திருமணமான தம்பதிகள் குழந்தைபேறுக்கு முயற்சி செய்தால் பெண்களைபோலவே ஆண்களும் ஒத்துழைத்தால் மட்டுமே முயற்சி கைகூடும். ஆண்கள் தங்களை சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொள்ள வேண்டும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆண்களுக்கான வயது


குழந்தை பெறுவதற்கு பெண்களுக்கு வயது எப்படி முக்கியமோ, அதைபோலவே ஆண்களுக்கும் வயது முக்கியம். வயது அதிகமாகும்போதுஆண்களின் விந்தணுக்களின் தரம் குறையும். விந்தணுக்களின் தரத்தைப் பொறுத்தே கரு உருவாகும் என்பதால், உங்களின் விந்தணு குறித்து பரிசோதனை செய்து கொள்வது அவசியம். கருமுட்டையை ஊடுருவிச் செல்லும் அளவுக்கு வலுவாக இருக்க வேண்டும். 


மேலும் படிக்க | Night Tips for Mens: திருமண வாழ்க்கை ஜம்முனு இருக்க ஆண்கள் இரவில் இதை செய்யுங்கள்


விந்தணுவின் தரம்


ஆண்கள் விந்தணுவின் தரத்தை நல்லபடியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். அதற்கு நீங்கள் வெப்பமான சூழலில் வேலை செய்யக்கூடாது. மிகவும் இறுக்கமான உள்ளாடைகளை அணியக்கூடாது. விந்தணுக்கள் குளிச்சியாக இல்லையென்றால் கருத்தரிப்பு என்பது எளிதான காரியம் அல்ல. நீண்ட நேரம் அமர்ந்து பார்க்கும் வேலையை செய்பவர் என்றால், அவ்வப்போது எழுந்து நடப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.


புகை மதுப்பழக்கம்


புகை மற்றும் மதுப்பழக்கம் விந்தணுவின் தரத்தை குறைக்கும். ஹார்மோன் உற்பத்தியையும் பாதிக்கும். ஹார்மோன் உற்பத்தி பாதிக்கத் தொடங்கினால் இனப்பெருக்க மண்டலம் சேதமடைந்து, விந்தணு டிஎன்ஏ பாதிப்படைய தொடங்கும். மருத்துவ ஆய்வுகளில் புகை மற்றும் மதுப்பழக்கம் விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 


உணவுப் பழக்கம்


ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களை கடைபிடிப்பது சாலச்சிறந்தது. காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்டவைகளை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இரவில் செரிமான மண்டலத்துக்கு அதிக வேலை கொடுக்க வேண்டாம். பீன்ஸ், பருப்பு வகைகள், மீன், முட்டை, இறைச்சி மற்றும் பால் அதிகம் சேர்த்து கொள்ளுங்கள். உடல் எடை அதிகமாக இருந்தால், அதனை குறைக்க முயற்சி செய்யுங்கள். 


மேலும் படிக்க | கருத்தரிப்பு பிரச்சனைக்கு கணவர் காரணமா? மீள்வதற்கான டிப்ஸ்


மன அழுத்தம் கூடாது


குழந்தைபேறு முயற்சியில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வு என்பது கூடவே கூடாது. இது உடலுறவு மீதான ஆர்வத்தை குறைத்து, உங்களுக்குள் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்திவிடும். மன அழுத்தத்தில் இருந்து விடுபடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் நீங்கள் கட்டாயம் எடுக்க வேண்டும். 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR