Egg Paratha Recipe: சுவையான முட்டை பரோட்டா செய்வது எப்படி?
தாய்மார்களுக்கு இந்த சமையல் குறிப்பு மிகவும் பயன்படும்.ரோட்டு கடையில் செய்யும் முட்டை பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்!
Egg Paratha Recipe: நீங்கள் பல வகையான பராத்தாக்களை சாப்பிட்டிருக்க வேண்டும். ஆனால் இந்த நேரத்தில், நீங்கள் வேறு ஏதாவது செய்ய விரும்பினால், முட்டை பரோட்டாவை செய்ய முயற்சிக்கவும்.
இதன் சுவை குழந்தைகளுக்கு கூட மிகவும் பிடிக்கும். தாய்மார்களுக்கு இந்த சமையல் (Cooking) குறிப்பு மிகவும் பயன்படும். முட்டை பரோட்டாவை எப்படி வீட்டில் செய்வது குறித்து காணலாம்!
ALSO READ | அஸ்வகந்தா சிலருக்கு விஷமாகலாம்.. எச்சரிக்கை தேவை..!!
தேவையான பொருட்கள்:
பரோட்டா - 4
முட்டை - 2
வெங்காயம் - 2
தக்காளி - 2
பச்சைமிளகாய் - 1
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 6 ஸ்பூன்
கெட்டிச்சால்னா - 2 குழிக்கரண்டி
பூண்டு - 10 பல்
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்தமல்லி - சிறிதளவு
இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி
தனி மிளகாய்த் தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா தூள் - இரண்டு தேக்கரண்டி
சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
முட்டை பரோட்டா செய்முறை:
முதலில் பிணைந்து வைத்த மாவை பரோட்டாவாக செய்துக்கொள்ளவும் பிறகு பரோட்டா (Paratha) செய்து அதை சிறு சிறு துண்டுகளாக செய்து தனியாக வைத்துக்கொள்ளவும். பின்பு கொத்தமல்லி, வெங்காயம், தக்காளி, பூண்டு, மிளகாய் ஆகியவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து தாளித்த பின் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் தக்காளியை நன்கு மசியும் வரை வதக்கவும். அனைத்தும் நன்றாக வதங்கியதும், சோம்பு தூள் சேர்த்து முட்டையை (Egg) உடைத்து ஊற்றி நன்கு கிளறவேண்டும். முட்டை நன்றாக வதங்கியதும் அதில் சால்னா சேர்த்து ஒருசேர கிளறவும். சிறுது உப்பும் சேர்த்துக்கொள்ளவும். பிறகு பரோட்டாவை சேர்த்து எல்லா இடங்களிலும் மசாலா சேரும் படி நன்றாக பிரட்டவும். கடைசியாக கொத்தமல்லி இலையை தூவி இறக்கவும். சுவையான முட்டை பரோட்டா தயார்.
ALSO READ | Diabetes: நீரிழிவு நோய்க்கு அருமருந்தாகும் வெங்காயம்..!!!
அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR