சேப்பங்கிழங்குக் கீரையின் நன்மைகள்: நார்ச்சத்து, வைட்டமின் பி6, வைட்டமின் ஈ, பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனீசு என பல்வேறு சத்துக்கள் உள்ள சேப்பங்கிழங்கை அனைவரும் சாப்பிட்டு பயனடைந்திருக்கலாம். ஆனால், சேப்பங்கிழங்கு இலையை சாப்பிடுவதால் புரதம், இரும்புச்சத்து, துத்தநாகம், தாமிரம், மக்னீசியம் போன்ற நுண் ஊட்டச்சத்துகள் கிடைக்கிறது என்பது பலருக்கும் தெரியாது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சேப்பங்கிழங்கின் இலை, பாம்புக்கடி, தேள் கடி மற்றும் உணவு நச்சுத்தன்மை அடைதல் ஆகிய விஷத்தன்மையை முறிக்கும் தன்மையைக் கொண்டது. வலி நீக்கும் நிவாரணியாகவும், ரத்தக்கசிவு ஏற்படாமல் இருக்கவும் சேப்பங்கிழங்கு இலை உதவுகிறது.  


மருத்துவ குணம் அதிகம் கொண்ட சேப்பங்கிழங்கு இலையை வேக வைத்து சூப்பாக குடிக்கலாம், பக்கோடா செய்தும் சாப்பிடலாம். சேப்பங்கிழங்கு இலையில் நீரிழிவு நோயை அழிக்கும் ஆற்றல் அதிகம் இருக்கிறது. அதனால் நீரிழிவு நோயாளிகளுக்கும் இது சிறந்த மருந்தாக இருக்கிறது. 


இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவையும் கட்டுப்படுத்தும் தன்மை, சேப்பங்கிழங்கு இலையில் உள்ளது.  


மேலும் படிக்க | வெறும் வாசத்துக்கு மட்டுமல்ல, அழகையும் அம்சமாக்கும் ஜாதிபத்ரியின் அற்புத பலன்கள்


இரத்த அழுத்தம்  
இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதில் சேப்பங்கிழங்கு மிகவும் துரிதமாக செயல்படுகிறது. அதற்கு காரணம் இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஆகும். வாரம் ஒருமுறை சேப்பங்கிழங்கு இலைகளை உட்கொண்டு வந்தால் இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும்.


கொலஸ்ட்ரால் கட்டுப்பாட்டிற்கு சேப்பங்கிழங்கு கீரை
கொலஸ்ட்ரால் அளவு கட்டுக்குள் இருக்க, சேப்பங்கிழங்கு கீரையை சமைத்து சாப்பிடலாம். இந்தக் கீரையில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது.


இதய ஆரோக்கியம்
அதிக நார்ச்சத்து சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் வருவதற்கான ஆபத்து குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சேப்பங்கிழங்குக் கீரையில் நார்ச்சத்து அதிகளவு நிறைந்துள்ளது, எனவே இது உடலில் உள்ள கொழுப்பின் அளவையும் குறைக்கிறது. இதில் உள்ள பொட்டாசியம், மன அழுத்தத்தைப் போக்கவும் இதயத் துடிப்பைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது.


மேலும் படிக்க | யூரிக் அமிலத்தை இயல்பாய் கட்டுப்படுத்தும் சூப்பர் பானங்கள்! செலவில்லாமல் தீர்வு தரும் டிரிங்க்ஸ்


இரத்த சர்க்கரை கட்டுபாட்டிற்கு சேப்பங்கிழங்குக் கீரை
சேப்பங்கிழங்கில் இரண்டு வகையான கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன, அவை நார்ச்சத்து மற்றும் எதிர்ப்பு மாவுச்சத்து, அவை உடலில் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க நன்மை பயக்கும். சேப்பங்கிழங்கு இலைகளை சமைத்து சாப்பிடுவதன் மூலம் செரிமான செயல்முறையில் ஏற்படும் மாற்றம், ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிப்பதைத் தடுக்கும்.


எடை இழப்பு
தினசரி உணவில் சேப்பங்கிழங்கை சேர்த்துக் கொள்வது தேவையில்லை. ஆனால், அதன் கீரையை சேர்த்துக் கொள்ளலாம். சேப்பங்கிழங்குக் க்கீரை, ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க உதவும். இந்த காய்கறி செரிமான செயல்முறையை மெதுவாக்குவதால், நீண்ட நேரம் பசி உணர்வை தராது. இது அதிகப்படியான உணவு மற்றும் கூடுதல் கலோரிகளை உட்கொள்வதைத் தடுக்கிறது, எனவே உடல் எடை அதிகரிக்காது. 


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | எச்சரிக்கை! நுரையீரல் ரொம்ப வீக்கா இருப்பதை உணர்த்தும் ‘சில’ அறிகுறிகள்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ