநிலை போன்றவையும் தூக்கத்தில் பெரும் தாக்கம் செலுத்தும். எனவே ஆரோக்கியமான சில விஷயங்களை பின்பற்றும்போது தூக்குமின்மை பறந்து போகும் என்பார்கள். தூக்கம் வருவதற்கு வீட்டு வைத்தியங்களில் பல்வேறு நடைமுறைகள் இருக்கின்றன. இரவில் எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்ளவது, யோகாசனங்கள், சிறு சிறு உடற்பயிற்சிகளை செய்ய சொல்லுவார்கள்.
சூடான பானங்கள்
தற்போதைய நவீன காலகட்டத்தில் லேப்டாப், மொபைல் போன்றவற்றில் இருந்து இரவு நேரத்தில் தூரத்தை கடைபிடித்தால் தூக்கம் உங்களை தேடிவரும் எனலாம். அதிகமாக திரைகளை பார்க்கும்போது தூக்கம் சரியாக இருக்காது. நீங்கள் நீண்ட நேரம் தூங்கினால் கூட அது ஆழமான தூக்கமாக இல்லையென்றாலும் பிரச்னைதான். மன நிம்மதியின்றி பதற்றத்துடன் நீங்கள் தூங்கினால் ஆழமான தூக்கம் வராது.
மேலும் படிக்க | ஆண்மை பிரச்சனை முதல் ஆஸ்டியோபோரோஸிஸ் வரை... தினம் காலையில் பூசணி விதை ஒன்றே போதும்
அந்த வகையில், நீங்கள் இரவு தூங்கும் செல்வதற்கு முன்பு இந்த பானங்களை குடித்தால் நிம்மதியான தூக்கம் கிட்டும் என கூறப்படுகிறது. அந்த வகையில், சூடான இந்த மூன்று பானங்களை இங்கு காணலாம். சூடான இந்த பானங்களை குடிப்பதன் மூலம் மனநிலை சீராகும், பதற்றம் குறையும். மெலடோனின் போன்ற தூக்கத்திற்கான ஹார்மோன்கள் சீராக சுரக்கும். உங்களுக்கு இதனால் ஆழமான தூக்கம் கிடைக்கும்.
தேன் கலந்த சூடான பால்
பாலில் உள்ள டிரிப்டோபன் மூலக்கூறும், தேனில் உள்ள இனிப்பும் உங்களுக்கு நிதானத்தை அளிக்கக் கூடியவை. டிரிப்டோபன் என்பது அமினோ அமிலம் ஆகும். இது உடலில் செரோடோனின் உற்பத்தியை அதிகரிச்செய்யும். இந்த செரோடோனின் உங்களை நிதானமாக வைத்திருக்க உதவும்.
மஞ்சள் தூள் பால்
இதில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் அதிகம் இருக்கின்றன. உங்களின் மனநிலையை அமைதியாக்கும். மேலும், தசைகளின் இறுக்கமும் குறையும். இதனால் உங்களுக்கு தூக்கம் நன்றாக வரும்.
சாமந்தி டீ
சாமந்தி டீ தூள் கடைகளில் அதிகம் விற்கப்படுகின்றன, அவற்றை நீங்கள் சூடாக குடித்தால் மன அழுத்தம் குறையும். இதனால் எளிதாக தூ்ககம் வரும். இரவு நேரத்தில் இதனை கண்டிப்பாக குடியுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மற்றும் வீட்டு வைத்தியங்கள் சார்ந்து எழுதப்பட்டதாகும். இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். இதனை ஜீ நியூஸ் (Zee Tamil News) உறுதிசெய்யவில்லை)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ