தம்பதிகள் சாப்பிட வேண்டிய பழம்..!

குழந்தைபேறு கிடைக்க வேண்டும் என நினைக்கக்கூடிய தம்பதிகள் உணவு முறையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
குழந்தை பேறுக்காக போராடிக் கொண்டிருக்கும் தம்பதிகள் ஆயிரக்கணக்கானோர் உள்ளனர். மருத்துவ உதவியை நாடும் அதேசமயத்தில் உணவு முறையிலும் உங்களை நீங்கள் மாற்றிக் கொள்ள வேண்டும். உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை, காய்கறிகளை, நட்ஸ் பொருட்களை தேடி தேடி சாப்பிட வேண்டும். செரிமான மண்டலத்துக்கு அதிக வேலை கொடுக்கக்கூடாது. இரவு நேரத்தில் அதிக உணவுகளை சாப்பிடக்கூடாது என்பது உள்ளிட்ட விஷயங்களில் நீங்கள் கவனமாகவும், உறுதியாகவும் இருக்க வேண்டும்.
குழந்தைப் பேறுக்கான முயற்சியில் இருக்கும் தம்பதிகள் நட்ஸ் பொருட்களை அதிகம் சாப்பிட வேண்டும். பாதாம், பிஸ்தா, பேரீட்சை ஆகியவை விந்தணு உற்பத்தி, ரத்த உற்பத்தி மற்றும் உடலுறவுக்கு தேவையான உறுதி ஆகியவற்றைக் கொடுக்கும். எனவே இவற்றை சாப்பிட்டாமல் தேவையற்ற கழிவு உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். குறிப்பாக பேரீட்சையில் மட்டும் என்னென்ன பலன்கள் இருக்கிறது என்பதை இங்கே தெரிந்து கொள்வோம்.
மேலும் படிக்க | கருத்தரிப்பு பிரச்சனைக்கு கணவர் காரணமா? மீள்வதற்கான டிப்ஸ்
பேரிட்சை ஏன் சாப்பிட வேண்டும்?
திருமண உறவு ஆரோக்கிமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள் பேரிட்சை சாப்பிட வேண்டும். இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் செரிமான அமைப்பை ஆரோக்கியமாக வைத்திருப்பது மட்டுமல்லாமல் உங்கள் விந்தணு எண்ணிக்கையையும் அதிகரிக்கிறது. ரத்த உற்பத்தியை அதிகரித்து, உங்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும். நரம்பு மண்டலங்கள் புத்துணர்ச்சியாக இருக்க உதவும்.
மூளை புத்துணர்ச்சி
மனச்சோர்வு மற்றும் மன அழுத்தம் ஆகிய பிரச்சனைகள் இருந்தாலும் உங்களின் திருமண உறவு சுமூகமாக இருக்காது. அதனால் அவற்றில் இருந்து விடுபடுவதற்கு நீங்கள் கட்டாயம் யோகா உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூடவே உணவு முறையிலும் மாற்றம் கொண்டு வரும்போது உங்களின் முயற்சிக்கு இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும். அத்தகைய முயற்சியில் இருக்கும் நீங்கள் பேரீட்சை சாப்பிடுவதையும் பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். இவை உங்களின் மூளையை புத்துணர்ச்சியாக்கி சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவும்.
சர்க்கரை கட்டுப்பாடு
சர்க்கரை நோயாளிகள் தங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவு உயரக்கூடாது என்ற எண்ணத்தில் பேரீச்சம்பழம் சாப்பிடுவதில்லை. ஆனால் அது உங்களுக்கு தீங்கு விளைவிக்காது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். பேரீட்சை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கை அளவு அதிகரிக்காது. அதேநேரத்தில், தீவிர சர்க்கரை நோயாளிகள் மருத்துவரை அணுகி அவரது முழு ஆலோசனையின்பேரில் சாப்பிடுவது இன்னும் சிறந்தது. உடல் ஆரோக்கியத்திற்காக பேரீட்சை நன்மை பயக்கும் என்றாலும், அவரவர் உடல் நலனுக்கு ஏற்ப மருத்துவரை அணுகி அவருடைய அறிவுரையின்பேரில் தேவையான அளவில் மட்டுமே சாப்பிட வேண்டும்.
மேலும் படிக்க | Health Alert: பழங்களுடன் இவற்றை சேர்த்து சாப்பிடாதீர்கள்: உணவு விஷமாய் மாறும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR