மூளை வளர்ச்சிக்கு முட்டை அவசியம்!
முட்டையில் தான் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன.
முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. முட்டை சைவமா? அசைவமா? என்ற விவாதம் இன்னும் ஒரு புறம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதுவரை விடை தெரியவில்லை. இப்போது முட்டை சாப்பிடுவது நம் உடலுக்கு நல்லதா கெட்டதா என்பதை பார்க்கலாம். வாரத்துக்கு மூன்று’ என்பதுதான் உணவியல் நிபுணர்களின் பதில். காலை உணவில் தினமும் முட்டை சேர்த்துக்கொள்வது, உடலை கட்டுக்குள் வைக்க உதவும் என, சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
.
சில உணவுப்பொருட்களை நாம் விரும்பியும், தயங்கியும் அணுகுவோம். அப்படிப்பட்ட ஒன்றுதான் முட்டை. முட்டையில் நம் உடலுக்குத் தேவையான பல சத்துகள் நிறைந்துள்ளன. முட்டையின் மஞ்சள் கருவில் வைட்டமின் ஏ, டி, ஈ., கே, போன்ற ஆன்டி ஆக்சிடென்டுகள் உள்ளன.
சிலர் முட்டையின் மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். மருத்துவர்களின் அறிவுரையின்றி அவ்வாறு மஞ்சள் கருவை சாப்பிடுவதைத் தவிர்ப்பதால் நாம் சத்துகளை இழக்கத்தான் செய்கிறோம். காலையில் முட்டை சாப்பிடுவதன் மூலம் அதில் உள்ள உயர்தர புரதமும், கொழுப்பும் உடலின் சக்தியை நாள் முழுவதும் தக்க வைக்கிறது. இதனால் அடிக்கடி நொறுக்குத்தீனி சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
முட்டையில் உள்ள தேவையான அமினோ அமிலங்கள் உடலுக்கு நன்மை செய்கிறது. மாமிச உணவுகள் சாப்பிடுவதில் கிடைக்கும் புரதத்தை விட, மிகக்குறைந்த விலையில் உடலுக்குத் தேவையான புரதச் சத்தியை முட்டை அளிக்கிறது.
முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்கள், மூளை வளர்ச்சிக்கு உதவும். நினைவுத்திறனை அதிகரிப்பதோடு, எப்பவும் விழிப்புணர்வோடு இருக்கத் தேவையான திறனை தருகிறது
மேலும், முட்டையில் மற்ற உணவுப்பொருட்களில் இல்லாத ‘சோலின்’ என்ற வைட்டமின் பி சத்தும் உள்ளது. இது மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. முட்டையில் உள்ள சீசாந்தின், கண் நோய்கள் வராமல் தடுக்கிறது. செலினியம், கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல நுண்ணூட்டச் சத்துகளும் முட்டையில் உள்ளன.
முட்டை மருத்துவரீதியில் அல்புமினுக்குப் பெயர் பெற்றது. ரத்தத்தில் அல்புமின் குறைவாக இருப்பவர்கள் முட்டையின் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம். முக்கியமாக, ‘டயாலிசிஸ்’ செய்து கொண்டிருப்பவர்களுக்கும், கல்லீரல் தொடர்பான நோய்கள் உள்ளவர்களுக்கும் அல்புமின் குறைவாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. நீரழிவு நோயாளிகள் தினமும் முட்டை சாப்பிடக்கூடாது. இது அவர்களுக்கு கெடுதல் உண்டாக்கும்
வளரும் குழந்தைகளுக்குத் தினமும் ஒரு முட்டையை வேகவைத்துக் கொடுத்தால் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு உதவும்.சாதாரணமாக ஒருவர், வாரத்துக்கு 3 முட்டைகள் சாப்பிடலாம். கர்ப்பிணிகளும், தாய்மார்களும் தினம் ஒரு வேகவைத்த முட்டையை உண்ணலாம்.
முட்டையில் கொலஸ்ட்ரால் இருப்பது உண்மை. அதை அளவுடன் சாப்பிட்டால், இதயத்திற்கு எந்தவிதமான கெடுதலையும் செய்யாது என்கிறனர் உணவியல் நிபுணர்கள். ஒரு முட்டையில் 212 மில்லி கிராம் கொலஸ்ட்ரால் உள்ளது. இது நமது ஒருநாளின் தேவைக்குப் போதுமானதாகும்.