Golden Blood: உலகில் 43 பேருக்கு மட்டுமே இருக்கும் மிக அரிய Rh Null வகை இரத்தம்..!!
நம் வாழ்நாளில் இதுவரை நான்கு இரத்த வகைகளை (A, B, AB மற்றும் O) பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவை தவிர உலகின் மிக அரிதான ரத்த வகை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா?
நம் வாழ்நாளில் இதுவரை நான்கு இரத்த வகைகளை (A, B, AB மற்றும் O) பற்றி மட்டுமே கேள்விப்பட்டிருப்போம். ஆனால் இவை தவிர உலகின் மிக அரிதான ரத்த வகை உள்ளது என்பது உங்களுக்குத் தெரியுமா? விஞ்ஞானிகள் இதை தங்க ரத்தம் (Golden Blood) என்று அழைக்கிறார்கள். இது உலகில் 43 பேருக்கு மட்டுமே உள்ள மிக மிக அரிய வகை ரத்தம் ஆகும்.
இந்த அரிய வகை இரத்தத்தின் பெயர் 'Rhnul'. அரிதாக இருப்பதால், விஞ்ஞானிகள் இதற்கு 'கோல்டன் பிளட்' (Golden Blood) என்று பெயரிட்டுள்ளனர்.
தங்க இரத்தவகையில் Rh காரணி பூஜ்யமாக இருக்கும். அதாவது Rh-null. Rhnull ரத்தத்தின் சிவப்பு அணுக்களில் Rh புரதம் அறவே இருக்காது. இதனால், இந்த ரத்த வகையுடன் வாழ்பவர்களின் வாழ்க்கை எப்போதும், தலைக்கு மேல் கத்தி தொங்குவதைப் போல் தான். இந்த வகை இரத்தம் முதன்முதலில் 1961 ஆண்டு கண்டறியப்பட்டது. ஆஸ்திரேலிய கர்ப்பிணிப் பெண்ணின் இரத்தத்தை பரிசோதித்தபோது இந்த வகை ரத்தம் பற்றிய செய்தி வெளியானது.
ALSO READ | Health Alert! மறதி, குழப்பம் அதிகமாக இருக்கிறதா; Vitamin B குறைபாடு இருக்கலாம்!
Rh காரணி என்றால் என்ன?
Rh காரணி என்பது இரத்த சிவப்பணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் ஒரு சிறப்பு வகை புரதமாகும். இந்த புரதம் சிவப்பு இரத்த அணுக்களில் இருந்தால், இரத்தம் Rh பாஸிடிவ் என்றும் , இந்த புரதம் இல்லை என்றால் இரத்தம் Rh நெகடிவ் என்றும் கூறப்படுகிறது. இந்த புரதம் Rh ஆன்டிஜென் என்றும் அழைக்கப்படுகிறது.
இரத்தத்தில் உள்ள ஆன்டிஜென் என்றால் என்ன?
இரத்த ஆன்டிஜென்கள், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துகிறது. இது தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. ஆன்டிஜென் இல்லை என்றால், நமது நோயெதிர்ப்பு அமைப்பு வேலை செய்யாது. உடலுக்கு சபந்தம் இல்லாத பொருள் அல்லது கிருமி உடலுக்குல் வஃந்தால், அதனுடன் சண்டையிடுகிறது.
இதனால், தான் பி ரத்தப் பிரிவு உள்ளவர்களுக்கு ஏ வகை ரத்தம் செலுத்தினால், உடலுக்குள் வரும் ரத்த சிவப்பணுக்களை எதிரியாக நினைத்து நோயெதிர்ப்பு அமைப்பு தாக்கும். அதாவது உடலுக்குள் ஒரு போர் ஏற்படுவது போன்றது. இதன் காரணமாக அந்த நபர் கடுமையாக நோய்வாய்ப்படலாம் அல்லது இறக்கலாம்.
ALSO READ | நாக்கின் நிறமும் ஆரோக்கியமும்; ‘இந்த’ நிறங்கள் தீவிர நோயின் எச்சரிக்கை மணி!
'கோல்டன் பிளட்' என்ற பெயர் எப்படி வந்தது?
இப்போது கோல்டன் ப்ளட் பற்றி கூறுகையில் உலகளவில் இந்த இரத்தக் வகையை தானம் கொடுக்கும் நிலையில் 9 பேர் மட்டுமே உள்ளனர் என கூறப்படுகிறது. அதாவது, இது உலகின் மிக மிக அரிய வகை இரத்தம். இதனால்தான் இதற்கு தங்க ரத்தம் என்று பெயர் வந்தது. தங்க வகை இரத்தம் கொண்டவர்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதன் காரணமாக உடலில் ஹீமோலிடிக் அனீமியா, மற்றும் சோர்வு ஏற்படலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
ALSO READ | Omicron: ஒமிக்ரானில் இருந்து காக்கும் ‘5’ எளிய ஆயுர்வேத நடைமுறைகள்..!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR