நரம்பு மண்டலம் முதல் எலும்புகள் வரை.... வியக்க வைக்கும் கம்பு என்னும் சிறுதானியம்
அரிசி, கோதுமைக்கு பதிலாக குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பல வகைகளில் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களில் ஒன்று கம்பு. இந்த கம்பு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கம்பில் நார்ச்சத்து, புரதம் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளன.
Pearl Millet Health Benefits: அரிசி, கோதுமைக்கு பதிலாக குளூட்டன் அல்லாத சிறுதானியங்களை உணவில் சேர்த்துக் கொள்வது பல வகைகளில் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து மிக்க சிறுதானியங்களில் ஒன்று கம்பு. இந்த கம்பு தரும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கம்பில் நார்ச்சத்து, புரதம் பல்வேறு விட்டமின்கள் நிறைந்துள்ளன. கம்பில் உள்ள அதிக அளவிலான புரதம், உடலிற்கு வலுவை அளிக்கிறது. 100 கிராம் கம்பில் கிட்டத்தட்ட 15 கிராம் அளவிற்கு புரத சத்துக்கள் நிறைந்துள்ளதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். அதோடு குறைந்த அளவு கொழுப்பு கொண்ட கம்பு உடல் பருமனை குறைப்பதிலும், கொலஸ்ட்ராலை எரிப்பதிலும் மிகவும் நன்மை பயக்கும்
கம்பை, பலவிதங்களிலும் சமைக்கலாம். இட்லி, தோசை, பனியாரம் என விதவிதமாய் சமைத்தாலும், பாரம்பரியமாய் செய்யப்படும், கம்பமங்கூழ், புட்டு, ரொட்டி ஆகியவை எண்ணெய் இல்லாமல் சமைக்கப்படுபவை. எனவே, இவை உடலுக்கு மிகவும் நன்மை பயப்பவை.
அரிசி கோதுமையை விட கம்பில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. இதில் அதிக அளவு நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது உடல் ஆரோக்கியத்தை (Health Tips) மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், இதை அடிக்கடி சாப்பிடுவதால் பல கடுமையான உடல்நலப் பிரச்சினைகளிலிருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
கம்பை அடிக்கடி உணவில் சேர்ப்பதால் கிடைக்கும் சில ஆரோக்கிய நன்மைகள்
கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தும் கம்பு
கம்பில் நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. இது கொழுப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இது கெட்ட கொலஸ்ட்ராலை (LDL) குறைத்து நல்ல கொழுப்பை (HDL) அதிகரிக்கிறது. கம்பு ஆன்டிஆக்ஸிடன்ட்களையும் கொண்டுள்ளது. இது இதயத்திற்கு நன்மை பயக்கும்.
நரம்பு மண்டலத்தை வலுவாக்கும் கம்பு
கம்பில் அதிக அளவு லெசித்தின் உள்ளது. இது நரம்பு மண்டலத்தை வலுப்படுத்த மிகவும் அவசியம். மேலும், கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து பார்வையை தெளிவாக்கும்.
மேலும் படிக்க | இன்பமான பாலியல் வாழ்க்கை வேணுமா? இந்த ஊட்டச்சத்துகள் முக்கியம் - உடனே நோட்ஸ் எடுங்க!
எலும்புகளை பலப்படுத்தும் கம்பு
கம்பில் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன, இது எலும்புகளை வலிமையாக்குகிறது. இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவு போன்ற எலும்பு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தைக் குறைக்கிறது. இது தவிர, கம்பு எலும்புகளின் வளர்ச்சியையும் வலிமையையும் அதிகரிக்கிறது.
இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் கம்பு
கம்பின் கிளைசெமிக் இண்டெக்ஸ் (ஜிஐ) அரிசி கோதுமையை விட மிகக் குறைவு. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவாக அமைகிறது. கம்பில் உள்ள நார்ச்சத்து இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
எடை இழப்புக்கு உதவும் கம்பு
கம்பு உணவுகள் எடை இழப்புக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதில் உள்ள நார்ச்சத்து, நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைத் தரும். இதனால் சாப்பிடும் எண்ணம் அடிக்கடி வராது. இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் கலோரிகளை வேகமாக எரிக்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க விரும்புவோர் கண்டிப்பாக கம்பு உணவுகளை அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
செரிமானத்தை மேம்படுத்தும் கம்பு
கம்பில் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. எனவே, மலச்சிக்கல், வாயு மற்றும் பிற வயிற்றுப் பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெற உதவுகிறது. நார்ச்சத்து இருப்பதால், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் வயிற்றை நன்கு சுத்தம் செய்கிறது.
தாய்ப்பால் சுரக்க உதவும் கம்பு
கருவுற்ற பெண்களும், பாலூட்டும் தாய்மார்களும் கம்பை அவ்வப்போது உணவில் சேர்த்துக் கொண்டால், உடல் பலவீனம் நீங்கும். அதோடு, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கம்பு, தாய்ப்பால் சுரக்க உதவும். சத்துமிகுந்த உணவுகள் பட்டியலில் முதலில் உள்ள கம்பு, ஆற்றல் மிகுந்த சத்துகளை கொண்டிருப்பதால் தாய்க்கும் சேய்க்கும் நன்மை பயக்கும் உணவாக இருக்கும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.
மேலும் படிக்க | நெருங்கிய உறவில் திருமணம் செய்தால் குழந்தைகளுக்கு இந்த பாதிப்பு வரலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ