Belly Fat: தொப்பையை வெண்னை போல் கரைக்கும் ‘3’ எளிய பயிற்சிகள்!!
நமது நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக ஆகி விட்டது.
நமது நவீன வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கம் காரணமாக, உடல் பருமன், தொப்பை என்பது கிட்டதட்ட அனைவரும் சந்திக்கும் ஒரு பிரச்சனையாக ஆகி விட்டது. பொதுவாக, உடலில் அதிக கொழுப்பு வயிறு மற்றும் இடுப்பில் படிந்து, தோற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. நீங்கள் அதிக உடல் பருமன் மற்றும் தொப்பை உள்ளவர் என்றால், இந்த செய்தி உங்களுக்கு மிகவும் பயன்படும். ஆரோக்கியமான உணவு மற்றும் சில உடற்பயிற்சிகளின் உதவியுடன், சில நாட்களிலேயே தொப்பை கொழுப்பை கரைக்கலாம். அவர்களை பற்றி கீழே தெரிந்து கொள்ளலாம்.
தொப்பையை குறைக்க மூன்று எளிய பயிற்சிகள்:
1. இரு கால்களையும் நீட்டி செய்யும் பயிற்சி
முதலில், சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும். இப்போது இரண்டு கால்களையும் முழங்கால்களில் ஒன்றாகசேர்க்கவும். பின்னர் 10 விநாடிகள் கைகளால் கால்களை பிடித்துக் கொள்ளுங்கள். இதை 10-12 முறை செய்யவும்.
2. கத்தரிக்கோல் பயிற்சி
சாதாரண நிலையில் படுத்துக் கொண்டு, இரண்டு கால்களையும் உயர்த்தவும். மெதுவாக வலது காலை கீழே கொண்டு வரவும்.
பின்னர் இடது காலை கீழே கொண்டு வரும்போது, வலது காலை உயர்த்தவும். இதை 10-12 முறை செய்யவும்.
3. பிளாங்க் (Plank)
முதலில் உங்கள் வயிறு தரையில் படுமாறு குப்புற படுத்துக் கொள்ளுங்கள். இப்போது கால்விரல்கள் மற்றும் உள்ளங்கையை ஊன்றிக் கொண்டு உடலை உயர்த்தவும். இந்த நேரத்தில், உங்கள் உடலின் வயிற்று பகுதியில் தசைகள் வேகமாக இயங்குவதை உணராலாம். இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கவும். இதை 4-5 முறை செய்யவும். முதலில் 5 விநாடிகளுக்கு முயல்வது சிறந்தது.
மேலும் படிக்க | Health Alert: நாம் வாங்கும் முட்டை புரதம் நிறைந்தது தானா; கண்டறிவது எப்படி..!!
உடல் பயிற்சியோடு, டயட்டிலும் கவனம் செலுத்தினால், உடல் எடை மள மளவென்று குறையும்.
தொப்பை யை கரைக்கும் டயட் பிளான்
1. புரதம் நிறைந்த உணவுகள்
உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் உடல் பருமனை குறைக்கும் டயட் பிளான் குறித்து கூறுகையில், சோயாபீன்ஸ், டோஃபு, நட்ஸ் போன்ற புரதம் அதிகம் இருக்கும் உணவுகளை டயட்டில் சேர்க்க வேண்டும் என்கிறார். புரதம் நிறைந்த உணவை உண்பதன் மூலம், பசியை கட்டுப்படுத்தலாம் என்பதோடு, எடுத்துக் கொள்ளும் கலோரிகளும் மிக குறைவாக இருக்கும்.
மேலும் படிக்க | பழச்சாறுடன் மாத்திரைகள் எடுத்துக் கொள்வது மிகவும் ஆபத்து; எச்சரிக்கும் நிபுணர்கள்!
2. சர்க்கரை உணவை குறைக்கவும்
சர்க்கரையில் பிரக்டோஸ் இருப்பதால் வயிற்றைச் சுற்றி சேரும் கொழுப்பை அதிகப்படுத்துவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். குளிர் பானங்கள், செயற்கையாக சுவையூட்டப்பட்ட பழச்சாறுகள் மற்றும் இனிப்பு பானங்கள் உடல் பருமன் அபாயத்தை 60% அதிகரிக்கின்றன. எனவே அவற்றை உட்கொள்வதை தவிர்க்கவும்.
3. உணவில் கார்போஹைட்ரேட்டின் அளவைக் குறைக்கவும்
வெள்ளை சர்க்கரை, வெள்ளை ரொட்டி, பாஸ்தா, மைதா போன்ற பொருட்கள் கொழுப்பை அதிகரிக்கும். எனவே அவற்றை உட்கொள்ள வேண்டாம். இவ்வாறு செய்வது தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது. மாறாக பச்சைக் காய்கறிகளை அதிகம் சாப்பிடுங்கள்.
4. ஆரோக்கியமான காலை உணவை உண்ணுங்கள்
காலை உணவைத் தவிர்க்கும்போது பசி அதிகமாகி, பின்னர் நம்மை அறியாமல் அதிகம் சாப்பிடுவதால், உடல் எடை கூடுகிறது என்கின்றனர் சுகாதார நிபுணர்கள். காலை உணவில் ஓட்ஸ், அதிக புரோட்டீன் பொருட்களை சேர்த்துக் கொள்ள வேண்டும். இது தொப்பையை குறைக்க உதவும்.
5. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை கண்டிப்பாக சாப்பிட வேண்டும்
பருப்பு வகைகள், முழு தானியங்கள், பட்டாணி, முட்டைக்கோஸ், பீன்ஸ் போன்றவற்றில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதனால், செரிமானம் மேம்படுவதோடு வயிற்றில் கொழுப்பு சேராது. அவற்றை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Sperm Booster: விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் ‘சூப்பர்’ உணவுகள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ