நீரிழிவு நோயாளிகளை கவசமாய் காக்கும் வெந்தயக்கீரை: எக்கச்சக்க நன்மைகள்
Fenugreek Leaves Benefits: வெந்தயக்கீரை குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் கீரை வகையாகும். இதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும்.
வெந்தயக்கீரையின் பலன்கள்: குளிர்காலம் சர்க்கரை நோயாளிகளுக்கு சற்று தொந்தரவு தரும் காலமாகும். இந்த பருவத்தில், நோய் எதிர்ப்பு சக்தி பலவீனமாகி, நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகும். குளிர்காலத்தில் சர்க்கரை நோயாளிகள் உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிப்பதும் உடலை சுறுசுறுப்பாக வைத்திருப்பதும் அவசியம். குளிர்காலத்தில் வெப்பநிலை வீழ்ச்சி நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களின் பிரச்சினைகளை அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் குறிப்பிட்ட சில பொருட்களை சேர்த்துக்கொள்ள நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். இதனால் உடலில் ஏற்படும் திடீர் மாற்றங்களைத் தவிர்க்கலாம். குளிர்காலத்தில், நீரிழிவு நோயாளிகள் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நீரிழிவு நோய்க்கு உகந்த உணவை உட்கொள்ள வேண்டும்.
இந்த பருவத்தில் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயாளிகளை பல நோய்களிலிருந்து பாதுகாக்கும் உணவுகளை உட்கொள்ள வேண்டியது மிக அவசியமாகும். வெந்தயக்கீரை குளிர்காலத்தில் அதிகம் கிடைக்கும் கீரை வகையாகும். இதை உட்கொள்வது நீரிழிவு நோயைக் கட்டுக்குள் வைத்திருப்பதோடு உடலை ஆரோக்கியமாகவும் வைத்திருக்கும். வெந்தய கீரை நீரிழிவு நோயை எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை அறிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | நீரிழிவு நோய் வந்துவிடுமோ என்ற அச்சமா? இந்த 'டிப்ஸ்' மூலம் அதை தடுக்கலாம்
வெந்தயக்கீரை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்
வெந்தயக் கீரை ஒரு சிறந்த குளிர்கால உணவாகும். இதை நீரிழிவு நோயாளிகள் தங்கள் உணவில் சேர்க்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரையில் நீரிழிவு நோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இதை உட்கொள்வது இன்சுலினின் இயற்கையான உற்பத்திக்கு வழிவகுக்கிறது. இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது. வெந்தய கீரைகள் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க சிறந்த உணவாகும். நீரிழிவு நோயாளிகள் வெந்தயக்கீரையை கறியாக அல்லது கடைந்து கூட்டாக சாப்பிடலாம்.
கொலஸ்ட்ரால் கட்டுக்குள் இருக்கும்
வெந்தயக்கீரையை உட்கொள்வதால் கொலஸ்ட்ராலை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். இதனை உட்கொள்வதால் கெட்ட கொலஸ்ட்ராலை கட்டுக்குள் இருப்பதோடு நல்ல கொலஸ்ட்ராலையும் இது அதிகரிக்கிறது. வெந்தயத்தில் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும் ஸ்டீராய்டல் சபோனின் என்ற கூறு உள்ளது.
செரிமானத்தை மேம்படுத்துகிறது
வெந்தய கீரையை உட்கொள்வதால் செரிமானம் மேம்படும். நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் நிறைந்த வெந்தய கீரைகள் செரிமானத்தை ஆரோக்கியமாக வைக்கிறது. நார்ச்சத்து மற்றும் பெக்டின் அடங்கிய வெந்தயக்கீரை மலத்தை தளர்த்தி மலச்சிக்கலை போக்குகிறது. இதை சாப்பிடுவதால் செரிமானம் மேம்படும்.
வெந்தயக்கீரையை உட்கொள்வது எடை கட்டுப்பாட்டில் உதவுகிறது
குளிர்காலத்தில் எடை அதிகரிக்கும் அபாயம் அதிகம் உள்ளது. எடையைக் கட்டுப்படுத்த, வெந்தய கீரையை தினசரி உணவில் உட்கொள்ள வேண்டும். பச்சை வெந்தயத்தில் நார்ச்சத்து அதிகமாகவும் கலோரிகள் மிகவும் குறைவாகவும் உள்ளன. இது உடல் பருமனை குறைக்க உதவுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | Diabetic Diet Fruits: நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ