போலிக் அமிலம் கருத்தரிக்க மிகவும் அத்தியாவசியமான ஊட்டச்சத்து என நிபுணர்கள் கூறுகின்றனர். தினமும் சிறிய அளவு ஃபோலிக் அமிலத்தை எடுத்துக் கொண்டால், கருத்தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள். அதோடு, கருவின் கவசமாக இது செயல்படும் என்பதால், கருத்தரித்தவர்களும் போலிக் அமிலம் மிகவும் அவசியம்


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உணவின் மூலம் நாம் பெறும் நுண்ணூட்டச்சத்துக்கள் நம் உடலின் வேதியியல் கணிதத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. ஒவ்வொரு நபரின் உடலியல் தேவைகள் வேறுபட்டாலும், சில வைட்டமின்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உதாரணமாக, பெண்களின் உடலில் சில வைட்டமின்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன என்று நம்பப்படுகிறது. அவை உடலில் சீரக இருந்தால், மாதவிடாய்,  தைராய்டு செயல்பாடு போன்ற விஷயங்கள் உடலில் சீராக இருக்கும். வைட்டமின்களை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்வதன் மூலம், பெண்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது.


ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!


போலிக் அமிலம் என்றால் என்ன?


ஃபோலிக் அமிலம் ஒரு செயற்கை வைட்டமின். இது வைட்டமின் பி இன் ஒரு அங்கமாகும். இது ஃபோலேட் எனப்படும் வைட்டமின் மூலம் தயாரிக்கப்படுவதால், இது ஃபோலிக் அமிலம் என்று அழைக்கப்படுகிறது. ஃபோலேட் இரத்த சிவப்பணுக்கள் உருவாவதிலும், கருவில் உள்ள கருவின் மூளை நரம்பு மண்டலத்தின் வளர்ச்சியிலும், முதுகுத் தண்டு உருவாவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஃபோலேட், பச்சை காய்கறிகள் மற்றும் சிட்ரஸ் பழங்களில் இயற்கையாகவே காணப்படுகிறது. கர்ப்ப காலத்தில் பச்சைக் காய்கறிகளை உட்கொள்வது அவசியம் என வலியுறுத்தப்படுவதற்கு இதுவே காரணம். முட்டையின் மஞ்சள் கரு, பீன்ஸ், காளான்கள், உருளைக்கிழங்கு, பால் ஆகியவற்றிலும் போலிக் அமில சத்து நிறைந்துள்ளது. 


ALSO READ  | Kidney Health: சிறுநீரகத்தை டேமேஜ் செய்யும் இந்த '5' உணவுகளை தவிர்க்கலாமே..!!


ஃபோலிக் அமிலத்தை எப்போது எடுக்க ஆரம்பிக்க வேண்டும்?


நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க அரசு அமைப்பு (CDC) வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில், ஃபோலிக் அமிலத்தை குழந்தை பெற்றுக் கொள்ள திட்டமிட்ட உடட்னேயே டுத்துக் கொள்ள வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இது கர்ப்பம் தரிக்க உதவுவது மட்டுமின்றி, அடுத்தடுத்து வரும் பல பிரச்சனைகளில் இருந்தும் பாதுகாக்கும். ஃபோலிக் அமிலத்தை தொடர்ந்து உட்கொள்ளும் பெண்களுக்கு குறை பிரசவம்  ஏற்படும் ஆபத்து மிகவும் குறைகிறது என ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 


ALSO READ | Jaggery: இரவு நேரத்தில் வெல்லம் சாப்பிடுவதால் ஏற்படும் அற்புத நன்மைகள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR