இலவங்கப்பட்டை: நீரிழிவு நோய் முதல் எடை இழப்பு வரை.. அற்புதமான வீட்டு வைத்தியம்
Health Tips: இலவங்கப்பட்டை அதிக அளவு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள மசாலா என்பது பலருக்கு தெரிவதில்லை. இதன் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
Health Tips: நம் வீட்டு சமையறைகளில் பல மசாலாப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை உணவின் சுவையை அதிகரிப்பதுடன் நம் உடலின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். இவற்றை தினமும் நம் உண்வில் பயன்படுத்தி வந்தால், இவற்றின் நற்குணங்களும் ஆரோக்கிய பண்புகளும் நம் உடலின் ஆரோக்கிய மேம்பாட்டுக்கு உதவியாக இருக்கும்.
இலவங்கப்பட்டையின் நன்மைகள் (Health Benefits of Cinnamon):
நாம் அடிக்கடி சமையலில் பயன்படுத்தும் மசாலாக்களில் இலவங்கப்பட்டையும் ஒன்றாகும். இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், நோய்களைக் குணப்படுத்தவும் உதவுகிறது. பெரும்பாலான வீடுகளில் இது உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இது அதிக அளவு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ள மசாலா என்பது பலருக்கு தெரிவதில்லை. இலவங்கப்பட்டையின் சில ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.
வீக்கம், வலி மற்றும் சிவத்தலை நீக்குகிறது (Home Remedy For Body Pain)
இலவங்கப்பட்டையில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இதன் காரணமாக உடலின் எந்தப் பகுதியிலும் வீக்கம் அல்லது வலி இருந்தாலும், இலவங்கப்பட்டையைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனையிலிருந்து விடுபடலாம்.
நீரிழிவு அறிகுறிகளைக் குறைக்கிறது (Home Remedy For Diabetes)
உடலில் அதிகரிக்கும் இரத்த சர்க்கரையை குறைப்பதில் இலவங்கப்பட்டை மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இலவங்கப்பட்டையைப் பயன்படுத்துவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையத் தொடங்குகிறது.
உடல் பருமனை குறைக்க உதவும் (Home Remedy For Weight Loss)
உடலில் அதிகரித்து வரும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க இலவங்கப்பட்டை மிகவும் உதவியாக இருக்கிறது, இதன் காரணமாக உடல் பருமனை குறைப்பதிலும் இது உதவுகிறது.
மேலும் படிக்க | உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் அஞ்சறைப் பெட்டி அதிசயம்: ட்ரை பண்ணி பாருங்க
இருமலில் நிவாரணம் தரும் (Home Remedy For Cough)
இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இலவங்கப்பட்டை உட்கொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இருமல் இருந்தால் இலவங்கப்பட்டை பொடியை தேனுடன் சேர்த்து சாப்பிடலாம். இதனால் இருமல் பிரச்சனை நீங்கும்.
தலைவலியில் நன்மை (Home Remedy For Headache)
தலைவலி பிரச்சனை உள்ளவர்கள் இலவங்கப்பட்டையை பயன்படுத்தலாம். இதற்கு இலவங்கப்பட்டை இலைகளை அரைத்து பேஸ்ட் செய்து, இந்த பேஸ்ட்டை தலையில் தடவினால் தலைவலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.
புற்றுநோய் தடுப்பு (Home Remedy For Cancer Prevention)
இலவங்கப்பட்டை புற்றுநோயை எதிர்க்கும் தன்மை கொண்டது. இது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுக்கிறது. தினமும் இலவங்கப்பட்டையை உட்கொள்வது புற்றுநோயில், குறிப்பாக வயிற்று புற்றுநோயில் நன்மை பயக்கும்.
முகப்பருவை குறைக்கும் (Home Remedy For Skin Care)
இலவங்கப்பட்டை சருமத்திற்கு நன்மை பயக்கும். இது முகப்பருவை உண்டாக்கும் பாக்டீரியாக்களை குறைக்கிறது. முகப்பருவுக்கு இலவங்கப்பட்டை மாஸ்கை உருவாக்க, மூன்று தேக்கரண்டி தேனை ஒரு தேக்கரண்டி இலவங்கப்பட்டை பொடியுடன் கலந்து பேஸ்ட் செய்யுங்கள். இதை தடவி 10 நிமிடங்கள் அப்படியே விடவும். பின்னர் அதை கழுவவும்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் (Home Remedy For Blood Pressure)
கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் இலவங்கப்பட்டை உதவுகிறது. மேலும் இது இதயப் பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.
(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | 60 வயதுக்காரரும் உடல் எடையை வேகமாக குறைக்கலாம்! இந்த ‘ஸ்பெஷல்’ வழி இருக்கு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ