சுகர் லெவல் முதல் வெயிட் லாஸ் வரை... வெறும் வயிற்றில் இலவங்கப்பட்டை நீர் ஒன்றே போதும்..!
Health Benefits of Cinnamon Water: இலவங்கப்பட்டை என்னும் அற்புத மசாலா, உணவிற்கு அருமையான மணத்தையும் சுவையையும் கொடுப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது.
இந்திய மசாலாக்கள் அனைத்துமே, மருத்துவ குணங்கள் நிறைந்தவை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு அற்புத மருத்துவ குணங்கள் உண்டு. அந்த வகையில், இலவங்கப்பட்டை என்னும் அற்புத மசாலா, உணவிற்கு அருமையான மணத்தையும் சுவையையும் கொடுப்பதோடு, ஏராளமான ஆரோக்கிய நன்மைகளையும் அள்ளிக் கொடுக்கிறது. அதிலும் காலையில் எழுந்தவுடன், இலவங்கப்பட்டை போட்டு கொதிக்க வைத்த நீரை அருந்துவதால், கிடைக்கும் நன்மைகள் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். காலையில் வெறும் வயிற்றில் குடிக்கும் போது, வியக்கத்தக்க வகையில் அற்புத பலன்களை கொடுக்கிறது என்று உணவியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வெறும் வயிற்றில் இலவங்கபட்டை நீர் அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள்
காலையில் வெறும் வயிற்றில் முதலில், இலவங்கப்பட்டை நீர் அருந்துவதால் உடலில் மெட்டபாலிஸம் அதிகரித்து, உடல் பருமன் குறைவது முதல் சுகர் லெவலை கட்டுப்படுத்துவது, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது என இதன் நன்மைகளை (Health Tips) பெரிய பட்டியலிடலாம்.
சுகர் லெவலை கட்டுப்படுத்தும் இலவங்கபட்டை நீர்
இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தும் ஆற்றல் கொண்ட இலவங்கப்பட்டை நீரை வெறும் வயிற்றில் அருந்துவது, நீரிழிவு நோயாளிகளுக்கு, குறிப்பாக இன்சுலின் எதிர்ப்பு அல்லது டைப் 2 நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நன்மை பயக்கும் என ஆய்வுகள் கூறுகின்றன. இலவங்கப்பட்டையில் உள்ள சேர்மங்கள் செரிமான மண்டலத்தில் ஏற்படும் கார்போஹைட்ரேட்டுகளின் முறிவை மெதுவாக்குகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.
குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இலவங்கபட்டை நீர்
இலவங்கப்பட்டை நீர் அருந்துவதன் மூலம் நாளைத் தொடங்கினால், குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வயிறு உப்புசம், வாயு மற்றும் அஜீரணம் போன்ற செரிமான பிரச்சனைகளை போக்க இலவங்கப்பட்டை காலம் காலமாக பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. அதன் ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் குடலுக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அகற்றுகிறது.
மேலும் படிக்க | முகத்தில் தோன்றும் ‘இந்த‘ மாரடைப்பு அறிகுறிகளை ஈஸியா எடுத்துக்காதீங்க.!
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
இலவங்கப்பட்டை சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும். நாள்பட்ட அழற்சி கீல்வாதம், இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்கு காரணமாகிறது. எனவே, காலையில் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடிப்பதன் மூலம், அழற்சியின் அளவைக் குறைக்கவும், அழற்சி நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவும்.
உடல் பருமனை கரைக்கும் இலவங்கபட்டை நீர்
இலவங்கப்பட்டையில் சின்னமால்டிஹைடு உள்ள நிலையில், இதனை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால், உங்கள் வளர்சிதை மாற்றம் அதிகரிக்கும். இதனால் நாள் முழுவதும் அதிக கலோரிகளை எரிக்கலாம். உணவு வேதியியல் இதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், சின்னமால்டிஹைட் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துகிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த இலவங்கபட்டை நீர்
இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க, ஆன்டிஆக்ஸிடன்ட் அவசியம். இலவங்கப்பட்டை ஆன்டிஆக்ஸிடன்ட்களால் நிரம்பியுள்ள நிலையில், இது உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதற்கு உதவும். காலையில் இலவங்கப்பட்டை தண்ணீரை முதலில் குடிப்பது, நோயற்ற வாழ்வைக் கொடுக்கும். இலவங்கப்பட்டையில் உள்ள பாலிபினால்கள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் பினாலிக் அமிலம் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள், நோய்களை உருவாக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்க உதவுகின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இலவங்கபட்டை நீர்
இலவங்கப்பட்டையின் ஆண்டிமைக்ரோபியல் மற்றும் ஆன்டிவைரல் பண்புகள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் உடல் தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும் நோயெதிர்ப்பு மண்டலம் வலுப்படும். தினமும் வெறும் வயிற்றில், இலவங்கப்பட்டை தண்ணீரை உட்கொள்வது, சளி, ஜல்தோஷம் மற்றும் காய்ச்சல் போன்ற பொதுவான நோய் பாதிப்புகள் பெரிய அளவில் குறையும்.
பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை. இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ZEE MEDIA இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)
மேலும் படிக்க | தினமும் காலையில் பீட்ரூட் ஜூஸ்... உச்சி முதல் பாதம் வரை நன்மைகள் ஏராளம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ