வாட்டி எடுக்கும் வாயுத்தொல்லை, அசிடிட்டியில் இருந்து விடுபட... சில வீட்டு வைத்தியங்கள்
Home Remedies TO Get Rid of Acidity, Gas Problem: வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
இன்றைய பிஸியான வாழ்க்கை முறை காரணமாக, பலர் ஆரோக்கியத்தை சரியாக கவனித்துக் கொள்ள முடியாமல் பல பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். தவறான உணவு பழக்கம் காரணமாக ஏற்படும் செரிமான பிரச்சனைகள், சில சமயங்களில் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் அளவுக்கு கூட சென்று விடுகிறது. அதில் ஒன்று வாயு பிரச்சனை.
வயிற்றில் உருவாகும் வாயு பிரச்சனை என்பது, சாதாரண பிரச்சனை என்று ஒதுக்கி விட முடியாது. ஏனென்றால், இதன் காரணமாக, சில சமயத்தில் கடுமையான வயிற்று வலி, தலைவலி போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கலாம்.
பிரபலமான ஊட்டச்சத்து நிபுண ஆயுஷி யாதவ், வாயு பிரச்சனையை தவிர்க்க, சாப்பிட வேண்டியவை மற்றும் சாப்பிட கூடாதவை குறித்து விளக்கமாக எடுத்துரைத்துள்ள நிலையில், இது குறித்து விவரமான தகவல்களை (Health Tips) அறிந்து கொள்ளலாம்.
வயிற்றில் வாயு பிரச்சனை உண்டாவதற்கான காரணங்கள்
சில சமயங்களில் நாம் அளவிற்கு அதிகமான சாப்பிடுவது வாயு பிரச்சனைக்கு காரணமாக இருக்கின்றது. வயிற்றில் காலியிடம் குறைந்து விடுவதால் தண்ணீர் போதுமான அளவு குடிக்க முடியாத நிலை ஏற்படும். நீர்ச்சத்து இல்லை என்றால் செரிமான அமைப்பு பாதிக்கப்பட்டு வயிற்றில் வாயு உருவாக காரணமாகிறது. அதோடு ஆரோக்கியமற்ற உணவுகளை, நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவதும் வாயு பிரச்சனைக்கு காரணமாகிறது.
வாயு பிரச்சனையை தவிர்க்க நாம் கடைபிடிக்க வேண்டிய சில வீட்டு வைத்தியங்கள்:
1. வாயு பிரச்சினையினால் ஏற்படும் வயிற்று வலியிலிருந்து விடுபட, இஞ்சி மற்றும் புதினா சேர்த்த பானம் அருந்துவது பலன் கொடுக்கும். இதனால் வயிற்று வலி நொடியில் நீங்கும்.
2. வாயு பிரச்சனை அதிகமாக இருந்தால், வெந்நீர் நிரப்பிய பையை வயிற்றில் வைத்து ஒத்தடம் கொடுக்க, வலியில் இருந்து சிறிது நிவாரணம் பெறலாம்.
3. உணவில் தயிர், மோர் போன்ற ப்ரோபயோடிக் உணவுகளை கட்டாயம் சேர்த்துக் கொள்வது, வாயு பிரச்சனையில் இருந்து விடுபட உதவும்.
மேலும் படிக்க | 21 நாள் நோ சுகர் சேலஞ்சுக்கு ரெடியா? இதனால் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்
4. எண்ணெயில் வறுத்த உணவுகள், துரித உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக நேரம் கெட்ட வேளையில் சாப்பிடுவதால் வாயு பிரச்சனை அதிகரிக்கும்.
5. அதிக கொழுப்பு நிறைந்த பால், சீஸ் என்னும் பாலாடை கட்டி, வாயு பிரச்சனையை ஏற்படுத்தும்.
6. வாயு பிரச்சனையிலிருந்து விடுபட எலுமிச்சை உதவும். எலுமிச்சை இஞ்சி சேர்த்த பானம் செரிமான பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்.
7. செரிமானத்தையும் வளர்ச்சிதை மாற்றத்தையும் அதிகரிக்கும் ஆற்றல் ஓமத்திற்கு உண்டு. இதனால் ஓமம் நீர் அருந்துவது, வாயு தொல்லையில் இருந்து விடுபட உதவும்.
8. உணவில் அதிக அளவிலான மசாலா சேர்த்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. இவை வாயு பிரச்சனையை ஏற்படுத்தி வயிற்றில் சங்கடத்தை உருவாக்கும்.
9. சாப்பிட்ட உடன் சிறிது நேரம் நடப்பதும், வாயு பிரச்சனையிலிருந்து விடுபட உதவும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | Pancreas Health: டயட்டில் ‘இவற்றை’ சேருங்கள்... உங்கள் கணையம் தாங்க்யூ சொல்லும்..!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ