அன்னாசிப்பத்தின் எண்ணில்லா ஆரோக்கிய நன்மைகள்
அன்னாசி பழம் உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்குத் தெரியுமா?
புதுடெல்லி: கொரோனா வைரஸ் உச்சத்தில் இருந்தபோது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவது குறித்து சுகாதார நிபுணர்கள் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கு, நல்ல உணவு, பழங்கள் சாப்பிட அறிவுறுத்தப்பட்டது, ஆனால் அன்னாசி நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா? நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளைத் தருகிறது. அன்னாசிப்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நார்ச்சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மாங்கனீஸ் மற்றும் ஃபோலேட் ஆகியவை நிறைந்துள்ளன. அதன் பலன்களை (அன்னாசிப்பழத்தின் நன்மைகள்) காண்போம்.
அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
1. உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்: அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. இது உயர் இரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் உள்ள நோயாளிகள் அன்னாசிப்பழத்தை உட்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | புற்று நோய் அண்டாமல் இருக்க ‘இந்த’ மசாலாவை உணவில் தினமும் சேர்க்கவும்!
2. எடை இழப்புக்கு உதவியாக இருக்கும்: எடையைக் குறைக்கவும் அன்னாசி உதவுகிறது. புளிப்பு-இனிப்பு நிறைந்த இந்தப் பழத்தில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகளின் அளவு மிகவும் குறைவாகவும் இருக்கும். இதனால் வயிறு நீண்ட நேரம் நிரம்பியதாக இருக்கும். இதனால் அதிக உணவு உண்ண முடியாமல் உடல் எடை குறைகிறது.
3. வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும்: வயிறு தொடர்பான பல பிரச்சனைகளை நீக்குவதில் அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஒரு ஆராய்ச்சியின் படி, அன்னாசிப்பழம் சாப்பிடுவது செரிமானத்தை மேம்படுத்துகிறது, அதே போல் லூஸ் மோஷன் பிரச்சனையையும் நீக்குகிறது.
4. கண்களுக்கு நன்மை பயக்கும்: அன்னாசிப்பழத்தில் வைட்டமின்-ஏ அதிகம் இருப்பதால், கண்களுக்கும் நன்மை பயக்கும். அன்னாசிப்பழம் எலும்புகளுக்கும் நன்மை பயக்கும்.
5. பற்களுக்கு நன்மை பயக்கும்: ஈறுகள் மற்றும் பற்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன் காரணமாக, பற்கள் வலுவடைந்து, மூட்டுவலி நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஈறுகளில் வீக்கத்தைக் குறைக்க அன்னாசிப்பழம் மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் பரிந்துரையாகவோ அல்லது சிகிச்சைக்கான மாற்றாகவோ இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.)
மேலும் படிக்க | போலி பெருங்காயத்தால் பெரிய பாதிப்பு ஏற்படும்: போலியை கண்டுபிடிப்பது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR