உடம்பு வலி என்பது பொதுவாக அனைவருக்கும் வரும்  ஒரு உடல் நல பிரச்சனைதான். சில சமயங்களில் உடல் வலி பின்னி எடுக்கும். அதற்கு காய்ச்சல் அல்லது அதிக அளவில் ஏதேனும் பளு தூக்கியது போன்றவை காரணமாக இருக்கலாம். ஆனால், அடிக்கடி உடல் வலி ஏற்படுகிறது அல்லது காரணமே இல்லாமல் உடல் வலி ஏற்படுகிறது என்றால், அலட்சியம் வேண்டாம். உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால், அது  ஃபைப்ரோமியால்ஜியா என்னும் தசைநார் வலி என்னும் நோயாக இருக்கலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தசைநார் வலிக்கான காரணம்


இந்த தசை நார் நோயினால், ஆண்களை விட அதிக அளவில் பெண்கள் தான் பாதிக்கப்படுகின்றனர் என புள்ளி விபரங்கள் கூறுகின்றன. இந்த நோய் எதனால் ஏற்படுகிறது என்பதற்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றாலும், மரபு ரீதியாக இந்த நோய் ஏற்பட்டிருந்தால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. சிலருக்கு உடல் ரீதியான காயம், தொற்று, அறுவை சிகிச்சை, குழந்தை பேறு ஆகியவற்றின் காரணமாவோ அல்லது மிக மோசமான மன நிலை பாதிப்பின் காரணமாகவோ ஏற்படக் கூடும்.  உடலில் ஏற்படும் ஹார்மோன் மாற்றங்கள் காரணமாகவும் தசைநார் வலி ஏற்படக் கூடும்.


தசைநார் வலிக்கான அறிகுறிகள்


தசைநார் வலி நோய் பாதிக்கபப்ட்டவர்களுக்கு, அதிக அளவிலான சோர்வு, தூக்கமின்மை, மூட்டுகளில் தாங்க முடியாத வலி, கடுமையான தலைவலி, எதிலும் கவனம் செலுத்து முடியாத மனநிலை போன்ற அறிகுறிகள் இருக்கும். இது உங்கள் அன்றாட வாழ்க்கையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்


மேலும் படிக்க | Health Alert: இரவில் சாப்பிடக் கூடாத ‘சில’ பழங்கள்!


தசைநார் வலிக்கான சிகிச்சை


நோய்க்கான சிகிச்சையில், மருந்துகள் வழங்கப்பட்டாலும், உடற்பயிற்சி,  மன அழுத்தத்தை நீக்கும் யோகா பயிற்சிகள், தியான பயிற்சிகள் ஆகியவை முக்கிய ப்பங்கு வகிக்கின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதன் மூலம் இந்த நோயிலிருந்து விடுபடலாம். 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. அதை ஏற்றுக்கொள்வதற்கு முன், கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெறுங்கள். ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Brain Health: மூளை சோர்வை நீக்கி ‘மன அமைதியை’ தரும் அற்புத மூலிகைகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ