உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால், செரிமானம் சிறப்பாக இருக்க வேண்டும். செரிமான பிரச்சனையே பல உடல்நல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. குறிப்பாக, வயிற்று வலி, ஆசிடிட்டி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றன. இந்நிலையில் இரவு உணவை உன்பதில் நீங்கள் சில பழக்கங்களை கடைப்பிடிப்பதை வழக்கமாகக் கொண்டால், உடல் பருமன் குறைவது முதல், இதய ஆரோக்கியம், சிறந்த செரிமானம் என பல வகைகளில், உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அவசரமாக சாப்பிடும் பழக்கத்தை கைவிடுதல்


சாப்பிடும் போது, எப்போதுமே நிதானமாக சாப்பிட வேண்டும். உணவை நன்றாக மென்று சாப்பிட்டாலே, செரிமான பிரச்சனைகள் இருக்காது. நன்கு உணவு ஜீரணமாகும். வயிறு நிறைந்தது என்ற உணர்வை மூளைக்கு உணர்த்த, உணவை மெதுவாக மென்று சாப்பிட வேண்டும். மேலும், நன்றாக மென்று சாப்பிடும் போது, உணவுடன் உமிழ் நீர் நன்றாக கலந்து, அஜீரண கோளாறுகள் (Health Tips) ஏற்படுவதை தவிர்க்கிறது.


இரவில் அதிகமாக சாப்பிடக்கூடாது


இரவில் அதிகமாக சாப்பிடுவதையோ, ஜீரணிக்க அதிக நேரம் எடுத்துக் கொள்ளும் உணவுகளை சாப்பிடுவதையோ தவிர்க்க வேண்டும். இது செரிமான ஆரோக்கியத்தை மிகவும் பாதிக்கும். மிதமான அளவு உணவு சாப்பிடுவது நல்லது. அனைத்து சத்துக்களும் அடங்கிய ஜீரணிக்க எளிதான உணவை தேர்ந்தெடுக்க வேண்டும். இதனால், செரிமான பிரச்சனை வருவது தடுக்கப்படும். காலையில் மெட்டபாலிசம் அதிகமாக இருக்கும் என்பதால், அப்பொழுது, அதிகம் சாப்பிடலாம்.


மேலும் படிக்க | Alzheimer: அல்சைமர் ஒண்ணும் பெரிய வியாதி இல்ல! சுலபமா சரி செய்யலாமே! ஹெல்த் டிப்ஸ்


பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும்


பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரை, ரசாயனங்கள் ஆகியவை கலக்கப்பட்டு இருக்கும். இது ஜீரண சக்தியை பெரிதும் பாதிக்கும். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், ஆரோக்கியமான கொழுப்பு சத்து நிறைந்த உணவுகள் ஆகியவை இரவு உணவுக்கான சிறந்த தீர்வாக இருக்கும்.


அதிக கொழுப்புள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்


இரவு உணவில் கொழுப்பு நிறைந்த உணவுகள் சாப்பிடுவதால் ஜீரண சக்தி பாதிக்கப்படும். பொறித்த உணவுகள், இறைச்சி, கிரீம் சேர்த்த சாஸ் போன்றவற்றை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த வெண்ணெய் பழங்கள், நட்ஸ் உணவுகள், விதைகள் ஆகியவற்றை மிதமான அளவு சேர்த்துக் கொள்ளலாம்.


காரம் நிறைந்த உணவுகளை தவிர்த்தல்


பொதுவாக மசாலாக்கள் மிதமான அளவில் உட்கொள்ளும் போது, ஆரோக்கியத்திற்கு பல வகையில் நன்மை அளிக்கும் என்றாலும், இரவு நேரத்தில் காரம் நிறைந்த உணவுகளை தவிர்ப்பதால் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும் அதிக காரம் கொண்ட உணவுகள் நெஞ்செரிச்சல், ஆசிடிட்டி, அஜீரண பிரச்சனை ஆகியவற்றை ஏற்படுத்தலாம். இதனால் இரவு நேரத்தில், காரமிக்க உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது.


மதுபானத்தை தவிர்த்தல்


மதுபானம், வயிறு மற்றும் குடல் பகுதியை பாதித்து வீக்கம் மற்றும் அஜீரண பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. மித மிஞ்சிய மதுபானம், குடல் ஆரோக்கியத்தை பாதித்து, உடலுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களை அழிக்கிறது.


இரவு நேரம் கழித்து உண்ணும் பழக்கம்


இரவு வெகு நேரம் கழித்து உணவு உண்ணும் பழக்கத்தை நிச்சயம் தவிர்க்க வேண்டும். இரவு உணவை ஏழரை மணிக்குள் முடித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் பல செரிமான பிரச்சனைகளை தவிர்க்கலாம். அதோடு நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு அல்லது மூன்று மணி நேரம் முன்பாக, இரவு உணவை முடித்துக் கொள்வதால், தூக்கமின்மை பிரச்சனையில் இருந்து தப்பிக்கலாம்.


குறிப்பு: ஒவ்வொருவரின் உடல்வாகும் வேறுபட்டது. அனைவரின் செருமான அமைப்பும் தனித்துவமானது. இதனால் உங்களுக்கு சிறப்பானது எது என்பதை உணவில் நிபுணரே கலந்து ஆலோசனை செய்து முடிவு எடுக்க வேண்டும். அதோடு நாள்பட்ட நோய், அல்லது செரிமான பிரச்சனைகள் இருந்தால், மருத்துவரின் ஆலோசனையுடன் உங்கள் உணவுப் பழக்க வழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும்.


மேலும் படிக்க | எச்சரிக்கை! அளவுக்கு அதிகமான இளநீர் ஆரோக்கியத்தை பாதிக்கும்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ