Weight Loss Myths: தங்கள் உடல் எடையை குறைக்க வேண்டும் என விரும்பாதவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன. எல்லோருக்கும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதே ஆசை. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அந்த ஆர்வ கோளாறுகளால், மக்கள் உடல் பருமனை குறைக்க குறுக்குவழிகளைத் தேடுவதை நாம் அடிக்கடி பார்க்கிறோம். இந்த விவகாரத்தில், பல சமயங்களில் மக்களும் பல கட்டுக்கதைகளை நம்புகிறார்கள். அது போன்ற கட்டுக் தைகளுக்கு அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், உடல் எடையை குறைக்க மிக முக்கியமான விஷயம் உடற்பயிற்சி மற்றும் சரியான ஊட்டச்சத்தை சரியான அளவில் எடுத்துக்கொள்வது எனக் கூறுகிறார்.


உடல் பருமனைக் குறைப்பதற்கு முதலில் உணவு மற்றும் பாணங்களை குறைக்கின்றனர் என கூறிய டாக்டர் ரஞ்சனா சிங் இதன் காரணமாக அவர்கள்  உடல் பருமன குறையாது என்பதோடு, உடல் பலவீனமாகும் என்கிறார். எடை இழப்பு தொடர்பான இதுபோன்ற பல கட்டுக்கதைகள் உள்ளன. இது நீங்கள் தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.


ALSO READ | Protein deficiency: உடலில் புரத சத்து குறைபாட்டின் ஆபத்தான அறிகுறிகள்


நீங்கள் எடை இழக்க விரும்பினால் இந்த தவறுகளை செய்யாதீர்கள்


1. இனிப்பு சாப்பிடுவதை முற்றிலும்  தவிர்த்தல்


உடல் எடையை குறைக்க பெரும்பாலான மக்கள் சர்க்கரையை உட்கொள்வதை முற்றிலும் நிறுத்துகிறார்கள். எல்லா வகையிலும், அனைத்தி விதமான இனிப்பு வகைகலையும் உணவில் இருந்து நீக்குவது  என்பது அவ்வளவு சரியல்ல. உணவில் சர்க்கரையின் அளவு  குறிப்பிட அளவு சேர்வதும் முக்கியம். ஆனால் அதை  அளவிற்கு அதிகமானதாக இல்லாமல் சீரான முறையில் உட்கொள்வது முக்கியம்.


2. எடை இழப்பு சப்ளிமெண்ட் எடுத்துக் கொள்ளுதல்


எடை இழப்புக்கு நார் சத்து உள்ள உணவுகளை சாப்பிடுவதற்குப் பதிலாக பலர் எடை இழப்பு சப்ளிமெண்ட்ஸை (Weight loss supplement)எடுத்துக்கொள்வதை நாம் பார்க்கிறோம். அதன் அதிகப்படியான பயன்பாடு உடலுக்கு தீங்கு விளைவிக்கும். அதனால்தான் இயற்கையாக உடல் எடையை குறைப்பது நல்லது.


ALSO READ | விந்தணு குறையாமல் இருக்க இந்த ‘5’ உணவுகளை ஆண்கள் தவிர்க்க வேண்டும்..!


3. அதிகப்படியான உடற்பயிற்சி


ஜிம்மில் ஓடுவது அல்லது கடினமாக உழைப்பது உடல் எடையை குறைக்க உதவுகிறது என்று நினைத்து பலர் தவறு செய்கிறார்கள். உணவு நிபுணர் டாக்டர் ரஞ்சனா சிங் இது குறித்து கூறுகையில், உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் எடையை குறைக்கலாம். ஆனால் உடற்பயிற்சி செய்வதுடன் ஆரோக்கியமான உணவை சரியான அளவில் எடுத்துக்கொள்வது எடையை சமநிலையில் வைக்கிறது என்கிறார்.


4. உணவைத் தவிர்த்தல்


உடல் எடையை குறைக்க உணவு தவிர்ப்பது  (Meal skip)ஒருபோதும் உதவாது. சாப்பிடுவதையும் பானங்கள் அருந்துவதையும் கைவிடுவதன் மூலம் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். உடல் பருமனைக் குறைக்க, நீங்கள் அதிக கலோரிகள் உள்ள உணவை தவிர்த்து, சரியான நேரத்தில் உடற்பயிற்சி செய்வது தான் சரியான வழியாக இருக்கும் என கூறுகிறார். 


ALSO READ | குழந்தையின் மூளை ஜெட் வேகத்தில் இயங்க வேண்டுமா; இந்த ‘6’ உணவுகளை கொடுக்கவும்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR