உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு பாதாம் மிகவும் ஆரோக்கியமானதாகக் கருதப்படுகிறது. தினசரி ஆரோக்கியத்தில் பாதாம் சேர்ப்பது உடலுக்கு வேண்டிய ஊட்டச்சத்துக்களை பெறுவதற்கு உதவும்.  பாதாம் மிகவும் சத்தான உணவு. பாதாம் சாப்பிடுவது மூளையை கூர்மையாக்குகிறது. இது திசுக்களை வலுவாக வைத்திருக்கும். சருமத்தை இளமையாக வைத்திருக்கிறது. இன்னும் பல நன்மைகளை அள்ளித் தரும் பாதாம் பருப்பை எப்படி சாப்பிட்டால் முழு பயன் கிடைக்கும்  என்பதை அறிந்து கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 பாதாம் பருப்பை சரியான அளவில், சரியான முறையில் உட்கொள்வதால், உடல் எடையை குறைப்பது முதல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது வரை பல நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றன. பாதாம் ஆரோக்கியமானது என்றாலும் இதனை அப்படியே சாப்பிடுவதால், முழுமையான பலன்கள் கிடைக்காது. ஆனால், இதனை ஊறவைப்பதன் மூலம் அவற்றில் இருந்து அதிக வைட்டமின்கள் மற்றும் தாதுக்களை உறிஞ்ச முடியும். மேலும் இது செரிமானத்தை மேம்படுத்த உதவும். நொதி செயல்பாட்டை தூண்டும்.


ஊறவைத்து உரிக்கப்பட்ட பாதாம் 


ஆயுர்வேதத்தில், பாதாம் ஊறவைத்து தோலை நீக்கிய பின் பாதாம் சாப்பிட  வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதாம் உரித்து சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகும். தோலை ஜீரணிக்க கடினமாக இருப்பதால், இவ்வாறு ஊற வைத்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் பாதாமில் மறைந்திருக்கும் அனைத்து சத்துக்களும் கிடைக்கும். பாதாம் பருப்பு வைட்டமின் ஈ, துத்தநாகம், கால்சியம், மெக்னீசியம் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களின் சிறந்த ஆதாரமாகும்.


உலர்ந்த பாதாம் சாப்பிடுவதால் பித்தம் அதிகரிக்கும்


பாதாம் பருப்பை ஊறவைக்காமல், உரிக்காமல், அப்படியே சாப்பிடுவது இரத்தத்தில் பித்தத்தின் அளவை அதிகரிக்கிறது. பாதாம் சாப்பிடுவதற்கு சிறந்த வழி வெதுவெதுப்பான நீரில், இரவு முழுவதும் ஊறவைத்து அவற்றை உரித்து காலையில் சாப்பிடுவது. ஒரு நாளில் நீங்கள் சுமார் 10 பாதாம் சாப்பிடலாம்.


செரிமான பிரச்சனைகள் நீங்கும்


பாதாம் நல்ல அளவு நார்ச்சத்து கொண்டுள்ளது. ஊறவைத்த பாதாம் பெரிஸ்டால்டிக் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. இதனால் மலச்சிக்கல், அஜீரணம், வீக்கம் மற்றும் தசைப்பிடிப்பு போன்ற அறிகுறிகளை குறைக்கிறது. செரிமான சிக்கலை எதிர்கொள்பவர்கள் தினசரி பாதாம் எடுத்து வந்தால் செரிமான பிரச்சனை சீராகும்.


உடல் பருமன் குறையும்


ஊறவைத்த பாதாமில், ஊற வைக்காத பாதாம்களை விட அதிக புரதம் உள்ளது. இந்த ஊறவைத்த பாதாமில் இருக்கும் நார்ச்சத்து செரிமான செயல்முறைக்கு உதவுகிறது. இதனால் எடை இழப்பிற்கு பெரிதும் உதவும்.  மேலும் அடிக்கடி உண்டாகும் பசி உணர்வை தடுக்கவும் செய்கிறது. இதனால், எடை இழக்க நினைப்பவர்களுக்கு பெரிதும் உதவும்.


மேலும் படிக்க | ரொம்ப குண்டா இருக்கீங்களா? அப்போ தினமும் இந்த பானத்தை குடியுங்கள்


ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்த பாதாம்


பாதாமில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. ஊறவைத்த பாதாம் எடை இழப்புக்கும் உதவுகிறது. இது தவிர, வைட்டமின் பி 17 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை ஊற வைத்த பாதாமில் காணப்படுகின்றன, இது புற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.


பாதாம் பருப்பை வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது


பாதாம் பருப்பை ஒருபோதும் வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் பாதாம் சாப்பிடுவது பித்தத்தை அதிகரிக்கிறது. மேலும், செரிமான பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது, நீங்கள் வெறும் வயிற்றில் சாப்பிடுவதாக இருந்தால், காய்கறிகள் மற்றும் பழங்களுடன் பாதாம் சாப்பிடலாம்.


பாதாம் பருப்பின் தோலில் உள்ள டானின்கள்


பாதாமின் தோலில் டானின்கள் உள்ளன, அவை ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்படுவதைத் தடுக்கின்றன. பாதாம் பருப்பை ஊறவைத்தால், தோலை எளிதில் எடுத்து விடலாம். உரித்த பிறகு, அதன் அனைத்து ஊட்டச்சத்துகளின் நன்மையையும்  பெறலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன்னர் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறவும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவிற்கு அதிக முட்டை ஆரோக்கியத்தை காலி செய்து விடும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ