COVID-19 தொற்று நோய் ஆரோக்கியம், பிட்னஸ் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி, போன்றவற்றின் முக்கியத்துவத்தை மக்களுக்கு உணர்த்தியுள்ளது. உடற்பயிற்சியின் முக்கியத்துவம் அறிந்து, அதில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்துள்ளனர். ஆனால், வாழ்க்கை முறையின் செய்யப்படும் திடீர் மாற்றம் சிலருக்கு, குறிப்பாக நடுத்தர வயதினருக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்திய முதுகெலும்பு காயங்கள் மையத்தின் (ISIC) மருத்துவர்கள் இது குறித்து கூறுகையில், நடுத்தர வயதினரிடையே ஏற்பட்டுள்ள திடீர் மாற்றம் காரணமாக, 'அழுத்த முறிவு' ஏற்படுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்கின்றனர்.


அழுத்த முறிவு (stress fracture) என்றால் என்ன?


அழுத்த எலும்பு முறிவு பொதுவாக எலும்பில் ஒரு சிறிய விரிசலாக குறிப்பிடப்படுகிறது, அதிக அளவில் குதித்தல், நீண்ட தூரம் ஓடுவது மற்றும் தவறான அல்லது தேய்ந்து போன காலணிகளை அணிவது போன்ற தொடர்ச்சியான அழுத்தங்களால் ஏற்படலாம். இது பொதுவாக தாடை எலும்பு, கால், குதிகால், இடுப்பு மற்றும் முதுகின் கீழ் பகுதியில் ஏற்படலாம். கவனிக்காமல் விட்டால், வலி ​​அதிகரிக்கலாம் மேலும் பாதிக்கப்பட்ட எலும்பில் பெரிய அளவில் எலும்பு முறிவு ஏற்படும் அபாயம் ஏற்படும் என்று மருத்துவர்கள் கூறினர்.


ALSO READ | மாம்பழம் சாப்பிட்ட பின் எடுத்துக் கொள்ளக் கூடாத 5 உணவுகள்


எலும்பின் மீது ஏற்படும் தொடர்ச்சியான மற்றும் அதிகப்படியான  அழுத்தம்,எலும்பின் வடிவமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்தி அதன் மூலம் சிறிய அளவிலான எலும்பு முறிவு ஏற்படுவதாக, ISIC மையத்தை சேர்ந்த எலும்பு சிகிச்சை நிபுணர் மணீந்தர் ஷா சிங் விளக்கினார்.


அழுத்த முறிவு நோயாளிகளில் 10%  நடுத்தர வயது மக்கள் உள்ளதாக ISIC மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான முக்கிய காரணம், திடீரென அதிக அளவில் உடற்பயிற்சியில் ஈடுபடுவது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.உடலுக்கு இந்த ஆதீத பயிற்சி அல்லது இயக்கம் பழக்கம் இல்லாத ஒன்று என்பதால், திடீரென அதிக அளவு உடற்பயிற்சி தாக்கத்தை ஏற்படுத்துகிறது என  எலும்பு சிகிச்சை நிபுணர் சிங் மேலும், கூறினார்.


ALSO READ | அழகான கேசத்திற்கான Keratine சிகிச்சை; அதிக செலவில்லை, பழைய சாதம் போதும்


தொற்று நோய் பரவல் (Corona Virus) காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை பராமரிக்க உடற்பயிற்சி முக்கியமாக வலியுறுத்தப்பட்ட நிலையில், பலர் திடீரென, உடற்பயிற்சி, ஜாகிங், ஏரோபிக்ஸ் என அதிக அளவில் ஈடுபட்டனர் தங்களை ஆரோக்கியமாக்ச் வைத்துக் கொள்ள அவர்கள் காட்டிய அதீத ஆர்வம் தான் இதற்கு காரணம்.


மேலும், உடற்பயிற்சி தொடர்பான போதுமான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை பெறாமல் செய்வதும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது என்று நிபுணர்கள் குறிப்பிட்டனர்.


ALSO READ | Retro Walking: பின்னோக்கி நடப்பதால் ஏற்படும் நன்மைகள் உங்களை வியக்க வைக்கும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR