Kidney Health Tips: இன்றைய துரித கதியிலான வாழ்க்கையில், நம்மில் பெரும்பாலானோர், ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பதை மறந்து விட்டோம். இதனால் சிறு வயதிலேயே உடல்நல பாதிப்புகள் ஏற்பட தொடங்கி விடுகின்றன. மோசமான பழக்க வழக்கங்களால், உடல்நல பிரச்சனைகளால், உடல் உறுப்புகள் பாதிக்க தொடங்குகின்றன. இந்நிலையில், நமது உடலின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான சிறுநீரகத்தில் கற்கள் ஏற்படும் பிரச்சனை தொடர்பான ஆரம்ப அறிகுறிகளையும், அதிலிருந்து நிவாரணம் பெறுவது எப்படி என்பதையும், சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி என்பதையும் அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிறுநீரக கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் (Causes For Kidney Stone)


சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று போதுமான அளவு தண்ணீர் குடிக்காதது. நீர் போதுமான அளவு குடிக்கும் போது, சிறு கற்கள் சிறுநீர் மூலம் வெளியேறி, கற்கள் உருவாகும் ஆபத்தை குறைக்கிறது. சிறிய கற்கள் சிறுநீரகத்தில் தங்கும்போது, அவை நாளடைவில் பெரியதாகி பாதிப்பை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் அறுவை சிகிச்சை அளவிற்கு கூட சென்று விடும். இதனால், ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால், உணவின் மூலமே, சரி செய்து விடலாம். இதற்கு அடுத்தபடியான காரணம் அதிகமாக உப்பு எடுத்துக் கொள்ளுதல், உடலில் கழிவுகள் அதிகரித்தல், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அதிகரித்தல் ஆகியவை ஆகும்.


சிறுநீரகக் கல் இருப்பதற்கான ஆரம்ப கால அறிகுறிகள் (Early Symptoms of Kidney Stone)


உடலில் சிறுநீரகக் கல் இருப்பதை, ஆரம்ப அறிகுறிகள் மூலம் அறிந்து கொள்ளலாம். வலியுடன் வாந்தி பிரச்சனை இருந்தாலோ, சிறுநீர் கழிக்கும் போது ரத்தப்போக்கு இருந்தாலோ, சிறுநீர் கழிக்கும் போது வலி அல்லது பிரச்சனை இருந்தாலும், காய்ச்சல் அல்லது சளி பிரச்சனை தொடர்ந்து ஏற்பட்டாலோ, சிறுநீரல் ஏதேனும் நாற்றம் அல்லது நுரை தோன்றினாலோ அலட்சியம் செய்யாமல், உடனே மருத்துவரிடம் சென்று ஆலோசிக்கவும்.


மேலும் படிக்க | Weight Loss: உடல் பருமனால் கவலையா? பப்பாளியை இப்படி சாப்பிட்டால் ஓவர் வெயிட்டுடன் கவலையும் போய்விடும்


சீறுநீரக கற்களில் இருந்து நிவாரணம் பெறுவதற்கான சிகிச்சை (Kidney Stone Treatment)


சிறுநீரகக் கற்கள் பெரியது என்பதை பொறுத்தும், எத்தனை கற்கள் உள்ளன என்பதை பொறுத்தும், சிறுநீரக கற்களை வெளியேற்றுவதற்கான சிகிச்சை மாறுபடும். ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கப்படும் போது, உணவு பழக்கம் மற்றும் வீட்டு வைத்தியங்கள், அதிக அளவில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றின் மூலம், கற்களை கரைத்து வெளியேற்றி விடலாம். ஆனால் சில சமயங்களில், அறுவை சிகிச்சை தேவைப்படலாம்.


சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி (How to Prevent Kidney Stone)


சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்க, முதலில் நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். சமச்சீரான உணவுகளை டயட்டில் சேர்ப்பது, ஆரோக்கியமான பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வது ஆகியவற்றின் மூலம், சிறுநீரகத்தில் கற்கள் வராமல் தடுக்கலாம். சிற்ற பழங்கள் மற்றும் மெக்னீசியம் நிறைந்த உணவுகளை அதிகமாக உட்கொள்வதும், சிறுநீரக கற்கள் வராமல் தடுக்கும்.


பொறுப்புத் துறப்பு: எங்கள் கட்டுரை தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே. மேலும் விவரங்களுக்கு எப்போதும் நிபுணர் அல்லது உங்கள் மருத்துவரை அணுகவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது. 


மேலும் படிக்க | weight loss: சிக்குனு எடை, சின்னதா தொடை, இஞ்சி இடுப்பு, வயிற்றில் நோ மடிப்பு: இந்தாங்க டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ